Tuesday, August 13, 2019

சீமான் போன்றவர்கள் ஈசியாக ஸ்கோர் செய்வதின் காரணம் என்ன?

"பெரியாரியத்தையும் அம்பேத்கரியத்தையும் முன்வைக்கும் தோழர்கள், அறிவுசார் தளத்தில் பகுத்தறிவு தளத்தில் ஆயிரம் முறை பரப்புரை செய்தாலும், சீமான் போன்றவர்கள் ஈசியாக ஸ்கோர் செய்வதின் காரணம் என்ன?" - என்று ஒரு தோழர் கேட்டார்.

அதன் விடை மிக எளிதானது. பெரியாரும் அம்பேத்கரும் சொன்னது தான்:

சாதி என்ற பெயரில் உன்னை பார்ப்பனியம் மற்றும் ஆதிக்க சாதிகள் பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த அடிமைத் தளையிலிருந்து நீங்கள் வெளியேற வேண்டும் என்றால் இந்து மதத்தையும் சாதியையும் துறந்துவிட்டு "கல்வி, அறிவு, சமத்துவம்"
என்ற இம்மூன்றையும் பற்றிக்கொண்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும்

- என்று கூறினார்கள்.

சீமான் போன்ற தற்குறிகள் சொல்வது நோகாமல் நுங்கு தின்னும் டெக்னிக்.

முத்து படத்தில் வருவது போல, முத்து ஒரு அடிமை வேலைக்காரனாக அந்த ஜமீன்தாரிடம் வேலை பார்த்தாலும், அந்த மொத்த ஜமீனுக்குமே அவன் தந்தை தான் சொந்தக்காரர். அதாவது "ஆண்ட பரம்பரை" என்று திரைப்படத்தில் காட்டும்போது ரஜினி ரசிகர்களுக்கு ஏற்படும் அதே குதுகுலம் தான், அடிமைப்பட்டு கிடக்கும் மக்களிடம் சென்று "நீ உன் சாதி மட்டம் என்று நினைக்காதே இன்று வேண்டுமானால் அப்படி இருக்கலாம் ஆனால் ஒரு காலத்தில் நீ ஒரு ஆண்டபரம்பரை உன் முன்னோர் எல்லாம் அரசர்கள், முருகன் தான் உனது முப்பாட்டன், உன் முப்பாட்டன் தான் மகாபாரதப் போரில் சோறாக்கி போட்டார் குழம்பு ஊற்றினார்" - என்று அவர்கள் தொடைகளுக்கு நடுவே சொரிந்து கொடுக்கும்போது சொகுசாக இருக்கிறது இந்தப் பாமர மக்களுக்கு.

ஆனால் ஆண்ட பரம்பரைக் கதைகள் சொல்லும் எந்த தலைவர்களும் நம் பாமர மக்கள் இன்று இருக்கும் அடிமை தளத்திலிருந்து விடுதலை பெற எந்த வழியும் சொல்ல மாட்டார்கள் அவர்கள் சொல்வதெல்லாம் "என்னை முதலமைச்சராக உட்கார வை" உன்னுடைய ஆண்ட பரம்பரையின் காலத்துக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன் என்ற இனிப்பு மிட்டாய் மட்டுமே

No comments:

Post a Comment