Saturday, May 13, 2017

புஷ்பா புருஷனை தான் இங்கே கிண்டல் செய்வார்கள் , ஜெமினி பொண்டாட்டியை அல்ல

Shahin Maria Lawrence
Via Facebook
2017-05-12

புரியாத புதிர் என்று ஒரு படம் அதில் ரகுவரன் முதலிரவில் தன் மனைவி 'react ' செய்யும் விதத்தை வைத்து , அவர் ஏற்கனவே  'experience ' ஆனவர் என்கிற பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்து கொள்வார் . அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் மனைவியை சந்தேகித்து சித்ரவதை செய்து என்று படத்தின் போக்கு இருக்கும் . ரகுவரனின் கதாபாத்திரத்தை போலவே பெரும்பாலான இந்திய ஆண்களுக்கு தனக்கு வரப்போகும் மனைவி 'virgin '  ஆ இல்லையா என்கின்ற மாபெரும் குழப்பம் இருக்கிறது . இந்த விஷயத்தை கண்டுபிடிக்க இவர்கள் கையாளும் வழிகள் விசித்திரமானவை , உண்மைக்கு துளியும் சம்பந்தம் இல்லாதவை .
இந்த வழிகள் செவி வழி செய்தியாக அவர்களுக்கு பகிர பட்டவை , இந்த வழிகள் ஆண்களின் மூளைக்குலேயே உதித்து அவர்களுக்குளேயே சரக்கு பார்ட்டிகளில் , ஆபிஸ் சிகரெட்டு இடைவேளைகளில் , வாட்ஸாப்ப் குரூப்களிலும் சிரிப்பும் கும்மாளமுமாக பகிர பட்டவை .
"மச்சான் அவ மூக்கு பெருசா இருந்தா அவ பெண் உறுப்பு பெருசா இருக்கும்  "
" அவ கீழ் உதடு பெருசா இருந்த அவளுக்கு மேட்டர் ல interest ஜாஸ்தி மச்சான்   "
" மாப்ள... மேக் அப் போடற  பொண்ணுங்க  எல்லாம் ஐட்டம் டா ... So ... மேக் அப் போடாத பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க டா  "
போன்றவை இவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள்  .

இவர்களின் இன்றைய ஒழுக்க ஆராய்ச்சிகளின் நவீன வடிவம்தான் பெண்களின் கன்னித்தன்மையை பற்றி
வெளிவரும் மீம்கள் . இன்றைய ஆராய்ச்சி இளைஞனுக்கு இந்த மீம்ஸுகள் தான்  கையேடுகளாக உபயோகப்படுகின்றன .
இவர்களின் இந்த ஆராய்ச்சிகளையும்
, பிரகடனங்களையும் பார்த்து விட்டு சிரித்து செல்ல முடியாது . இந்தியாவில் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி. ஏன் தெரியுமா ?  இங்கே பெண்களின்  வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக சிரிப்பாய் சிரித்து கொண்டிருக்கிறது...

இதில் முக்கியமாக கைம்பெண்கள்  மற்றும் விவாகரத்தான பெண்களின் வாழ்க்கை  இன்னும் பல்லிளித்து கொண்டுதான் இருக்கிறது . 1856 ஆண்டு பண்டிதர் ஈஸ்வர சந்திரா வித்யாசாகர் அவர்கள் ஆங்கிலேயர்கள் துணையோடு 'கைப்பெண்கள் மறுமண சட்டத்தை '  கொண்டு வந்ததுடன் இவர்களுக்கு சட்ட ரீதியாய் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்தன ஆனால் சமூக பிரச்சனைகள் , சமூக இழுக்குகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .

என்னதான் திருமணம் என்பது கட்டாயம் என்கிற நிலை மாறி அது பெண்களுக்கு 'lifestyle choice '  ஆக ஆகி இருந்தாலும் திருமணத்தில் நாட்டமுள்ள பெண்களுக்கு மறுமணம் என்பது இந்த நாட்டில் இன்றும் கூட ஒரு கசப்பான அனுபவமாய் தான் இருக்கிறது என்பது நிதர்சனம் . அதற்கு முக்கிய காரணம் அவர்களின் 'sexual status /பாலியல் தகுதி '.
கைம்பெண்களுக்கும் , விவாகரத்து ஆனவர்களுக்கு இந்த சமூகம் வைத்த செல்ல பெயர்  'used piece '  'second hand ' . ஆண்களுக்கு இத்தகைய பெயர்கள் இல்லை ஏனென்றால் அவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் .

இந்த 5 வருடத்தில் என்னிடத்தில் counseling கிற்கு வந்த  மறுமணத்தை எதிர்பார்த்திருந்த பெண்கள் பெரும்பாலானவர்களிடம் பெண் பார்க்கும் படலத்தில் ஆண்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்வி    'are you a virgin ', 'was it just oral sex  ',  how many times you had sex ' 'விவாகரத்துக்கு அப்பறமா sex மூட் வந்து இருக்குமே , இவ்ளோ நாள் தனியா எப்படி மேனேஜ் பண்ண  ' .  இதில் மிகவும் அற்புதமான விஷயம் என்ன வென்றால் அந்த பக்கத்தில் இருந்து கேள்வி கேட்ட ஆண்கள் பலருக்கும் அது மறுமணம் .

