Tuesday, May 9, 2017

200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மூன்று பேரும் பிற்படுத்தப்பட்டவர்கள்



மருத்துவக் கல்லூரிகளுக்குத் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை மய்யப்படுத்திப் பார்த்தால், நுழைவுத் தேர்வு நடத்திடத் துடிக்கும் மேல் தட்டு வாசிகளின் வஞ்சகம் வெளிப்பட்டு விடும்.

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 2853.
விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 25379.

+2 மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,

பிற்படுத்தப்பட்டோர் 10,538,
தாழ்த்தப்பட்டோர் 5720,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 5314, 
பிற்படுத்தப்பட்ட இசுலாமியர்கள் 1419,
உயர் வகுப்பினர் 1228,
அருந்ததியர் 928,
மலை வாழ் மக்கள் 232.

பொதுப் போட்டிக்கான இடங்கள் 884. அதிக மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:

பிற்படுத்தப்பட்டோர் 599,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159,
பொதுப் பிரிவினர் (உயர் ஜாதியினர்) 68,
இசுலாமியர் 32,
தாழ்த்தப்பட்டோர் 23,
அருந்ததியர் 2,
மலைவாழ் மக்கள் 1

200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றவர்கள் மூன்று பேர். இந்த மூவரும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆவார்கள்.

நிலைமை என்னவென்றால், உயர் ஜாதிக்காரர்கள் தகுதி, திறமை எங்களுக்கு மட்டுமேதான் உண்டு என்று மார்தட்டுபவர்களுக்குக் கிடைத்த இடங்கள் மூன்று சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை.

இந்த உண்மையின் வெளிச்சத்தில், தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும், இப்பொழுதுள்ள தேர்வு முறையில் (+2 தேர்வு அடிப்படையில்) அதிக இடங்களைப் பெற்று விடுகிறார்கள் என்பதால், இதனை எப்படியும் ஒழித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்ச்சி, வஞ்சகம், சதித் திட்டம்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு (நீட்) என்பதாகும்.

- உண்மை நாளிதழ்

No comments:

Post a Comment