Wednesday, August 9, 2017

கலைஞர் மட்டும் பலமனைவி கொண்டவராகவும் எம் ஜி ஆர் பொன்மனச்செம்மலாகவும் அறியப்பட்ட பொதுப்புத்தியின் உளவியல்

Joe Milton
Via Facebook
2017-08-09

தன்யா என்ற பத்திரிகையாளருக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நடக்கும் அக்கப்போருக்குள் போக விரும்பவில்லை . அதை தொடர்ந்து இந்த அம்மையார் கலைஞர் மீது காழ்ப்புணர்வை கொட்டிய பழைய டிவீட்டுகளை சிலர் பகிர்ந்ததால் படிக்க நேர்ந்தது . அதில் பல கலைஞரின் மூன்று மனைவி வாழ்க்கையை முன்வைத்து மிகக் கேவலமாக பகடி செய்வதாக இருந்தது . 

இதை இவர் மட்டும் செய்யவில்லை . ஒருவருக்கு எத்தனை மனைவிகள் , அவர் அதை ஏன் செய்தார் , அவர்கள் வாழ்க்கை என்ற தனிப்பட்ட விடயங்களை வைத்து பொதுவாழ்வின் தகுதி பேசும் அபத்தத்தை எல்லாம் தாண்டி எனக்கு பலமுறை தோன்றியது வேறொன்று .

கலைஞரின் முதல் மனைவி ஒரு மகனை பெற்றெடுத்து பின்னர் இளம் வயதிலேயே இறந்து விடுகிறார் . எம்.ஜி.ஆரின் முதல் மனைவியும் அதே போல (அவருக்கு ஒரு குழந்தை கருவுற்று இறந்து விட்டது என சொல்வாரும் உண்டு) இளம் வயதிலேயே இறந்து விடுகிறார் . கலைஞருக்கு இரண்டாம் திருமணம் ஆகி குழந்தைகள் பிறக்கிறது . எம் .ஜி . ஆருக்கும் இரண்டாம் திருமணம் ஆகிறது .  இரண்டாம் மனைவியோடு வாழ்ந்து வந்த கலைஞர் தன்னோடு நாடகத்தில் நடித்த ராசாத்தியை மூன்றாவது மனைவியாக்கிக் கொள்கிறார் . அதே போல இரண்டாம் மனைவியோடு வாழும் போதே தன்னோடு சினிமாவில் நடித்த ஏற்கனவே மணமான ஜானகியை எம் ஜி ஆர் மணந்து கொள்கிறார் . பின்னர் இரண்டாவது மனைவி இறந்தார் , ஜானகியை தாண்டிய வரலாறெல்லாம் விட்டுவிடுவோம் .

இதில் கலைஞர் மட்டும் பலமனைவி கொண்டவராகவும் எம் ஜி ஆர் பொன்மனச்செம்மலாகவும் அறியப்பட்ட பொதுப்புத்தியின் உளவியல் காரணம் என்ன ?

No comments:

Post a Comment