Friday, August 25, 2017

விநாயகர் - சில கேல்விகள்

Mathi mathi
Via Facebook
2017-08-24

1.)பார்வதி தன்னோட உடலில் இருந்த அழுக்குகளை திரட்டி உருட்டி  ஒரு குழந்தையை(விநாயகரை)  உருவாக்க முடியும்  என்றால்  பார்வதி எத்தனை ஆண்டுகள் குளிக்காமல்  இருந்திருப்பார்?

2.) அழுக்குகளையே  உடலில் இருந்து திரட்டி எடுத்த பிறகு  ஏன் குளிக்க வேண்டும்?

3.) நாமெல்லாம் ஒரு நாள்  குளிக்காவிட்டாலே நம் உடலில் உள்ள வியர்வை துர்நாற்றம் தாங்க முடியவில்லை. ஆனால்  ஒரு குழந்தையை( விநாயகரை)  உருவாக்கக் கூடிய அளவிற்கு பார்வதியின் உடலில் அழுக்கு இருந்திருக்கின்ற போது  பார்வதியின் மீது எவ்வளவு துர்நாற்றம் வீசும். அவ்வளவு  துர்நாற்றத்தில் சிவன் எப்படி பார்வதியோடு குடும்பம் நடத்தினார்?

4.) பார்வதி தன் அழுக்கில் உருவாக்கிய( விநாயகர்)  குழந்தை பேசுகின்ற  அளவிற்கு வளருகின்ற வரை சிவனுக்கே தெரியாதா?

5.) பிள்ளையை தெரியாத தகப்பன் எங்காவது உண்டா? சிவனுக்கு தன் பிள்ளையை( விநாயகரை) தெரியாவிட்டால்  யாருடைய தவறு?

6.) சரி அதை விடுங்கள்  பார்வதியின் வீட்டின் குளியலறையில்  கதவு இல்லையா?  கதவு இல்லாத வீடு  எங்காவது உண்டா? அதுவும் பார்வதி வீட்டு குளியலறையிலே கதவு இல்லாவிட்டால்  ஏழை எளிய மக்களின் வீட்டில் என்ன செய்வது?

7.) கதவு இல்லாததற்கு பதிலாக விநாயகரை காவலுக்கு வைக்கும் போது  தலையில் சடையோடும் கழுத்தில் பாம்போடும்  ஒருவர் வருவார் அவர் உனது அப்பா என்றும் அவரிடம் சண்டையிடாதே என்றும் விநாயகரிடம் பார்வதி சொல்லியிருக்க வேண்டுமல்லவா?

8.) சரி  சிவனை உள்ளே செல்ல விநாயகர் அனுமதிக்காத போது  சிவன் ஏன் அவசரப் பட வேண்டும்? பார்வதி குளித்து விட்டு வரும் வரை காத்திருக்கலாமே?

9.) உள்ளே செல்ல  அனுமதிக்காதது குற்றமா?  இந்த  காரணத்திற்காக  விநாயகர் தலையை  வெட்டுவதா? இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?
( பெண்களை கற்பழித்தவன்,சாதிய ஆணவக் கொலை செய்தவனெல்லாம்  வெளியில் திரிகின்றான் அவனையெல்லாம் என்ன செய்வது?

10) சரி விநாயகர் தலையை வெட்டினால்  மீண்டும் மனித தலையை பொருத்தினால் தானே பொருந்தும்?யானை தலை எப்படி பொருந்தும்?யானைக்கு  5 அறிவு மனிதனுக்கு 6 அறிவு? மனித கழுத்தின் சுற்றளவு எவ்வளவு யானை கழுத்தின் சுற்றளவு எவ்வளவு? யானை தலையை விநாயகர் கழுத்தில் பொருத்தினாலும்  முகம் வானத்தை மேல் நோக்கி தானே பார்க்கும் தும்பிக்கை தானே பாக்கவாட்டில் இருக்கும்? ஆனால் முகம் பக்கவாட்டில் நம்மை நோக்கி இருக்கிறது தும்பிக்கை தரையை நோக்கி இருக்கிறதே? எப்படி இதெல்லாம் சாத்தியம் ? பொருத்தமே( லாசிக்கே) இல்லையே?

11).) சரி 5- அறிவு விநாயகரை  எப்படி 6- அறிவு மனிதன் கடவுளாக ஏற்க முடியும்?

12.) யானையை விட மனிதன் உயர்ந்தவனா? மனிதனை விட யானை உயர்ந்ததா?

No comments:

Post a Comment