Sunday, December 31, 2017

68 வயது குடிகார நோயாளி

மு. செ. பாதுஷா
Via facebook
2018-01-03

68 வயது குடிகார நோயாளி:

இது ரஜினியோட அரசியல் பிரவேசம் அல்ல. லதா ரஜினியோடது.

"கிடா விருந்து வைக்க மாட்டேன், சோ இல்லாதது பெரிய இழப்பு" போன்ற வாக்குமூலங்களிலிருந்து அவர் குறிப்பிடுவது எந்த வகையான ஆன்மீகம், யாருக்கான அரசியல் என்பதை விளங்கிக்கொள்ள பெரிய அரசியல் அறிவெல்லாம் தேவையில்லை. ரஜினியோட இந்த "ஆன்மீக அரசியல்" நிச்சயமாக நமக்தானதல்ல.

பள்ளி இடத்துக்கு, மாநகராட்சி கடைக்கு,
வாடகை தராமல் ஏமாற்றும் லதா ரஜினி  "ரஜினி-ங்ர brand வேல்யூவை சும்மா விட்டு விடுவாரா"

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு தன்னுடைய இறுதி காலத்தில் உள்ள 68 வயது குடிகார நோயாளியை (கவனிக்க "குடிநோயாளி" அல்ல) வைத்து முடிந்த வரை ஆதாயமடைய பார்பீனியம் துடிக்குது.

இப்படி நினைத்து பாருங்கள்:

1) புதுக்கட்சி, 234 இடங்களில் போட்டி
2) ஆட்சியை பிடித்து முதல்வர்
3) கமல் எதிர்கட்சி தலைவர்.
4) 1 வருடத்தில் நோய் காரணமாக மரணம்
5) லதா ரஜினிகாந்த் அடுத்த முதல்வர்

(விஸ்வாமித்திரர் காலத்திலிருந்தே பார்பனரல்லாதோரை முடக்கவும் தின்று செரிக்கவும் பார்பீனியம் பெண்களைத்தான் பயன்படுத்தி உள்ளது. தற்போது ரஜினி என்னும் சூத்திரன் மூலம் லதாவுக்கு ஆட்சி அதிகாரம்)

"இன்னும் இரண்டு/மூனு/பத்து வருடத்தில் பார்பன முதல்வர், பார்பன எதிர் கட்சி தலைவர்"

- ஒரு பார்பனனா, ஒரு RSS-காரனா எவ்வளவு மகிழ்சி தரக்கூடிய விசயம், அப்படியே ஜிவ்வுன்னு இருக்குல்ல. இதுல பாதி நடந்தால் கூட அவர்களுக்கு பெரும் வெற்றிதான்.

ரெம்ப கேவலமான சாத்தியமற்ற கற்பனையாக இருக்கா?

அப்படியல்ல, கிட்டதட்ட இதுபோன்ற  நிலையை உருவாக்கத்தான் சுமார் 30 வருடங்களாக பார்பன ஊடகங்களும், பார்பன அறிவுஜீவிக்களும், பார்பன அடிமைகளும் கண் அயராது உழைத்து வருகிறார்கள். "திராவிடத்தால் வீழ்தோம், கம்யூனிஸ அபாயம், இஸ்லாமிய தீவிரவாதம், ஊழல் திமுக, அடிமை அதிமுக, குடிகார தேமுதிக" - என்பதெல்லாம் கடந்த 30 வருடங்களாக அவர்கள் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பிய புரட்டுக்கள்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம் "முதல்வர் லதா, எதிர்கட்சி தலைவர் கமல்" என்பதல்ல, "பார்பன முதல்வர், பார்பன எதிர் கட்சி தலைவர்" என்னும் கருத்தாக்கம்தான்.

அந்த பார்பனர் யாராக வேண்டுமானாலும் எந்த கட்சியிலிருந்து வேண்டுமானாலும் இருக்கலாம்:

கமல், லதா, அஜித், அம்ருதா, மைத்ரேயன், நிரமலா, Y.G. மகேந்திரன், S.V. சேகர், H.ராஜா, மாதவன், திரிசா, அரவிந்த்சாமி, குருமூர்த்தி... ஏன் அனிருத்க்கு என்ன குறைச்சல்.

