Sunday, May 28, 2017

எனக்கு இட்லி பிடிக்காது. நாளைல இருந்து நீ இட்லி சாப்ட . . . த்தா வெட்டிடுவேன் !!

V Tamizhvanan
Via Facebook
2017-05-28

A: டேய் மாட்டு கறிய எல்லாம் சாப்ட கூடாது டா.

B: ஏன் டா ?

A: ஏனா மாடு நமக்கு பால் தருது. அம்மா மாதிரி. அத எப்டி சாப்புடுறது ?

B: எப்டி டா 6 அறிவுள்ள அம்மாவ, 5 அறிவுள்ள ஒரு மிருகத்துக்கு கூட கம்பேர் பன்ற ??

A: ஆமா ! அம்மாக்கு அப்றம் நமக்கு பால் கொடுக்றது மாடு தானே ??

B: இரு உனக்கு விளக்கமா சொல்றேன்.
மாடு ஒரு காலத்ல காட்டு விளங்கு.
எப்படி மான், குதிரை எல்லாம் காட்ல சுத்திட்ருக்கோ அப்படி சுத்திக்ட்டு இருந்த ஒரு மிருகம் தான் மாடு.
மனிஷன் இயற்கையிலேலே ஒரு வேட்டை விளங்கு.
விவசாயம் பன்னி சோறு சாப்பட்றதுக்கு முன்னாடி வேட்டையாடு இறைச்சிய தான் சாப்டான்.
மாட்டையும் அப்படி தான் வேட்டையாடி சாப்டான்.
மத்த விளங்குகள விட மாட்டுக்கு அதிகம் பால் சுறக்கும் தன்மை இருந்துச்சு.
அதனால மாடுங்கள பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாட ஆரம்பிச்சான்.
இன்னிக்கு நீங்க வீட்ல வளக்ற மாடுகளோட முன்னோர்கள் எல்லாம், ஏதோ ஒரு காட்டுல பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்ட உயிர்கள் தான்.
எந்த மாடும் தானா வந்து இந்தா என் பால கரந்துக்க னு சொல்லல.
மாடு அதோட குட்டிக்கு தான் பால வச்சி இருக்கு.
உங்க அம்மாவும் உனக்கு தான் பால வச்சி இருக்காங்க.
மாடு அதோட குட்டிக்கு சுறக்ற பால . . . அத கட்டி போட்டு கொடும பன்னி பால திருடி சாப்புட்றது நியாயமா என்ன ??
அம்மா கூட கம்பேர் பன்றயே, அம்மாவ என்ன அப்டி கட்டு போட்டு கொடும பன்னியா பால் கரந்து குடிச்ச ?

A: டேய் இல்ல டா ! ஓவரா பேசாத !

B: பின்ன எப்டி டா ?
ஒரு காலத்ல இந்த நாட்ல எல்லோரும் மாட்டுக்கறி சாப்ட்டுக்டு தான் இருந்தோம்.
இன்னைக்கு அந்த பழக்கம் பார்ப்பனியத்தால சிலர் கிட்ட இருந்தஉ போயிடுச்சு.
சிலர் கிட்ட இன்னும் இருக்கு.
சரி விருப்பமில்லாதவங்க சாப்ட தேவ இல்ல. அது அவங்க விருப்பம்.
விருப்பம் இருக்கவங்க சாப்புட்றதுல உனக்கு என்ன ப்ரச்சன ?

A: இல்ல டா ! அது அவ்ளோ பெரிய உயிர். கொள்ளலாமா ?

B: ஓ உன் வழிக்கே வறேன். 150 பேர் சாப்டணும்னா எத்தன கோழி உயிர கொள்ளணும் ?

ஒரு 60 கோழி

150 பேர் சாப்டணும்னா எத்தன ஆட்டு உயிர கொள்ளுவ ?

ஒரு 15 ஆடு

150 பேர் சாப்டணும்னா ஒரே ஒரு மாட்ட தான் கொள்ள வேண்டி இருக்கும்.

மிருகங்கள கொள்றது தப்புனு எந்த அறிவியல் டா சொல்லுது ?
மிருக சுழர்ச்சில ஒவ்வொரு மிருகமும் இன்னொரு மிருகத்த கொண்ணு தான் சாப்பிடுது. அப்டி சாப்டா தான் எல்லா மிருகங்களும் உயிர் வாழும்.

அது மட்டுமில்ல. மிருகங்கள உணவு தேவைக்காக தவிற வேறு எதுக்கு கொண்ணாலும் தப்பு தான். தேவைக்காக மிருகங்கள கொள்றது இயற்கை நியதி.

A: அய்யோ ! என்ன ஆள விடு டா ! எனக்கு மாட்டு கறி சாப்புட்றது புடிக்ல. யாரும் சாப்ட கூடாது.

B: ஏன்டா நாயே !!! உன்ன ஒரு மனிஷன்னு மதிச்சு இவ்ளோ நேரம் விளக்கும் கொடுத்தேன்.
எனக்கு இட்லி பிடிக்காது. நாளைல இருந்து நீ இட்லி சாப்ட . . . த்தா வெட்டிடுவேன் !!

No comments:

Post a Comment