Monday, August 12, 2019

ஸாலிஹான பெண்

தன்னையும், தன பச்சிளம் குழந்தையையும் யாருமற்ற பாலைவனத்தில் தனியாக விட்டுச் செல்கின்ற போது:

"அல்லாஹ் தான் உங்களுக்கு இதனை ஏவினானா? அவ்வாறாயின், நீங்கள் சென்றுவிடுங்கள். அல்லாஹ் எங்களை கைவிடமாட்டான்"

என்று தனது கணவனைப் பார்த்து தீர்கமான கூறிய பெண் பெற்றெடுத்த குழந்தை தான், தன்னை அறுப்பதற்கு முனைந்த தனது தந்தையை பார்த்து இவ்வாறு கூறியது:

"எனது பாசத்துக்குரிய தந்தையே, உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் நிறைவேற்றுங்கள். இன்ஷா அல்லாஹ் என்னை நீங்கள் பொறுமையுடையவராக காண்பீர்கள்"

*நீதி*

* மார்க்கத்தை கடைபிடிக்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள். வெற்றி பெறுவீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்தைகளில் பொதிந்துள்ள அர்த்தம் இது தான்.

* அந்தப் பெண் நாம் மரணித்த பின்பும் நமக்கு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கின்ற ஸாலிஹான வாரிசை உருவாக்கித் தருவாள்.

#இப்ராஹிம் (அலை) #ஹாஜர் (அலை) #இஸ்மாயில் (அலை)

---

இந்த புனிதமிக்க துல்ஹஜ் மாதத்தில் புதிதாக திருமணம் செய்ய இருக்கின்ற "அப்துல்லாஹ் & சபானா" மற்றும் "பஃசில் & அப்சானா" ஆகியோர்கள் நன்மையான காரியங்களில் தங்களுக்கு தாங்களே உதவி செய்து கொள்ளவும், மரணத்திற்குப் பிறகும் தங்களுக்கு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கின்ற ஸாலிஹான வாரிசைகளை பெற்றுக் கொள்வதற்கும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.

பிரிட்டிஷ் பாதுஷா குடும்பத்தார்கள்.

No comments:

Post a Comment