Prabhakaran alagarsamy
Via Facebook
2017-05-20
சார் என்னுடைய நிலைப்பாட்டை சுருக்கமா முடிச்சுகிறேன். ஈழத்தமிழர் பிரச்சனையை பொருத்தவரை முதலில் ஈழத்தமிழர்களிடம் ஒரு கருத்தொற்றுமை வரட்டும். மிக முக்கியமாக, இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்பு தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் இவர்களிடையே ஜனநாயக சக்திகள் உருவாக்கட்டும். அவர்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அதனை பொறுத்து தமிழகத்தில் இருப்பவர்கள் எந்த வகையில் உறுதுணையாக இருக்க முடியுமோ அதை செய்யட்டும்.
ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழகம் தன் தகுதியையும் சக்தியையும் மீறி இதுவரை செயல்பட்டிருக்கிறது. நம்மால் சாத்தியமில்லாத வீண் நம்பிக்கைகளை ஈழத்தமிழர்களுக்கு கொடுத்துவந்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து போராடி ஈழ விடுதலையை பெற்றுக்கொடுத்துவிடலாம் என்று யாராவது நம்பினால் அதைவிட பெரிய முட்டாள்த்தனம் இருக்கமுடியாது. நம்ம நிலைமையே இங்க டப்பா டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு.
தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கே இங்கு மக்களைத் திரட்ட முடியாத அவலச் சூழலில் நாம் இருந்துக்கொண்டு, இன்னொரு நாட்டு பிரச்சனையை இங்குள்ள தமிழர்கள் தீர்க்க முடியும் என்று நம்புவது வீண்முயற்சி.
இதில் நமக்குள்ளேயே அவர்கள் துரோகிகள், இவர்கள் தியாகிகள் என்று நம்மை சொறிந்துக்கொள்வது சுத்தப் பேத்தல்!
No comments:
Post a Comment