Thursday, December 28, 2017

மனைவியின் அழகை ரசிக்க உங்கள் மனதை பழக்க வேண்டும

டாக்டர். Sarav Urs
Via facebook
2017-12-28

ஏற்கனவே இதை பற்றி எழுதிருக்கேன். ஆனாலும் பலர் இதே பிரச்சனை குறித்து கேட்பதால் ரிப்பீட்டு....

எனக்கு அழகான செக்ஸியான பெண்களை பார்த்தால் நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு மனைவியிடம் முடியவில்லைன்னு சொல்றீங்க. சொல்லும் போதே நல்லா தெரியுது உங்களுக்கு மற்ற பெண்கள் கிளர்ச்சி அளிப்பதை போல உங்கள் மனைவியால் அளிக்க முடியவில்லை என்பது.

சின்ன வயசில் இருந்து கூட வளர்ந்த பெண்ணை அவளுடைய எல்லா 'தவறுகளுடன்' பார்க்கும் ஒருத்தனுக்கு பெரிதாக ஈர்ப்பு இருக்காது. முதல் பார்வையில் ஒரு பெண்ணை ரொமான்ஸ் மெட்டீரியலாக மட்டும் பார்ப்பவனுக்கு அவள் பேரழகியாக தெரிவாள். பார்த்து பழகிய பின் அவளுடைய குணம், நடை, உடை, பழக்கவழக்கங்கள் என பலவற்றில் நமக்கு பிடிக்காதவை இருக்கும். 'குற்றம்' தெரியும். அதனால் மொத்தமாக பார்க்கும் போது அவள் செக்சுவலாக உங்களை ஈர்க்காமல் போக வாய்ப்புள்ளது.

அதே போல மற்றொருவர் கேட்ட கேள்வியில் சுய இன்பத்தில் சரியாக இருக்கு ஆனால் மனைவியிடம் முடியவில்லை என்கிறார். இங்கேயும் கிட்டத்தட்ட அதே பிரச்சனை. சுய இன்பம் பிடித்த பெண்களை கற்பனை செய்வது அல்லது பிடித்த வகையில் வீடியோ பார்ப்பது என மனசுக்கு பிடித்தமானதாக இருக்கும். உதாரணமாக பெரிய மார்பகம் உள்ள பெண்ணை கற்பனை செய்யலாம் அல்லது தேடிபிடித்து வீடியோவில் பார்க்கலாம். ஆனால் கண் முன் இருக்கும் ரியாலிட்டி பெண்ணிடம் சிறிய மார்பகம் இருந்தால் உங்களுக்கு கிளர்ச்சி கிட்ட வாய்ப்பில்லாமல் போகலாம்.

எப்படி சரி செய்வது? உங்கள் மனதிடம் தான் பிரச்சனை. உங்கள் மனைவியின் அழகை ரசிக்க உங்கள் மனதை பழக்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு பின் எந்த பெண்ணிற்கும் பழைய அழகும் வனப்பும் இருக்காது. அவருடைய செக்ஸ் சம்பந்தமான செயல்கள், நடவடிக்கைகள் அனைத்தும் உங்களுக்கு அத்துபடி ஆகி இருக்கும். எதுவும் புதிதாக இருக்காது எதுவும் உங்களை ஈர்க்காது. அதனால் புதிய வழிமுறைகளை முயற்சி செய்யலாம். புதிய இடங்களை தேர்வு செய்து செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.

வீட்டிலேயே கிச்சன், பாத்ரூம், பூஜை??!! அறைன்னு வித்தியாசமா ட்ரை பண்ணலாம். பெட்டை விட்டுட்டு சோபா, சேர்ன்னு முயற்சிக்கலாம். செக்ஸ் பொஸிஷன்களை மாற்றலாம். வழக்கமாக நீங்கள் செய்வது Miscellaneous பொசிஷன். Doggy, cup and saucers, cowboy, reverse cowboy, blowing, cuddling, dry sex, 69 இதெல்லாம் என்னான்னு கூகுள் செய்து முயற்சி செய்யவும். ஏதாவது பிக்கப் ஆனால் அப்படியே நூல் பிடித்து ஏறவும்.

வீடு தவிர்த்த புது இடங்கள் அதிக ரொமான்ஸ் மூட் கொடுக்கும். ஆம்னி பஸ்சில் பெர்த் போட்டு 'பயணி'ப்பது. ரயிலில் தனி கோச் எடுத்து 'பயணி'ப்பது. யாருமில்லா கோயில்களுகு சென்று மூக்கும் மூக்கும் உரசிக் கொண்டு ஈஷிப்பது, தெரியாத ஊர்களில் ஏதாவது பார்க் பக்கமாக சென்று கை, இடுப்பு, புத்தம் உரசிக்கொண்டு நடப்பது எல்லாம் அன்றைய இரவையோ பகலையோ பிரகாசிக்க செய்யும்.

இவை அல்லாமல் மனம் மற்றும் உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்யவும். நல்ல உணவுகளை உண்ணவும். ஆல்கஹால், சிகிரட் போதை வஸ்துக்களை தவிர்க்கவும். 'லபூப் கபீர்', அஸ்வகந்தா போன்ற இயற்கை மருந்துகளை எடுக்கலாம். சம்பாரிப்பது அனைத்தும் என்ன செய்றோம்ன்னே தெரியாமல் செலவு செய்யாமல் கொஞ்சம் பயணத்துக்கு ஒதுக்கலாம்.

கடைசியாக sidenefil citrate போன்ற மருந்துகள் ஒரு உத்வேகத்திற்கு எடுப்பதால் தவறு இல்லை. உங்கள் மருத்துவர் பரிந்துரித்தால் மட்டும் எடுங்கள். ஆனால் அவற்றில் பக்க விளைவு அதிகம் அதை விட சுகம் பிடித்து போனால் விடாமல் இருக்க வாய்ப்பும் அதிகம். அதனால் கவனமாக தேவை அறிந்து பயன்படுத்தலாம். மனைவியிடம் நெருங்குகையில் கற்பனை குதிரையை தட்டி விட்டு பிடித்த பெண்ணாக உருவகப்படுத்தி மூளையை மயக்குவதில் தான் சூட்சுமம் இருக்கிறது. மனதை பழக்கவும்.

நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு நன்றாக பழகியதால் புளித்து போன உங்கள் மனைவி, வேறு ஒருவருக்கு புதிய ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட 'செம்ம கட்டை' தான். உங்களை அவரால் கிளர்ச்சி அடைய வைக்காமல் இருக்கலாம் ஆனால் வேறு ஒருவரை பார்த்த உடன் வீழ்த்த முடியும். எனவே அப்படி எதுவும் நடக்காமல் இருக்க குட்டிகரணம் அடிச்சாவது வாழ்க்கையை 'வாழுங்கள்'.

https://m.facebook.com/story.php?story_fbid=1972475446102542&id=100000203163250

No comments:

Post a Comment