Devi Somasundaram
Via Facebook
2017-08-03
கோடு தாண்ட கூடாதா ராமன்கள், இயக்கவாதிகள்.
அதென்ன ராமன்களுக்கு மட்டும்னு கேட்கலாம். சீதைகளுக்கு தான் ஏகப்பட்ட கோடுகள் ஏற்கனவே இருக்கே மேலும் இயக்கவாதிகளில் ஜெண்டர் பார்க்க தேவை இல்லைன்னும் எடுத்துகலாம். *ஒரு இயக்கவாதி இப்படி தான் இருக்கனும் என்ற கட்டுபாடுகள் உண்டா என்றால், ஆம் உண்டு*
*இயக்கம் என்பது என்ன?*
மக்கள் என்பவர்கள் சாதாரண சமுக குழு. அவர்கள் மீதான ஆதிக்கத்தை எதிர்க்க வலுவற்ற சாமன்யர்கள்.அவர்கள் உரிமைகாக, விழிப்புணர்வுகாக அமைப்பை எதிர்த்து போரடுவதும்,செயல்படுவதும் தான் இயக்கம்..
இயக்கவாதிகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற இயக்கத்தின் கட்டுபாடுகள் தாண்டி தனி மனிதனாக ஒரு இயக்கவாதியின் பொறுப்பு
1) அவரது பொருளாதார நாணயம்.
2) அவரது ஒழுக்க நாணயம்.
3) அவரது நேர்மை.
இவை ஒவ்வொரு இயக்கவாதியும் கட்டாயம் கடை பிடித்தே ஆக வேண்டியவை.
*ஏன் இயக்கவாதி பொருளாதார நேர்மையுடன் இருக்கனும்.?*
போராட்டத்தின் மூலம் எதிர்க்க படும் அமைப்பின் வலிமை நேர்மையால் தான் எதிர்க்க பட இயலும். நேர்மையற்ற இயக்கவாதி பாஸிஸத்திற்கு விலை போக வாய்ப்புண்டு. இரண்டாவது மக்கள் நம்பிக்கை பெற நேர்மை மிக முக்கியம்.
எற்கனவே பாஸிஸ அடக்கு முறைக்குள் சிக்கிய மக்கள் தங்கள் நம்பிக்கைகாக ஒருவரை சந்தேகத்தோடு அணுக முடியாது. அவரது நாணயமற்ற தன்மை அவர் மீதான நம்பிக்கை உடைத்தால் அது இயக்கத்தின் தோல்வியாக கூடும்.
*இவை தவிர்த்து சாதாராண மக்களுடன் பழகும் போது இயக்கம் குறித்த கடுமை தன்மை வெளிபடுத்த கூடாது*
உதாரணமா ஒரு பிரபல இயக்க வாதி சொன்னதை பார்க்கலாம் "போராட்டத்தின் மீட்சியை ஒரு போராளி வெளிபடுத்த கூடாது, அது இளம் போராளிகள் மனதில் அச்சத்தை உருவாக்கும். கைது, போலிஸ், சித்ரவதை, அடி, வலி இவற்றை போராளி வெளியில் சொல்லவே கூடாது. இளம் தலைமுறை மனதில் அச்சம் ஏற்படுத்தும். அதே நேரம் போராட்டத்தின் விளைவை சொல்லி கொண்டே இருக்கனும். இந்த உரிமை இந்த போராட்டத்தால் தான் கிடைத்தது என்பதை சொல்லனும். அது போராட வேண்டும் என்ற ஆர்வத்தை இழந்தவனிடம் ஏற்படுத்தும்.
*பொது வெளியில் ஒரு இயக்கவாதின் பொருமை எல்லை மீறவே கூடாது*
ஆயிரம் பேர் கூடி இருக்கும் இடத்தில் அடிச்சுட்டாங்கன்னு சத்தம் வந்தா உடனே ரியாக்ட் செய்ய கூடாது. அது வன்முறையை கட்டவிழ்த்து விடும். மேலும் தடுமாறும் கூட்டத்தை கட்டு படுத்த தெரியனும். நிதானமும், அடுத்து என்ன செய்யனும் என்ற திட்ட மிடலும் தான் இயக்கவாதியாய் இருப்பவன் அறிதல் .
*எந்த சூழலிலும் இயக்க தலைமைகளை தனிபட்ட ரீதியில் விமர்சிக்க கூடாது*
இயக்க சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் குற்றம் சாட்டனும். நம் அறியாமை தலைமையை தாழ்த்தி விட்டால் அது இயக்கத்தின் அழிவை நிச்சய படுத்தி விடும்.
*எந்த அமைப்பை எதிர்க்கிறோமோ அதன் அமைப்பு தன்மையை மட்டுமே எதிர்க்கனும்*
சாதாராண மனிதர்கள் உங்க அம்மா யாரு அப்பா யாருன்னு தனி மனிதன் சார்ந்த எதிர்ப்பை எப்பொழுதும் செய்ய கூடாது. அது அமைப்பின் கருத்தியல் தோல்வியாய் முடியும்.
இவ்லோ பேசறியே நீ பெரிய அப்பா டக்கரான்னு கேட்டா... 5 வயசுலேர்ந்து அப்பா கைய புடிச்சுட்டு இயக்க கூட்டங்களில் நின்ற அனுபவத்தை இங்கே ஆவண படுத்தினேன். அவ்வளவே.
இவ்லோ பேசறியே நீ ஏன் இயக்கவாதியா இல்லன்னு கேட்கலாம். சிம்பில்... இவ்லோ கட்டுபாடுகளை ஏற்கும் அளவு பொறுமை இல்லை..
இவை இறுதியானவை இல்லை..நான் அறிந்தவை மட்டுமே, மேலும் அறிந்தவர்கள் தொடரலாம்..
#இயக்கவாதிகள்..
No comments:
Post a Comment