Friday, December 29, 2017

அயோடின் சால்ட் வரலாறு

தேவி சோமசுந்தரம்
Via facebook
2017-12-29

வாட்ஸ் அப் ல அயோடின் சால்ட் பத்தி  மிக தவறா சில தகவல் உலாவுது. அயோட்டின் சால்ட் தமிழர்களை அழிக்க பன்னாட்டு சதி என்ற லெவல்ல ஆரம்பிக்கிது. ..
அயோடின் சால்ட் வரலாறு பார்ப்போம்.

    1922
  அமெரிக்காவின் மிக்ஸிகன் மாவட்டத்தில் காய்டர் (goiter- tyroid malfunction contion) என்ற மிக பரவலாக காணப்பட்ட வியாதி உணவில் அயோடின்  குறைவால் என்று அறியப் படுகிறது .ஏன் உணவில் அயோடின் குறைவா இருக்கு என்று ஆராய்ந்த போது அயோடின்  சத்து குறைவான மண் வளம் உணவு பொருளுக்கு தேவையான அயோடினை தரவில்லை என்று அறிந்தது மெக்ஸிகன் பல்கலை கழகம் .

       தைராக்சின் (T4) , டிரையோடதைராக்சின் (T3) என்ற இரண்டு  ஹார்மோன்கள் நம் உடல் மெட்டபாலிஸத்தை  சரியாக வடிவமைப்பதில் முக்கியமானவை. திசுக்கள் வலுவானதாக வளர்வதற்கு உதவுகிறது.முக்கியமாக மூளையின் திசுக்கள் வளர்ச்சியில் இந்த ஹார்மோன்கள் பங்கு சரியாக இல்லாத போது மூளை வளர்ச்சி குறைவாக உள்ள சமுகமா தான் இருக்க நேரிடும் .அயோடின் தான் இந்த இரண்டு ஹார்மோன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது .

   அயோடின் குறைபாடு என்றதும் உடனே அயோடினை அள்ளி உப்பில் போடவில்லை அமெரிக்க அரசு. மண்ணில்  அயோடின் சத்தை அதிகரிக்க ஆய்வு மேற்கொண்டது. அயோடின் ஒரு உப்பு..கெமிக்கல் அது .பொட்டாஷியம் அயோடைடு ,சோடியம் அயோடைடு என்ற கெமிக்கல் உப்பிலிருந்தே நமக்கு கிடைக்கும்.இந்த பொட்டாஷியம் குளோரைடு நேரடியாக மண்ணில் சேர்த்த போது பயிர் வளர்ச்சி  பாதிக்க பட்டு உணவு பொருள் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
  
   அதனால் உப்பை உப்பிலேயே கலந்து தரலாம் என்று மென்ஸிகன் பல்கலைகழகம் முடிவெடுத்தது..1924 ல் முதன்முதலாக அமெரிக்காவில் அயோடைஸ்ட் சால்ட் அறிமுக படுத்தபட்டது.  முதன்முதலாக தரப்பட்டு நீண்ட கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டது .

  சோடியம் அயோடைஸ்ட் சில வகையான கேன்சரை உருவாக்குவதை கண்டறிந்தார்கள். பொட்டாஷியம் அயோடைஸ்ட்  தரமானதாக கண்டறியபட்டு அதுவே தொடர்ச்சியா அயோடின் தயாரிப்பில் பயன்படுத்தபட்டது .
   முதலில் 200 Mcg ஒரு கிலோவுக்கு என்று சேர்க்க பட்டு பின் 150 msg ஆக குறைக்க பட்டு தரபட்டது.அமெரிக்காவில் அயோடைஸ்ட் சால்ட் இல்லாத அடிப்படி இல்லை என்ற நிலை உருவானது.
.  
பின்னர் ஆஸ்திரேலியா,ப்ரான்ஸ், சீனா, உட்பட எல்லா நாடுகளும் அயோடைஸ்ட் உப்பை தங்கள் நாட்டில் அறிமுக படுத்தியது. அதே போல இந்தியாவும் காய்ட்டர் குறைபாட்டால் இந்திய மக்கள் பாதிக்க படுவது கண்டறிந்து இந்தியா முழு அதும் அயோடைஸ்ட் சால்ட்டை அறிமுக படுத்தியது.
.
   உலகின் 85 க்கும் மேற்பட்ட நாடுகளில் அயோடைஸ்ட் சால்ட் உபயோகிக்க படுகிறது .உலக  சுகாதார நிறுவன அனுமதித்த அளவில் அயோடின் உப்பில் பயன்படுத்த படுகிறது. அயோடின் குறைவை கவனிக்காமல் விட்டால் #மூளை வளர்ச்சி குறைந்த சமுகம் தான் வளரும்..
 
    அது போலவே #மசூர் தால் எனப்படும் ஆரஞ்ச் நிற துவரை பருப்பு கெடுதல் என்று ஒரு தகவல் பரப்பபடுகிறது..இது முற்றிலும் தவறு இலகுவாய் செரிக்கும் நல்ல புரோடினை கொண்ட மசூர் தால் உடல் தசை வலுவிற்கு மிகவும் நன்மை தருவதே.
      நாம் அலட்சியமா ஷேர் செய்து விடும் அயோடின் உப்பு கெடுதல் போன்ற தவறுகள் நம் சந்ததிகளை  தான் பாதிக்கும் ஷேர் செய்வதற்கு முன் அந்த தகவல் குறித்த உண்மை தன்மை அறிந்து ஷேர் செய்யனும்..#அலட்சியம் #சமுக குற்றம்.

#அயோடின்_சால்ட்

https://m.facebook.com/story.php?story_fbid=369851506759980&id=100012054017178

No comments:

Post a Comment