Friday, August 25, 2017

பிள்ளையார் கதை

பாபு pk
Via Facebook
2017-08-24

நீங்க யாரும் கேக்க மாட்டீங்க. அதுனால நானே சொல்லித் தொலைக்கிறேன்.

பார்வதியம்மா குளிக்கப் போகும்போது, உடம்புல இருக்குற அழுக்கை எல்லாம் திரட்டி ஒரு புள்ளைய செஞ்சு காவலுக்கு வச்சுட்டு குளிக்க போனாங்களாம். (அதான் அழுக்கெல்லாம் எடுத்தாச்சே... அப்புறம் எதுக்கு குளிக்கப் போகனும்? ஷ்...சூ... கதையைக் கேளுங்க.)

அப்ப பார்வதியம்மாவைப் பார்க்க வந்த பரமசிவனய்யாவை அந்தச் சின்னப்பையன் தடுத்தானாம். (குளிக்கும்போது இவரு எதுக்கு பாக்கபோகனும்? ஷ்...சூ... கதையைக் கேளுங்க.)

என்னையாடா தடுக்குறன்னு அவங்கூட மல்லுக்குப் போறாரு இந்த பெரியமனுஷன். பயங்கரமான சண்டை. கடைசீல அந்தச் சின்னப் பையன் தோத்துப் போயிர்றான். தோல்வின்னா, தலை போன தோல்வி. ஆமா, நெஜமாவே தலை சிதைஞ்சு போயிருச்சு. ஆனா, உடம்புக்கு ஒன்னும் ஆகாம நல்லா இருக்கு.

குளிச்சுட்டுத் தலையைத் துவட்டிக்கிட்டே வந்த பார்வதியம்மா, அந்த முண்டத்தைப் (அட, தலையில்லாத முண்டத்தைதாங்க.) பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டாங்களாம். பக்கத்துல நின்ன ஐயாவைப் பார்த்து, என் புள்ளையை இப்டீ பண்ணிட்டீங்களேன்னு கதற, அவரு "என்ன இவன் உன் பிள்ளையா?"ன்னு டர்ரியலாகிப் போயி கேக்க... அப்புறந்தான் அந்தம்மாவுக்கும் உறைக்க, பதார்த்தமா நடந்ததைச் சொல்றாங்க. (அட, அழுக்குப் பிள்ளைதானே, போனா போகட்டும்னு விட வேண்டியதுதானே? ஷ்...சூ... கதையைக் கேளுங்க.)

அவரும் ரெட்டை மனசோட சமாதானமாகி, "சரி சரி, நடந்தது நடந்து போச்சு, எதாச்சும் பண்றேன்"னு சொல்லிட்டு, பூதகணங்களைக் கூப்பிட்டு, "எல்லாப்பக்கமும் போங்க. வடக்கே தலை வச்சுப் படுத்துருக்க எந்த உயிரினம் முதல்ல கண்ணுல பட்டாலும், அது தலையை வெட்டி எடுத்துட்டு வாங்க"ன்னு சொல்லி அனுப்பினாராம். (அவரு என்ன வடக்குப்பட்டி ராமசாமியா? ஷ்...சூ... கதையைக் கேளுங்க.)

அதுங்களும் போயி ஒரு அப்பாவி யானை அந்த மாதிரி வடக்குப் பக்கமா தலைவச்சுப் படுத்துருக்கதைப் பாத்து அது தலையை வெட்டி எடுத்துட்டு வந்துருச்சுங்களாம். (ஃபாரஸ்ட் ரேஞ்சர்ஸ்லாம் ஒன்னும் சொல்லலையா? ஷ்...சூ... கதையைக் கேளுங்க.)

அந்தத் தலையை அந்த முண்டத்துல ஒட்டிக் கொடுத்துட்டாராம். பார்வதியம்மாவுக்கும் ஜாலியாம். எங்கே போனாலும் அவனைக் கூட்டிக்கிட்டே போவாங்களாம். பாக்குறவங்கள்லாம், பிள்ளை யார், பிள்ளை யார்னு கேக்க, பேரே பிள்ளையார்னு ஆகிப் போச்சாம்.

மாரல் ஆஃப் த ஸ்டோரி : கடவுளா இருந்தாலும் குளிக்கலேன்னா அழுக்குப் பாண்டல்தான்.

இப்ப என்னோட கவலை என்னன்னா, உடம்புல இருந்த அவ்ளோ அழுக்கை வச்சு ஒரு புள்ளையையே செய்ய முடிஞ்ச பார்வதியம்மா, இன்னும் ரெண்டு நாளு குளிக்காம இருந்துட்டு அப்புறமா அழுக்கெடுத்து ஒரு தலையைச் செஞ்சுருந்தா அநியாயமா ஒரு யானையைக் கொன்னுருக்க வேணாம்ல...

#மீள்பதிவு

பின்குறிப்பு : கேட்ட கதையைத்தான் சொல்லிருக்கேன்... கேள்வியும் கதையை ஒட்டித்தான்...

No comments:

Post a Comment