Friday, May 26, 2017

மகாபாரதத்தில் பிராமணர்கள் பசு மாமிசம் விரும்பி சாப்பிட்டதாக எழுதப்பட்டுள்ளதே

இந்துக்களின் ஐந்தாம் வேதமான மகாபாரதத்தில் பிராமணர்கள் பசு மாமிசம் விரும்பி சாப்பிட்டதாக எழுதப்பட்டுள்ளதே என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
மகாபாரதம் இந்து மத வேதம் அல்ல என்றா?
அல்லது பிராமணர் யாரும் இந்துக்கள் அல்ல என்றா?
----------
“ராக்ஞோ மஹா நஸே பூர்வ
ரத்தி தேவஸ்ய வைத்வேஜ!
அஹந்ய ஹநி பந்யேதே
த்வே ஸஹஸ்த்ரே கவாம் ததா
ஸமாம்ஸ தததோஹ்மங்ஙங்
ரந்தி தேவஸ்ய நித்தியஸஹ
அதுலா கீர்த்திர்பவந். ந்ரூபஸ்ய
த்விஜ ஸத்தம்”
( வனபர்வம் 208 : 8- 10 )
“மஹாநதி சர்மராஸே ருத்க்லேதாத்
ஸங்ஸ்ருஜே யதஹ
த தஸ் சர்மண்வதி த்யேவம்
விக்யாதா ஸா மஹாநதி”
( சாந்தி பர்வம் 29- 23)
------- -----
பிராமண சங்கிருதியின் மகனான ஷத்ரிய அரசன் ரந்தி தேவன் நடத்திய ஒரு விருந்தினர் மாளிகையில் நாள்தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப்பட்டன. அவற்றின் ஈரத்தோல்கள் சமையல் கட்டின் பக்கத்தில் குவிக்கப்பட்டு இருக்கும். அவற்றிலிருந்து கசியும் நீர் ஒரு நதியாக பெருகி ஓடும். அந்த நதியின் பெயர் சர்மண்வதி ( சர்ம-தோல், ணவதி-வெளிப்பட்டு ஓடுதல் )
------------
“ஸாங்க்ருதி ரந்தி தேவம்
சம்ருதம் ஸஞ்சய! ஸுஸ்ரும
ஆஸன் த்விஸத் லாஹஸ்த்ரா தஸ்ய
ஸூதா மஹாத்ம நஹ
க்ருஹாநப்யா கதாத் விப்ராந்
அதி தீந் பரிவேஷகாஹா
( துரோணபருவம் 67- 1-2 )
“தத்ர ஸ்ம ஸூதாஹ க்ரோ ஸாந்தி
ஸூம்ருஸ்ட மணி குன்டலாஹ
ஸூபம் பூயிஸ்ட மஸ் நீத்வம் நாத்ய
மாம்ஸம் யதா புரா”
( துரோணபருவம் 67 -1-2)
சாந்தி பருவம் 27- 28
------------------
ரந்தி தேவனுடைய மாளிகையில் பிராமண விருந்தினர்களுக்கு பசு மாமிசங்களை சமைப்பதற்காக இரண்டாயிரம் சமையல்காரர்கள் இருந்தார்கள். ஆயினும் பிராமண விருந்தினர் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்த காரணத்தால் ` மாமிசம் குறைவாக இருக்கிற படியால் தயவுசெய்து சூப்பை அதிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று சமையல்காரர்கள் கேட்டுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது!
-இது மகாபாரதம் சொல்லும் ஆதாரம் ( ராகுல சாங்கிருத்யாயன் - இவரும் ஒரு பிராமணர் - எழுதிய வால்காவிலிருந்து
கங்கை வரை நூலில் பக்கம் 358 , 359 )

No comments:

Post a Comment