Tuesday, May 16, 2017

போக்குவரத்து தொழிலார்கள் எதனால் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்

H V krishnaprasad
via Facebook
2017-05-16


பகடி செய்து லைக்குகளை தட்டியவர்களுக்கு சமர்ப்பனம் இந்தப் பதிவு...

ஏன்? எதனால் இந்த வேலை நிறுத்தம்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்து ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிடப்படுகிறது.

போக்குவரத்து தொழிலார்களின் வேலை நிறுத்தத்தை ஆதரித்து வரும் பதிவுகளை காட்டிலும் அதை எதிர்த்து வரும் பதிவுகளே அதிகம்.

முதலில் போக்குவரத்து தொழிலார்கள் எதனால் வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்பது பொதுமக்களாகிய உங்களுக்கு தெரியுமா?

அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

போக்குவரத்துதொழிலாளர்களின் இந்த வேலைநிறுத்த அறிவிப்பு என்பது அவர்களின் சுயநலன் சார்ந்தது மட்டும் அல்ல அதிலே பொதுநலமும் கலந்திருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சுருக்கமாக சொன்னால் போக்குவரத்து தொழிலார்களின் இந்த போராட்டத்தில் அவர்களின் சுயநலனை காட்டிலும் பொதுநலன் மிக அதிகமாக இருக்கிறது.

1. போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகை (பி.எப்./எல்.ஐ.சி / ஆர்.டி / கடன் சொசைட்டி இப்படி) எந்த பணமும் அந்தந்த நிறுவனங்களுக்கு பலவருடங்களாக நிர்வாகங்கள் செலுத்தவில்லை.

2. அரசு அறிவித்த சலுகைககள் காரணமாக (இலவச பயண அட்டைகள், எம்.எல்.ஏ, எம்.பி, மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோர்களால்) ஏற்படும் வருவாய் இழப்பு அரசு கழகங்களுக்கு வழங்கவில்லை.

3. பள்ளிகுழந்தைகளுக்கு அரசு அறிவித்த இலவச பஸ் பயணத்திற்கான செலவில் போக்குவரத்துக் கழகங்கள் ஏற்றுக்கொண்ட தொகைபோக மீதி தொகை வழங்கப்படவில்லை.

4. பணி ஓய்வு பெற்றுச் செல்லும் தொழிலாளர்ளுக்கு அவர்களுக்கு சட்டப்படி சேரவேண்டிய கிராஜிவிட்டி (பணிக்கொடை), பி.எப், விடுப்பு ஒப்படைப்பு சம்பளம், மருத்துவ தொழிற்நுட்ப கல்லூரிகளுக்கு தொழிலாளி செலுத்திய பங்குதொகை எதுவும் வழங்காத நிலை.

5. தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நீதி மன்றம் வழங்கும் தீர்ப்புகள் காரணமாக கிடைக்க வேண்டிய நிலுவை தொகைகள்...

6. நிர்வாக தண்டனைகள் மற்றும் பே -அனாமலியால் ஏற்படும் பணபலன்கள்...

7. வருடாந்திர ஊதிய உயர்வு, ஆய்வுபலன் (ரிவியூ) போன்றவற்றால் வரும் பணபயன் நிலுவைகள்...

8. இதற்கெல்லாம் மேலாக விலைவாசி உயர்வை தொழிலாளர்கள் தாங்க முடியாத நிலையில் அதை ஓரளவாவவது
ஈடுசெய்யும் நோக்கில் வழங்கப்படும் பஞ்சப்படி (D.A) உட்பட பணபலன்கள் வழங்கப்படவில்லை.

9. மத்திய அரசு பின்பற்றிவரும் பொருளாதார கொள்கைககள் காரணமாக கட்டுபாடின்றி ஏறிவரும் டீசல் விலை உயர்வை ஈடுகட்ட அரசு உதவி மறுக்கப்படுகிறது.

10. அரசு சேவைத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகம் சுங்கசாவடிக்கு (டோல்கேட்) கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

11. போக்குவரத்துக் கழக பேருந்துகள் காப்பீடு (இன்சூரன்ஸ்) செய்யப்படாததால் கோடிகணக்கான ரூபாய் விபத்து இழப்பீடு வழங்கும் நிலை.

12. தேவையற்ற வகையில் திட்டமிடல் ஏதுமின்றி ஒரே நேரத்தில் ஒரே கழகத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்குவதால் ஏற்படக்கூடிய தேவையற்ற செலவீனங்கள்.

