Thursday, January 29, 2015

பிரபஞ்சன் அவர்களின் பதில்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவரின் பதில்:
சமூக உணர்வுள்ள எழுத்தாளர் என்ற முறையில் சமகால சமூக தமிழ்ச் சூழலின் பிரச்சனைகளாக நீங்கள் கருதுபவை?
டாகடர் ராமதாஸ் தலித் மக்களுக்கு எதிராக இடைநிலை சாதி அமைப்புகளை திரட்டுகிறார். இது மிகவும் ஆபத்தானது. காதலை இவர்கள் எதிர்ப்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் நடைபெறும் தவறுகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக காதல் திருமணங்க்ளை எதிர்ப்பது தவறு.
இன்னொருபுறம் பாஜக மதவாதத்தையும் பண்பாட்டு திணிப்பையும் மேற்கொள்ள பார்க்கிறது. இதை எதிர்க்க வேண்டிய திராவிட கட்சியான திமுக தன் அடிப்படையை இழந்து நிற்கிறது. தமிழ் தேசியவாதிகள் தெலுங்கு கன்னடம் பேசும் சாதியினரை தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கிறார்கள். இது அடிப்படையிலேயே தவறானது. தமிழர்களின் பண்பாட்டுக்கு அவர்களின் பங்கு அளப்பரியது.
திருமாவளவன் போன்ற தலித் தலைவர்கள் சமூக மாற்றத்தை முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் தலித் மக்களும் அருந்ததியர்களின் விடுதலை பற்றி கவலை படுவதில்லை. ஒரு தலித் தலைவரே அருந்ததியர்களின் உள் இட ஓதுக்கிட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் அருந்ததியர் விடுதலையை நாம் ஆதரிக்க வேண்டும். 
அதே போல எல்லா சாதி ஆண்களாலும் ஒடுக்கப்படுபவளாக பெண் இருக்கிறாள். பெண் விடுதலை இல்லாமல், ஒரு சமூகம் மேன்மையுறாது.

No comments:

Post a Comment