கடந்த சில நாட்களாக, திமுகவினராலும், திமுக ஆதரவாளர்களாலும், பகுத்தறிவாளர்களாலும் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் மீதான தொடர் விமர்சனங்களும், சிற்சில எல்லை மீறிய சம்பவங்களும், நம்முடைய சில நண்பர்களுக்கு வருத்தத்தையும், கவலையையும், கோவத்தையும், ஆத்திரத்தையும் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது!
அவர்கள் கொஞ்சம் திறந்த மனதோடும் சுய புத்தியோடும் இந்த விவாதங்கள்குறித்து சிந்திக்க வேண்டும் என்று மெத்த பணிவன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.
திமுகவினர் ஆற்றுவது வெறும் எதிர்வினைதான். எந்த வகையிலும் திமுகவினால் மாற்றி அமைக்கப்பட்டிருக்க முடியாத ஒரு ஆயுதப்போராட்டத்தின் தோல்வியை, அதற்கான வீண்பழியை ஏன் திமுக சுமக்க வேண்டும்?
ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை விடுதலைப்புலிகள் ஆயுதத்தை மட்டும்தான் நம்பினார்கள், எந்தவொரு ஜன நாயக சக்திகளையோ, மாற்றுக்கருத்துகளையோ அவர்கள் கிஞ்சித்தும் அனுமதிக்கவில்லை.
அதன் விளைவாகதான், போர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்று ஈழத்தமிழர்கள் பல குழுக்களாக சிதறிக்கிடக்கிறார்கள். இன்னமும் விடுதலைப்புலிகள் எந்த தவறும் செய்யாத புனிதப்பசுக்களாகவே பார்க்கப்படவேண்டும் என்பது எந்த வகையிலும் ஈழத்தமிழர்களின் நலனுக்கு துணை புரியப்போவதில்லை!!
No comments:
Post a Comment