13. தகுதிச் சான்று (FC) என்ற பெயரில் வசூலிக்கப்படும் தொகை.

14.அனுமதி இல்லாத ஆம்னி பேருந்து மற்றும் தடம் மாறி இயக்கும் மினிப் பேருந்துகளால் ஏற்படுத்தப்படும் இழப்பு.

15. பணியில் இருக்கும் தொழிலாளர்கள் தாங்கள் சேமித்து வைத்த ஈட்டிய விடுப்பை திருப்பி ஒப்படைத்தால் அதற்குரிய தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் போக்குவரத்து கழகங்கள் விடுப்பை எடுத்துக்கொண்டு பணத்தை வழங்குவதில்லை.

16.முப்பது, முப்பத்தி ஐந்து ஆண்டுகள்
ஆண்டுகள் பணி செய்து விட்டு பல கனவுகளோடு ஓய்வு பெறும் போது வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்ப படுகிறார்கள். இது கடந்த 7 ஆண்டுகளாக தொடர்கிறது.

17. ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு 24 சதவிகித D.A எனும் பஞ்சப்படி வழங்கப்பட வில்லை. நிலுவைத் தொகையும் வழங்க வில்லை.

18. ஓய்வூதியமும் கடந்த 4 மாதங்களாக தாமதப்படுத்தி போராட்டத்திற்குப் பிறகே வழங்கப்படுகிறது.

19. எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு நாளும் வரவுக்கும் - செலவுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தால் ஏற்படும் 5 கோடி இழப்பு...

20. இதற்கெல்லாம் முழுமுதல் காரணமே கடந்த 5 ஆண்டுகளில் கோமளவல்லி ஜெயா அரசு புதிய பேருந்துகளை இயக்கவில்லை.

2011ல் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டும் உயர் அதிகாரிகளின் திறமையின்மையால் வசூல் அதிகரிக்க வில்லை. வருவாய் இழப்பை சரி செய்ய இயலவில்லை. அதனால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு இருந்த வருவாயை விட குறைவான வசூல்தான் வருகிறது.

இன்னும் சொல்ல முடியும். இப்படி எது குறித்தும் கவலைப் படாத அரசுகளால் ஏற்படுத்தப்படும் நஷ்டத்திற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்கும் தொழிலாளி எப்படி? பொறுப்பாக முடியும்.

பணி ஓய்வு பெற்று செல்லும் நிலையில் தொழிலாளிக்கு சேரவேண்டிய தொகைககளை முடக்கிவைத்து அதைகொண்டு கழக அன்றாட செலவுகளை செய்வோம் எனச் சொல்லும் அரசுகளின் நடவடிக்கை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.

பொறுமையாக பேசிப் பேசி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகே வேலைநிறுத்தம் ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு தொழிலாளி வந்துள்ளான்.

இப்போராட்டத்தை இருகரம் நீட்டி வரவேற்று வெற்றிபெறச் செய்வது நம் ஒவ்வொருவருடைய கடமை.

மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி தனியார் மயத்திற்கு தூபம் போடும் அரசுகளின் நடவடிக்கையை தொழிலாளர்களும், பொதுமக்களும் இணைந்து முறியடிக்க வேண்டும்.

பொதுமக்களே. போக்குவரத்து தொழிலார்களோடு நாம் இணைந்து Deadbody சீ எடப்பாடி அரசை நாம் எதிர்காது இருந்தால் அதன் பின் எங்கும் தனியார் பஸ்கள் மட்டுமே இருக்கும்.

அதனால் பாதிக்கப்படப்போவது.

பஸ்ஸை மட்டுமே நம்பி இருக்கும் ஏழை மக்கள்.

சென்ற 2015 வெள்ளத்தின் பொழுது போக்குவரத்து ஊழியர்களை புகழ்ந்து டைப் அடித்த கைகள் எல்லாம் இப்பொழுது போக்குவரத்து ஊழியர்களை திட்டி டைப் செய்து கொண்டிருக்கிறது.

என்ன? கொடுமை இது.

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்னும் பொய் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி இன்று அந்த பொய் உண்மையாகி விட்டது.

பொய்கள் பரவுவதை போல் இது போன்ற உண்மைகள் பரவாது என்பது காலத்தின் கோலம்.

H V krishnaprasad

No comments:

Post a Comment