இன்னும் சொல்லப்போனால் மேட்ரிமோனி இணையத்தளங்களில் மறுமணம் பதிவு செய்திருக்கும் ஆண்கள் பெரும்பாலானோர் கேட்பது ' unmarried  '  பெண்களைத்தான் .
எனக்கு தெரிந்த ஒரு கைப்பெண்ணை ஒருவர் காதலித்து ஏமாற்றி விட்டார் நியாயம் கேட்க போனவரிடம் அந்த உத்தமன் சொன்னது  "நீ ஆல்ரெடி எல்லாம் பாத்தவ தானே ... ஏதோ கன்னி பொண்ண மாதிரி பொலம்புற ?

இத்தகைய நிலையில் இருக்கும் பெண்களுடன் பாலியல் தொடர்பு  வைத்து கொள்ள விரும்பும் இவர்கள் திருமணம் செய்துகொள்ள மட்டும் துணியாத காரணம் சமூகம் இவர்களை எப்படி நடத்த போகிறது என்கிற அச்சத்தினால் மட்டுமெ . உடல் ரீதியாக எந்த வேறுபாடு இல்லாவிட்டாலும் , சமூக பார்வைக்கு மட்டுந்தான் இந்த 'virgin'     'experience'  எல்லாம் . இது ஒரு  சமுக  குறியீடு .

திரைப்படங்களில் கூட ஒரு பெண்ணுக்கு மறுமணம் ஆக வேண்டுமானால் ஒன்று திருமணம் ஆன இரண்டு மணி நேரத்திலேயோ அல்லது முதலிரவு முடியும் முன்னமே கணவன் இறந்திருக்க வேண்டும் . இல்லையெனில் தாம்பத்திய வாழ்வு நடக்காமலேயே கணவன் அவளை விட்டு சென்றிக்கவேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே ஹீரோ அவளை திருமணம் செய்துகொள்வார் .

இத்தைகைய சூழல்களால் மறுமணம் வாழ்க்கைக்குள் நுழைய முடியாத சில பெண்கள் அதற்கு வெளியே ஒரு துணையையை ஏற்படுத்தி கொண்டால்  அவர்களை இந்த நிலைக்கு தள்ளிய சமூகமே  அவர்கள் மீது  'கள்ளக்காதல் ' என்கிற வார்த்தை பிரயோகத்தை நிகழ்த்துகிறது . இது பெண்கள் மீது நடக்கும் மிக பெரிய வன்முறை - Passive Violence .

யார் பேச்சை கேட்டு ரகுவரன் கதாபாத்திரம் அவன் மனைவியை கொடுமை செய்ததோ அந்த மீமை ஆதாரமாக  வைத்து அத்தகைய  சந்தேகங்கள்  இன்னொரு  ஆணுக்கும்  அவன்  மனைவி மேல்  வரலாம் , அறிவியல் ரீதியாக அந்த மீமில் வந்த   விஷயங்கள்  தவறென்றாலும் கூட .

இங்கு பெரும்பாலான ஆண்கள் இரண்டு விஷயங்களை புரிந்து  கொள்ள  வேண்டும்

ஒரு பெண் கன்னியா , முன்னனுபவம்
உள்ளவளா என்பதை அந்த பெண் சொன்னால்தானே ஒழிய அவளின் உடல் எந்த காலத்திலும் காட்டி கொடுக்காது . இயற்கை அவர்களை அப்படிதான் படைத்திருக்கிறது . தாம்பத்தியம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே கொண்டுசெல்ல வேண்டியது . பெண்கள் எந்த நம்பிக்கையோடு தாம்பத்யத்திற்குள் நுழைகிறார்களோ அத்தகைய நம்பிக்கை ஆண்களுக்கும் தேவை .

இரண்டாவது , வாழ்க்கை  துணை என்பது ஒரு ஐந்து அடி , 55 கிலோ சதை அல்ல . வாழ்க்கை துணை என்பது மனம் , குணம் , உணர்ச்சிகள் எல்லாம் சேர்ந்த ஒரு உயிர் . வெறும் sexual status  - பாலியல் தகுதியை வைத்து ஒருவரை திருமணம் செய்வது நாம் அவரை வெறும் சதை பிண்டமாக மட்டுமே பார்க்கிறோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது .

பெண்ணைகளை இழிவுபடுத்தும் ஒரு சமுதாய பார்வையை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு கருத்தையும் , பிரச்சாரத்தையும் எந்த கலை வடிவில் கொடுத்தாலும் அதை பெண்கள் எதிர்த்துக்கொண்டே தான் இருப்பார்கள் . அதை பார்த்து சிரித்து விட்டு போக அவர்கள் மூளை இல்லா முட்டாள்கள் அல்ல .

ஏன்னென்றால் புஷ்பா புருஷனை தான் இங்கே கிண்டல் செய்வார்கள் , ஜெமினி பொண்டாட்டியை அல்ல .

Shalin

No comments:

Post a Comment