Sivasankaran Saravanan
Via Facebook
2017-08-11
பொது அறிவுக்கேள்வி:
ஆசியாவிலேயே பாம்புக்கடி விஷ முறிவு மருந்தை இலவசமாக தருகிற ஒரே மாநிலம் எது?
விடை:
தமிழ்நாடு
அதுவும் ஒவ்வொரு 20 கிலோமீட்டர் சுற்றளவிலும் மருந்து இலவசமாக கிடைக்கிறது. ஏன் மற்றவர்களால் முடியவில்லை என்றால் விஷ முறிவு மருந்துகள் விலை அதிகம் .
விஷ பாம்புக்கடி 90 சதவீதம், கிராமங்களில் தான் நடக்கின்றன. இருந்தும் இந்த மாநிலம் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் உலகத்திற்கே வழிகாட்டியாக உள்ளது. கிராமங்களில் நிகழ்கிறவற்றை தடுப்பதுதான் அரசுக்கு பெரும் சவால். ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருந்து கிடைப்பது பெரிதல்ல. ஆரம்ப சுகாதார மையங்களிலும் தமிழகத்தில் கிடைக்கிறது. எனவே இது மகத்தான சாதனை.
அதுமட்டுமின்றி இந்த மாநிலத்தில் தான் பாம்பு விஷ முறிவு மருந்துக்கான ஆராய்ச்சி மையம் இருக்கிறது . இங்கிருந்து தான் தெற்காசியா முழுவதும் விஷ முறிவு மருந்துகள் செல்கின்றன..!
இதே போல நாய்க்கடிக்கும் இலவச மருந்து இங்கேதான். என் நண்பன் இரானுவத்தில் இருக்கிறான் அங்கே அவனுக்கு நாய்கடித்துவிட்டது அங்குள்ளவர்கள் அவனுக்கு டி டி போட்டு தமிழ்நாடு என்றதும் லீவ் கொடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டு இருக்கிறார்கள். அங்குதான் நாய்க்கடிக்கு சிறந்த சிக்கிசை உள்ளது என்று.
பாம்புக்கடி மருந்து கள் நமது அரசு மருத்துவமனைகளில் எப்போதும் உள்ளது. நமது அரசு மருத்துவர்கள் பாம்புக்கடியை திறம்பட கையாள்வார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தான் மற்ற மருத்துவர் களைக் காட்டிலும் அதிக அனுபவம் உண்டு. ஒரே சிக்கல் என்ன வெனில் நோயாளியின் உடன் வருவோர் கொடுக்கும் தொல்லைகள் தாங்க முடியாது.
சார் உங்களால முடியாதுனா சொல்லுங்க.
நாங்கள் பிரைவேட்ல பார்த்துக்குறோம், அப்பல்லோவுக்கே போறோம். இப்படி அலப்பறை விடுவார்கள்.
"அய்யா சாமிகளே! அங்கே எல்லாம் பாம்புக்கடி மருந்து இல்லப்பா. நீங்கள் போனாலும் திருப்பி அரசு மருத்துவமனைக்குத் தான் அனுப்பி விடுவார்கள். சொல்றத கேளு" - என சமாளித்து வைத்தியம் பண்ணனும்.
மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு தான் மிகச்சிறந்த கட்டமைப்பு கொண்ட மாநிலம். அதை பொறுத்துக் கொள்ளமுடியாத கயவர்கள் தான் தற்போது இதை சிதைக்க நீட் லொட்டு லொசுக்கு என கொண்டுவருகிறார்கள்.
No comments:
Post a Comment