Sivasankaran Saravanan 
Via Facebook 
2017-08-25
வன்புணர்வு செய்த வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு ஆதரவாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. ஹரியானாவில் சுமார் 25 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி நம்ப முடியாத அதிர்ச்சியை கொடுக்கலாம். *என்னடா ஒரு பொறுக்கி சாமியார் ரேப் பண்ண கேஸ்-ல தண்டிக்கப்பட்டுள்ளார், இதை கண்டித்து யாராவது கலவரத்தில் ஈடுபடுவார்களா?* என ஆச்சரியப்படுவார்கள். *ஏன்னா ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது இட்லி சாப்பிட்டுட்டு எலக்ட்ரிக் ட்ரெயின்ல வேலைக்கு போயிட்டு வந்த மாநிலம் நம் தமிழ்நாடு*. அதனால் ரேப்பிஸ்டுக்கு ஆதரவா கலவரம் பண்றதெல்லாம் நமக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனால் இதுதான் ஹிந்துத்வ வட இந்தியா.
இந்த நிலையைத்தான் தமிழ்நாட்டில் கொண்டுவர காவிகள் விரும்புகிறார்கள். இதற்குத் தடையாக திராவிட உணர்வு அவர்களை ரொம்பவே காயடிக்கிறது. அதனால் தான் நேரடியாகவும் அல்லக்கைகளை விட்டும் திமுக அதிமுக ஒழியவேண்டும், கழகங்கள் இல்லா தமிழகம் என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
ஹரியானாவில் பாஜக தான் ஆட்சி செய்கிறது. கலவரங்களை அனுமதிப்பது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால் செல்வாக்கு குறையும்போதெல்லாம் கலவரத்தை முன்னெடுப்பது தான் ஆர்எஸ்எஸ் பழக்கமே. தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த ரேப்பிஸ்ட் சாமியாரை அளவுக்கதிகமாக புகழ்ந்து பேசினார் ஒரு அரசியல் தலைவர். அந்த தலைவர் வேறு யாருமல்ல, இந்தியத் திருநாட்டின் பிரதமரான மோடி தான்.
 
No comments:
Post a Comment