Tuesday, December 26, 2017

2ஜியில் குற்றச்சதி எதுவும் நடக்கவில்லை என நீதிமன்றம் சொல்லிவிட்டது.

Bala Arun
Via facebook
2017-12-24

கேள்வி: 2ஜியில் குற்றச்சதி எதுவும் நடக்கவில்லை என நீதிமன்றம் சொல்லிவிட்டது. ஆனாலும் சிலர்,  வினோத் ராய் அவர்கள் கணக்குப்படி அரசுக்குப் பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்களே? இதனால் முதலாளிகளுக்குத் தான் இலாபமாமே?

பதில்: இதை விட உண்மைக்கு புறம்பானது எதுவும் இருக்க முடியாது.

2ஜி அலைவரிசையை முதலில் வருபவர்களுக்காக முன்னுரிமை அடிப்படையில் ராஜா விற்ற விலை ரூபாய் பத்தாயிரம் கோடி. வினோத் ராயோ, 2ஜியை ராசா ஒரு இலட்சத்தி எழுபதினாயிரம் கோடி கூடுதலான விலைக்கு விற்றிருக்க வேண்டும்  என்றார்.

ஆனால் அதற்கு அடுத்த வருடமே ராசாவின் விற்பனையை ரத்து செய்து விட்டு, மறு ஏலம் நடத்தியதில் ராசா விற்றதை விடவும் ஆயிரங் கோடி குறைவான விலைக்கே ஏலம் போனது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 3ஜி, 4ஜி போன்ற பல முன்னேறிய தொழில் நுட்பங்களுக்கும் கூட, பலமுறை மறு ஏலங்கள் விட்டுப் பார்த்தும்  வினோத் ராய் கதை விட்ட விலைக்கு யாரும் ஏலம் கேட்க முன் வரவில்லை. கடை விரித்தார்கள்கள்; கொள்வாரில்லை! க‌டைசியில் கிட்டத் தட்ட ராசா 2ஜியை விற்ற விலைக்கே தான் விற்க நேர்ந்தது!

சரி ஒரு பேச்சுக்கு, வினோத் ராய் சொன்ன ஒரு இலட்சத்தி என்பதினாயிரம் கோடி ரூபாய் விலையில் 2ஜியை அரசு விற்று, அதை சில நிறுவனங்கள் வாங்க முன் வந்ததாக வைத்துக் கொள்வோம். அந்த பெருந்தொகையை அரசுக்குக் கொடுத்த நிறுவனங்கள், நட்டத்திற்கா செல்பேசி சேவையை  விற்றிருப்பார்கள்? அந்த ஒரு இலட்சத்தி என்பதினாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குறைந்தது 40% மார்ஜின் வைத்து,  கிட்டத் தட்ட இரண்டரை இலட்சம் கோடி ரூபாயை மக்களிடம் கட்டணமாக வசூலித்திருப்பார்கள். பெரிய இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஆகக் குறைந்த இலாப சதவிகிதமான் 10%-ஐ வைத்து கணக்கிட்டுப் பார்த்தால், இது அந்த நிறுவனங்களுக்கு 25,000 கோடி அதிகமான இலாபத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கும்.

ஆனால் மக்களுக்கோ கிட்டத் தட்ட 17 மடங்கு செல்பேசி கட்டணத்தை அதிகரித்திருக்கும். நீங்கள் ரூ.300க்கு மாதம் செல்பேசி பயன்படுத்துபவராக இருந்தால், அதே பயன்பாட்டிற்கு மாதம் ரூ.5000 செலவு செய்ய நேரிட்டிருக்கும்!!! நல்ல வேளை அப்படி எதுவும் நடக்க வில்லை.

இப்படி, ராசாவின் திட்டத் தால் தொலைத் தொடர்பு சேவைகளுக்கான் கட்டணங்கள் குறைந்தன. அதனால் சாதாரண‌ மக்கள் பலரும் செல்பேசிகளைப் பயன்படுத்த முடிந்தது. தொழில், பொருளாதாரம் பெருகியது. 17 மடங்கு விலை கூடியிருந்தால், பெரும் பணக்காரர்களும், பெரு நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமே செல்பேசி பயன்படுத்தி இருப்பார்கள். செல்பேசி இல்லாத வாழ்க்கையை ஒருமுறை நினைத்துப் பாருங்கள்!

ஒரு ஒப்பீட்டிற்காக பெட்ரோல் விலையை எடுத்துக் கொள்வோம். கச்சா எண்ணை உலகம் முழுவதும் ஒரே விலையில் விற்கப்படுகிறது. அதை சுத்திகரித்து, வரி விதித்துச் சந்தைப் படுத்தும் விலை தான் அந்தந்த நாட்டைப் பொறுத்தது. அதே போல் அலைவரிசை உரிமை என்பது எல்லா நாட்டிலும் விலையில்லா பொருள் தான். உபகரணங்களும் உலகம் முழுவதும் கிட்டத் தட்ட ஒரே விலைதான். அரசு அலைவரிசை உரிமைக்கு கோரும் விலை, சந்தைப் படுத்தும் விலை தான் அந்தந்த நாட்டைப் பொறுத்தது.

ராசாவின் புண்ணியத்தில் உலகிலேயே தொலைத் தொடர்பு சேவைகளுக்கான கட்டணத்தில் 6-வது விலை குறைந்த நாடாக இருக்கும் இந்தியா, பெட்ரோல் விலையில் 91ம் இடத்தில் இருக்கிறது!!!

இப்போது சொல்லுங்கள்,
1) ராசாவின் 2ஜி அனுகுமுறையால் மக்களுக்கு நல்லதா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நல்லதா?

2) அதே அனுகு முறை, அரசு வரி/கட்டணம் அளவுக்கதிகமாக இருக்கும் பெட்ரோலியம் போன்ற மற்ற பொருட்களுக்கும் இருந்தால் மக்களுக்கு நல்லதா? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நல்லதா?

3) 2ஜி ஊழல் கதை கட்டிவிட்டு 7 வருடம் கோலோச்சியவர்கள், இன்றும் ஆணித் தரமான நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத வேத விற்பனர்கள், ஸ‌ன்ஸ்கார ஸனாதன சதுர்வர்ண சதுர்வேத தர்மப் பரிபாலன ஶ்ரீலஶ்ரீ மார்க்சிஸ்ட் பெரியவாள்கள் எல்லாம் எந்த காரணத்தினால் உந்தப் படுகிறார்கள்?

https://m.facebook.com/story.php?story_fbid=10210025672614656&id=1121405403

No comments:

Post a Comment