---

"பொன்னியின் செலவன்" - ஐ தமிழின் ஆகச்சிறந்த இலக்கியமாக கருதும் தற்குறிதான் ரஜினி. அவரிடம் போய் "உங்க கொள்கை என்ன?" என்று கேட்டால் அதிர்ச்சி அடையத்தான் செய்வார். அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுகிறார். ஆனால் தமிழ்நாடு போன்ற அறிவார்ந்த சமூகத்தில், கொள்கையே என்னவென்று தெரியாமல் "234 இடங்களிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பேன்" - என்று சொல்ல எவ்வளவு தடித்தனம் வேண்டும். இந்த லட்சணத்துல, இவர் தொடங்கவிருக்கின்ற புதுக்கட்சியின் பைலா புரோக்கர் மணியன் தலைமையில்தான் தயாராகிறதாம்.

விஜயகாந்த் ஒப்பீட்டளவில் சுயபுத்தியுடன் சிந்தித்தவர். தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் வெளிப்படையாக தனது கருத்தை (சரியோ, தவறோ) யாருக்கும் பயப்படாமல் பேசியவர். ஆனால் அவரது குடும்பத்தார்களின் பேராசையாலும் அரசியல் புரோக்கர்களின் சூழ்ச்சியாலும் வீழ்ந்து போனார். தொண்டை பிரச்சனையால் தெளிவற்று பேசியதை "குடிச்சுட்டு பேசுகிறார்" என்று ஊதிப்பெருக்கியதில் பார்பன ஊடகங்களின் (daily, weekly, facebook, memes, what'sup group) பங்கு மகத்தானது.

நமது நாட்டில் (அதாவது தமிழ்நாட்டில்) ஜனநாயக/திராவிட பார்வையில் இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமற்றவை. அல்லது குறைந்தபட்சம் 20 அல்லது 30 வருடங்களுக்கு சாத்தியமற்றது. ரஜினியை அடுத்த சிவாஜி/விஜயகாந்த் என்று ஏளனம் செய்யலாம், ஆனால் ர‌ஜினியின் இந்த அறிவிப்பு நிச்சயம் ஓட்டுக்களை பிரிக்கும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் படுதோல்வி அடைந்தது உண்மைதான். ஆனால் திமுக-க்கு தான் பெரும் இழப்பு ஏற்பட்டது, ஆட்சி இழப்பு. விஜயகாந்த்தை கடைசி வரை கூட்டணிக்குள் கொண்டுவர கலைஞர் ஏன் பிடிவாதமாக முயற்சித்தார் என்பது திமுக தோல்வியடைந்த தொகுதிகளில் வெற்றி/தோல்வி ஓட்டு வித்தியாசத்தை ஆராய்ந்தால் தெரியும்.

சமீபகாலமாக RSS திமுகவுக்கு எதிராக செய்யும் சதியில் பிரதானமானது இதுதான். கடந்த பாரளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் முறையே தமிழருவி மணியன், வைகோ போன்ற புரோக்கர்களை கொண்டு சாதித்தது இதைத்தான். திமுகவை பலமான கூட்டணி அமைக்க விடாமல் செய்ததில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் திமுகவைச் மத்தியிலும் மாநிலத்திலும் செல்லாக் காசாக்கியுள்ளதை மறுக்க முடியாது.

இதே பாணியில், வரும் பாராளுமன்ற,  சட்டமன்ற தேர்தல்களில் திமுகவை ஆட்சியை பிடிக்க விடாமல் முடக்கவும் ரஜினி பயன்படலாம் என்பது புரோக்கர்களின் நம்பிக்கை. ஓரே கல்லில் ரெண்டு மூனு மாங்கா.

இது சார்ந்து ரஜினிக்கு ஆதரவாக  இறக்கிவிடப்பட்டிருக்கும் IT டீமின் அளவும், பட்ஜெட்டும் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

திமுக கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து செய்த தவறு: "ஆளும் கட்சியின் மீது மக்களுக்குள்ள அதீத வெறுப்பு சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கு ஓட்டாக விழும்" - என்ற அடிப்படையற்ற நம்பிக்கை. இதே மனநிலையில் தான் சமீபத்திய R. K. நகர் இடைத்தேர்தலையும் எதிர் கொண்டார்கள்.

