Saturday, May 27, 2017

"சாதீ வெறியர்கள்" சந்தேகமேயில்லாமல் பள்ளர், பறையர்தான்

" நமது சமத்துவ சிந்தனை சாக்கடைக்கு நிகரானது"

*என்னிடம் பலபேர் கேட்கும் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி " நீங்கள் பார்த்ததலியே யாருக்கு " சாதீ வெறி" அதிகம் என நினைக்கிறீர்கள்?,," என்பதுதான்..

அநேகமாக இந்த கேள்வியை கேட்கும்  ஒவ்வொருவரும் தங்கள் மனதில்  குறைந்தது  ஒரு குறிப்பிட்ட சாதியையாயவது தங்கள் எதிரிகளாக பாவித்து அவர்களை நான் சாதீவெறி பிடித்தவர்கள் என நான் சொல்வேன் என மிக ஆவலோடு எதிர்ப்பார்ப்பார்கள்...ஆனால் என்னுடைய பதிலில் அவர்கள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள்...

* எல்லா இடத்திலும் நான் சொல்லும் ஒரே பதில் " நான் தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறேன்..ஒவ்வொரு சாதியினரின் நடவடிக்கையும் சாதியை பொருத்தமட்டில் எப்படி இருக்கும் என நேரடியாக அனுபவ பட்டியிருக்கிறேன்..நான் பார்த்த அளவில் மிக பெரும் " சாதீ வெறியர்கள்"   சந்தேகமேயில்லாமல் பள்ளர், பறையர்தான்""   என்பதுதான் அது..இதை சொன்னவுடன் அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடையும் அதேவேளையில் மிகவும் ஆச்சரியபடதக்க வகையில் யாரும் எதிர்த்து விவாதம் செய்ததில்லை..மாறாக மவுனமாகிவிடுகிறார்கள்..இந்த மவுனத்தில்தான் நண்பர்களே பல கசப்பான உண்மைகள் ஒழிந்திருக்கின்றன....

இதனை விளக்கமாக நான் பதிவு செய்ய விரும்புகிறைன்..

* முதலில் இந்த பள்ளர், பறையர் சாதி வெறியர்கள் என்பது குறித்து என்ன புரிதலை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்..

*பள்ளரை பொறுத்தவரை தேவர் சமூகத்தினர் சாதி வெறியர்கள் காரணம் பள்ளர்கள் பெரும்பான்யையாக வாழும் தென்தமிழ்நாட்டில்தான் தேவர் சமூகத்தினர் வாழ்கின்றனர்..அதேபோல பறையர்களை பொறுத்தளவில் வன்னியர்கள் வாழும் பகுதியை ஒட்டி வாழுகிறார்கள்..கலந்து பழகும் சூழ்நிலை இயல்பாகவே உள்ள நிலையில் சாதீய வேறுபாடு காரணமாக பகைஉணர்வுடன் வாழ்கின்றனர்..இந்த சாதீய வேறு பாடு வீடுகளை சேதபடுத்துதல்..தாக்குதல்..கொலை உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகளை நேரடியாக பள்ளரும்..பறையரும் அனுபவிக்கின்றனர்... இது உண்மையே ஆனால்...

* வழக்கமாக கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகிய ஒருவன்..அந்த நோயின் முழு கொடுரத்தை உணர்ந்த ஒருவன் மேல் மனிதத்தன்மை உள்ள அனைவருக்கும் இரக்கம் வரும்..ஆனால் அவனே தனக்கு தாளமுடியாத வேதனையை தரும் தொற்றுநோயை  தனது சகோதரர்களுக்கும் பரப்பி அவர்கள் வேதனை படுவதை பார்த்து மகிழ்ச்சியும்..தற்பெருமையும்  அடைவான் என்றால் அவன் எத்தகைய வெறிபிடித்தவனாக இருக்க வேண்டும்..

*அதேபோலத்தான் பள்ளரும் பறையரும்..எந்த சாதீய கொடுமைகளால் தங்கள் உரிமை..உடமை..உயிரை பறிகொடுக்கிறார்களோ..எந்த சாதீய கோடுமைகளை எதிர்த்து போராட்டங்களை நடத்துகிறார்களோ அதே சாதீய கொடுமைகளை " சாதீ வெறிகொண்டு" அருந்ததியர்கள் மீதும்..வண்ணார்கள் மீதும் சிறிதும் வெட்கமின்றி திணிக்கிறார்கள்..

