Thursday, May 11, 2017

வாக்கு எந்திரங்களை மோசடி செய்ய முடியாது?

Thanks : Elango kallanai via Kalai Usilai

அரவிந்த் கேஜரிவேல் மேல் திருட்டுப் பட்டம் சுமத்தி உள்ளே தள்ள முயல்வார்கள் என்பது நான் முன்பே கணித்தேன். இந்திய தேர்தல் கமிசன் முன்னரே இது போல வாக்கு எந்திரங்களை மோசடி செய்ய முடியாது என்று சவால் விட்டது. அப்போது ஆந்திராவைச் சேர்ந்த ஹரிபிரசாத் வெமுறு மற்றும் வி வி ராவ் அடங்கிய ஒரு குழு மகாராஸ்ட்டிர மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்களைக் கொண்டு ரிமோட் மூலமே மோசடி செய்ய முடியும் என்று நிரூபித்தது.

டெக்னிக்கல் துறையைச் சேர்ந்த ஹரிபிரசாத் பல முறை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். மென்பொருள் பொறியாளரான நண்பர் ஹரி அப்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவருடைய பாஸ்போட் முடக்கப்பட்டிருந்தது. அவர் அவ்வப்போது அமெரிக்க சென்று தன்னுடைய நிறுவனப் பணிகளில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் பயங்கரவாதத் தொடர்புகள் என்று அரசு மிரட்டியது. தேர்தல்கள் ஒழுங்காக நடக்கவில்லை என்பதை அந்தக் குழுவுடன் பணிபுரிந்த போதே நான் உணர்ந்தேன். தேர்தல் ஆணையாளர்கள் பலரும் மழுப்பலாகச் சொன்னார்கள். முதலில் அந்த எந்திரம் அரசு பயன்படுத்தும் எந்திரமே இல்லை என்று சாதித்தார்கள். பின்னர் மகாராஷ்டிர போலீசை வைத்து வழக்குப் பதிவு செய்தார்கள். அந்த வழக்கில் இவர் மேல் திருட்டு குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் ஒரு உயரதிகாரியின் துணையோடு தான் நண்பர் தன்னுடைய திறனை காண்பிக்க முன்வந்தார்.

பலமுறை தேர்தல் கமிசனர் முன்னர் நிரூபிக்கத் தயாராக இருந்த போது அவர்கள் அதற்கு சமாளிக்கும் விதத்தில் பதில் சொன்னார்கள். ஆனால் வி வி ராவ் விடாமல் கடிதங்கள் எழுதிய பின்னர் ஒப்புக் கொண்டார்கள், அதுவும் எப்படி வாக்கு எந்திரங்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்யக் கூடாது என்கிற கட்டுப்பாடுகளுடன். அதற்கும் ஒப்புக் கொண்டு செய்து காட்டினார். பின்னர் வழக்கு வேண்டாம் சமாதானமாகப் போகலாம், வாக்கு எந்திரங்களின் தரத்தை உயர்த்த உங்களைப் போன்ற ஆட்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று குரேசி வாக்களித்தார். இந்த சம்பவங்களை மட்டுமல்ல, சுஜாதா போன்ற அபத்தமான ஆட்களின் வாக்கு எந்திரம் பற்றிய வாக்குறுதிகளும் பொய்யென நிறுவியது அந்தக் குழு.
நான் அந்தக் குழுவின் ஆய்வு முடிவுகளை பின்தொடர்ந்தபடி இருந்தேன். அதை முன்வைத்து தமிழினியில் மிகப்பெரிய கட்டுரை ஒன்றையும் எழுதி வெளியிட்டேன்.

2009 தேர்தலில் காணாமல் போன வாக்கு எந்திரங்கள் எத்தனை தெரியுமா? 76. சேதாரப்படுத்தப்பட்ட எந்திரங்கள் மட்டும் இருநூறுக்கு மேல். முதலில் வாக்கு எந்திரங்கள் பாதுக்காப்பான இடங்களில் இல்லை. உள்ளேயும் அவை பாதுகாப்பானவை அல்ல. அதை நிரூபிக்க முயன்றால் உங்கள் மீது திருட்டு வழக்குப் பாயும். அரவிந்த் கேஜ்ரிவால் மேல் பாய்ந்தது அத்தகைய வழக்குத் தான்.
இன்றும் சொல்கிறேன் மக்களாட்சி என்கிற பெயரில் தேர்தலே நடக்காத ஒரு சூழலில் தான் நாம் இருக்கிறோம். இதில் வெற்றி தோல்வி என்பது முன்னரே முடிவு செய்யப்படுகிறது என்பதை நினைக்கையில் அச்சமாக இருக்கிறது.

நாட்டில் உள்ள ஜனநாயகத்தை விரும்பும் மக்கள் இதை பொது விவாதமாக ஆக்க வேண்டும்.

அந்தக் கட்டுரை இணையத்தில் இல்லை. வேண்டுவோர் வாங்கிக் கொள்ளலாம். நம் நாட்டில் தேர்தல் ஒரு கூத்து . அதை நெறிப்படுத்த குரல்கள் பலமாக ஒலிக்க வேண்டும் 49O விற்கு வாக்களிக்கிறேன் என்று ஜனநாயகத்தின் அடிப்படைத் தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறோம். பலநாடுகளில் தடை செய்யப்பட வாக்கு எந்திரத்தை நாம் கட்டிக் கொண்டு அழுகிறோம் ஏனென்றால் ஆட்சியாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. தேர்தலே நடக்காத தேசத்தில் நீதி அல்லது ஊடக தர்மம் மட்டும் நிலைக்குமா என்ன? கேஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. அதுவே கூட இந்தியாவில் அரசியல்த் திருப்பமாக இருக்கக் கூடும்.
மோதி போன்ற ஒரு முரட்டு மூடனின் கைகளில் சிக்கியுள்ள அரசின் நிறுவனங்கள் சிதறி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுடைய ஆட்சியை அதிகாரத்தை நோக்கிய முதலடியே, தேர்தலை சீர்செய்வது தான்.

No comments:

Post a Comment