ஆனாலும் அதையும் தாண்டி வேறு சில காரணிகளும் உள்ளன. "மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் தங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை" என்ற அதீத தன்னம்பிக்கையை கைவிட்டு வாழ்வா சாவா என்ற ரீதியில் முழஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். தற்போதுள்ள பஜக எதிர்ப்பை  இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

வரும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் திமுகவிற்கு கடும் சவாலை தரக்கூடியதாக இருக்கும். இதில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், இல்லையென்றால் மீண்டுமொரு வனவாசத்திற்கு தயாராக வேண்டியதுதான். ஆட்சியை பகிர்ந்து கொண்டாவது இரண்டாம் வனவாசத்தை தவிர்க்க வேண்டும்.

கடந்த ஐம்பது வருடங்களாக குருவி சேர்த்தது போல நாம் சேர்த்த சமூகநீதி சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொன்றாக நம் கண்முன்னே கதறல்களுக்கு நடுவே வீழ்தப்படுகின்றன.

எனவே, தமிழ்நாட்டை பொறுத்த வரை, நமக்கு தற்போதய உடனடி தேவை நிலையான திராவிட ஆட்சி. திமுக ஆட்சி அல்லது திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி.

---

ரஜினியை ஏன் இப்போது RSS களமிறக்குகிறது?

RSS-ஐ பொருத்தவரை "இந்தியாவை இந்து நாடு என்று RSS தோற்றுவிக்கப்பட்ட நூறாவது ஆண்டில் போது அறிவிக்க வேண்டும்" - என்பதுதான் லட்சியம்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பெற்ற குறிப்பிடதக்க வெற்றிகளினால் இரண்டு/மூன்று வருடங்களில் ராஜ்யசபா-வில் போதுமான பெரும்பான்மை பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, 2019 ல் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தால் மக்களவை, மாநிலங்களவை என்று தங்களால் நினைத்த அனைத்தையும் சட்டப்படியே செய்ய முடியும்.

இப்படியான சாதகமான சூழலில், அரசியல் சாசன சட்ட திருத்தத்தை  தாங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் செய்துவிட முடியும் என்று நம்புகிறது. எனவே, அதை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய நினைக்கின்றார்கள்.

எனவே ரஜினியை போல வேறு சிலரும் சீரான இடைவெளியில் வருவார்கள்.

இங்கு பலர் "அரசியல் சாசன திருத்தம்" என்பதை அபாயகரமான பிரச்சனையாக நினைப்பதில்லை. திருத்தம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சாசனத்தையே மாற்றப் போகிறார்கள். தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் "இந்தியா இந்து நாடு" என்று மாற்றுவது மட்டுமல்ல அவர்களது நோக்கம், அவர்கள் விரும்பும் குறைந்தபட்ச சட்டங்கள்:

1) பாரதம் என்னும் இந்தியா இந்து தேசமாகும்.
2) இந்தியாவின் அதிகாரப்பூர்வ மதம் இந்து மதமாகும்.
3) இந்து தேசத்தில் இந்து மதத்தை பழிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
4) இந்தியா இந்துக்களுக்கே, ஆட்சி அதிகாரத்திற்கு உரியவர்கள் இந்துக்களே.
5) வாக்குரிமை இந்துக்களுக்கு மட்டுமே. வாக்குரிமை படிநிலை கொண்டதாகும். அவரவர் தகுதிநிலை புள்ளிகளின் அடிப்படையில் ஒருவர் அளிக்கும் வாக்கின் மதிப்பிற்கும் மற்றொருவர் அளிக்கும் வாக்கின் மதிப்பிற்கும் வித்தியாசம் இருக்கும்.
6) இந்துக்கள் அல்லாதவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்ட அதை அவர்கள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

"இந்தியா இந்துக்களுக்கே, ஆட்சி அதிகாரத்திற்கு உரியவர்கள் இந்துக்களே"

இந்த முழக்கங்களை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா?

"தமிழ்நாடு தமிழர்களுக்கே, தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும்"

இது நமது தமிழ் பாசிஸ்டுகளின் முழக்கம். தமிழ் பாசிஸ்ட்டுகள் தங்களுக்கான கொள்கை முழக்கங்களை இந்துத்துவ பாசிஸ்ட்டுகளிடமிருந்தே பெறுகிறார்கள்.

இந்த பாசிஸ்ட்டுகள் "யார் இந்தியன், யார் தமிழன்" என்ற வறையறையில் நேர்மையற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்களை நாம் கவனமாக புறந்தள்ள வேண்டும்.

---

No comments:

Post a Comment