* இவர்கள் எந்த அளவிற்கு மனிதநேயமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றால் " இளவரசனுக்கும்..சங்கருக்கும் " நடந்ததற்க்காக வெகுண்டு கிளம்பும் இவர்கள்தான் அதே இளவரசனையும்..சங்கரையும் அருந்ததியர்கள் மத்தியிலும்..வண்ணார்கள் மத்தியிலும் உருவாக்குகிறார்கள். பிற சாதியினரால் பாதிக்கப்பட்டால் பள்ளயருக்கும்..பறையருக்கும் வன்கொடுமை தடுப்புசட்ட பாதுகாப்பு கிடைக்கிறது..ஆனால் இதே பள்ளரும்..பறையரும் சாதீ வெறிகொண்டு அருந்ததியர்களுக்கும்..வண்ணார்களுக்கும் இழைக்கும் சாதீவெறி கொடுமைகளுக்கு எதிராக எந்த வித பாதுகாப்பும் கிடையாது...

* எந்த மனிதனும் தன்னுடைய கழிவுகளை திரும்பி பார்க்கசகூட விரும்புவதில்லை ஆனால் அதே மலத்தை ஒரு சமூகத்தையே சுமக்கவைத்திருக்கிறார்கள்.. அரசும் அதையே செய்கிறது ..அருந்ததியர் உள் ஒதுக்கீடூற்கு எதிராக " உரிமை பறிபோனது..உரிமைபறிபோனது" என ஒப்பாரி வைக்கும் பள்ளரும் பறையரும்...அரசாங்கமே அருந்ததியர்களுக்கு செய்யும் இந்த மனிததன்மைக்கு எதிராக வாயையை மட்டுமல்ல எல்லாவற்றையும் மூடிக்கொள்கிறார்கள்...இதுதான் இவர்களது வெட்கங்கெட்ட சமூகநீதி...

*இதில் பள்ளர்..பறையர் அரசு ஊழியர்கள் செய்யும் " ஆச்சார சேட்டைகள்" மலத்தை விட கீழானவை..

*சக மனிதனை மிக மிக கேவலாமாக திட்ட வேண்டும் என்றாலும் கூட பள்ளரும் பறையரும் மிக  சாராளமாக " ஏய் சக்கிலியபயலே..ஏய் வண்ணாபயலே"என திட்டுகிறார்கள்..

*பள்ளரும்..பறையரும்   அருந்ததியர்கள் மீதும் வண்ணார்கள் மீதும் வவன்முறையாக திணிக்கும் தீண்டாமை வக்கிரங்கள் சாதாரண மனிதனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவைகளாக  உள்ளன..

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

இதில் வேடிக்கை என்னவென்றால் சாதியகட்டமைப்பில் பள்ளரும்சரி..பறையரும் சரி "செருப்புக்கு  சமமானவர்களாக" த்தான் நடத்தபடுகிறார்கள்..இந்த செருப்ப்களுக்குள் நான் ரப்பர் செருப்பு..நான் தோல் செருப்பு..நான்தான் உயர்ந்தவன்..நான்தான்தான் உயர்ந்தவன் என சண்டைவேறு.. ரப்பர் செருப்பு என்பதற்காக காலாலும்..தோல் செருப்பு என்பததற்க்காக அதை தலையிலும் தூக்கி சுமப்பதில்லை..

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சாதி ஒவ்வொரு மனிதனையும் மனநோயாளியாக்கி வைத்துள்ளது என்றார்..பள்ளரும்..பறையரும் அந்த மனநோய் முற்றியவர்களாக உள்ளனர்
... இதை ஒரு அருந்ததியரோ ..வண்ணாரோ சொன்னால் அப்படி இல்லை..அவதாறு என மறுக்கலாம்..ஆனால் நான் பள்ளர்..நான் நிஷத்தை சொல்கிறேன்..

இந்த மனநோயில் இருந்து மீண்டு. " சமத்துவத்தை" ஏற்றுக்கொள்ளாதவரை பள்ளரும் பறையரும் பேசும்  சமத்துவம் சாக்கடைக்கு நிகரானது..

முத்தூராம்  7904633683

No comments:

Post a Comment