Saturday, December 23, 2017

2G: ஆதாரம் இல்லை என்பதல்ல, ஆதாரம் தேடுவதற்கான முகாந்திரமே இல்லை

ரவிசங்கர் அய்யாகண்ணு
Via facebook
2017-12-23

2G தீர்ப்பு எளிய மொழியில்:

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்பது தான் வழக்கு. ஆனால், சித்தப்பாவுக்கு மீசை முளைக்காவிட்டாலும் அவர் சித்தப்பா தான். சித்தப்பா எங்கே என்று நீதிபதி கேட்கிறார்.

அதாவது, சங்கர ராமன் கொலை வழக்கில் சங்கர ராமன் செத்தார். மானைச் சுட்டுக் கொன்ற வழக்கில் மான் செத்தது. இவர்களை யார் கொன்றார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவ முடியவில்லை என்பது வேறு சிக்கல். ஆனால், இவர்கள் செத்தார்கள் என்பது உண்மை.

2G வழக்கை ஊழல் என்று சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவு இழப்பை ஏற்படுத்தினார்கள் என்று முதலில் நிறுவ வேண்டும். அதற்குப் பிறகு யார் எவ்வளவு இலஞ்சப் பணம் வாங்கிக் கொண்டு என்ன மாதிரியான முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்பதை நிறுவ வேண்டும். இந்த வழக்கில் இழப்பும் இல்லை. எடுத்த முடிவுகள் அனைத்தும் அன்றைய கொள்கைப்படி அனைத்து அரசுத் துறைகளையும் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்டுள்ளன. எனவே முறைகேடும் இல்லை. அதற்கு யாரும் இலஞ்சப் பணம் வாங்கிய ஆதாரமும் இல்லை.

எனவே, ஆதாரம் இல்லை என்று விடுவிக்கவில்லை. ஆதாரம் தேடுவதற்கான முகாந்திரமே இல்லை என்று தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஊழலே இல்லை என்பது தான் தீர்ப்பு.

https://www.facebook.com/ravidreams/posts/10157075684083569

No comments:

Post a Comment