Sengovi Guru
Via facebook
2017-12-24
கட்சித்தொண்டர்களுக்கு எப்போதும் நாட்டை விட கட்சி தான் முக்கியம். தலைமை எத்தனை தவறு செய்தாலும் பெரிதுபடுத்தாமல் உடன் நிற்கும் உணர்வுப்பூர்வமான பந்தம் அது. அதிலும் அதிமுக தொண்டர்கள் இன்னும் ரசிக குஞ்சு மனநிலையிலேயே இருப்பவர்கள்.
தனது கட்சித் தலைவர் இறக்கிறார். கொன்றதே சசி குரூப் தான் என்று நினைக்கிறார்கள். தலைவியைக் கொன்றதோடு நில்லாமல், கட்சியையும் ஆட்சியையும் பிடிக்க நினைக்கிறார்களே என்று கடுப்பாகிறார்கள்.
ஓபிஎஸ் பொங்கி எழுகிறார். அவருக்கு ஆதரவு தந்து, அடுத்த மக்கள் தலைவர் என்கிறார்கள். கொஞ்சநாளில் அது பாஜக சொம்பு என்று தெரிகிறது. அதிமுகவை பலவீனமாக்க, இந்த டம்மி பீஸை முன்னிறுத்துகிறார்கள் என்று புரிகிறது. அடுத்து, எடப்பாடி பொங்குகிறார். அதை எழுச்சியாக யாரும் பார்க்கவில்லை, துரோகமாகப் பார்க்கிறார்கள்.
இதுவரை கட்சியைக் கட்டிக்காத்தது ஜெயலலிதா என்ற தனி மனுஷி அல்ல, மன்னார்குடி கும்பல் தான் என்பது உறைக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை கரைத்து, இல்லாமலாக்கும் பிஜேபியின் குறுக்குப்புத்தியை சாதாரண அதிமுக தொண்டன்கூடப் புரிந்துகொள்கிறான்.
’யுனிவர்சிட்டியில் வேலை, ட்ரான்ஸ்ஃபர் வேண்டுமென்றால் எங்களை அணுகலாம் ’என்று சில பிஜேபி தலைவர்கள் புரோக்கர்களிடையே தெரிவிக்கிறார்கள். ’ஓபிஎஸ், ஈபிஎஸ் எல்லாம் நம்ம அடிமைகள் தான்..நம்ம ஆட்சி இது’ என்று உள்ளுக்குள் கொக்கரிக்கிறார்கள். அதிமுக தொண்டன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறான்.
இடையில், சசிகலாவை உள்ளே தூக்கிப்போடுகிறார்கள். தினகரனை உள்ளே தூக்கிப்போடுகிறார்கள். ’வழக்கு. ரெய்டு, கொலைப்பழி’ என எல்லாவகை அஸ்திரங்களும் பாய்கின்றன. ஆனாலும் தினகரன் சிரித்துக்கொண்டே எதிர்த்து நிற்கிறார்.
’20 வருடங்கள் சொத்துக்குவிப்பு வழக்கு நடந்தாலும், எத்தனை ரெய்டு/மிரட்டல் வந்தாலும் அம்மாவுடன் நின்ற சின்னமா எங்கே?...ஒரு ரெய்டுக்கே பயந்து காலை நக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் எங்கே?’ என்று அதிமுக தொண்டன் யோசிக்கிறான்.
கட்சியைக் காப்பாற்ற ஒரே வழி, தினகரன் தான் என்று புரிந்துகொள்கிறான். எடப்பாடி, ஓபிஎஸ்ஸை குனிய வைத்து, குக்கரில் குத்துகிறான். வெற்றி!
இது வெறுமனே பணத்தால் மட்டுமே வந்த வெற்றி கிடையாது. அப்படி சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயல். ஒரு கட்சித்தொண்டன், தன் கட்சியை மீட்டெடுக்க ஆரம்பித்திருக்கும் யுத்தம். டாஸ்மாக்கும் மணல் திருட்டும் தன் புது தலைமையின் இரு கண்கள் என்று அவனுக்குத் தெரியும். ஆனாலும், அதை விட கட்சி முக்கியம் அவனுக்கு!
கட்சிக்காக மோடி போன்ற சர்வாதிகரிகளை எதிர்த்ததால் தான் தினகரனுக்கு இந்த செல்வாக்கு. ஓபிஎஸ் மாதிரியே இவரும் மோடியைச் சரணடைந்தால், அடுத்த வருடம் இன்னொரு தலைமையைத் தேடிப்போவான் அந்தத் தொண்டன்.
- எனது நட்பு வட்டத்திலும் உறவு வட்டத்திலும் இருக்கும் அதிமுககாரர்களிடம் கடந்த ஒருவருடமாகப் பேசிக் கணித்தது இது!
No comments:
Post a Comment