Saturday, August 24, 2019

மனப்பாடம் என்பது சிந்தனையின் அடிப்படை

Sen Balan
2019-08-19

மனப்பாடம் என்பது சிந்தனையின் அடிப்படை. மனப்பாடம் செய்த தரவுகள் இல்லாமல் சிந்தனை செய்யவே முடியாது.

Artificial intelligenceக்கு கூட data வேண்டும். Data இல்லாமல் எப்படி சிந்திக்க முடியும்?

உதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு நான் செல்ல வேண்டும்.

பேருந்தா, காரா, ரயிலா, விமானமா
என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

எப்படி சிந்திப்பேன்?

* ஒவ்வொன்றின் பயண நேரம் என்ன
செலவு எவ்வளவு?

* எத்தனை கிலோ லக்கேஜ் கொண்டு செல்ல முடியும்?

* ஏர்போர்ட், பேருந்து நிலையம், இரயில் நிலையம் இவற்றில் எது அருகில் உள்ளது?

என பல தரவுகளை வைத்து தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்தத் தரவுகள் மனப்பாடமாக தெரிந்திருக்க வேண்டும். இவை எதுவும் தெரியாமல் முடிவெடு என்றால் பூவா தலையா தான் போட வேண்டும்.

கல்வி, அறிவு, சிந்தனைக்கு அடிப்படையே மனப்பாடத் திறன் தான்.

ஆனால் அதை ஏதோ கொலைக்குற்றம் போல சில ஆஃபாயில்கள் பேசும் போது கடுப்பாகிறது.

No comments:

Post a Comment