Saturday, August 26, 2017

தரமான மருத்துவம் என்றால் என்ன?

Devi Somasundaram
Via Facebook
2017-08-26

To err is human ..

     மேல சொன்ன ப்ரேஸ் ஒரு மதபோதகரின் வரியா தான் நமக்கு தெரியும்...ஆனா  1970 ல் ஆரம்பிக்கபட்ட institude off medicine (IOM). இதை தான் தன் முகப்பு வரியாக கொண்டு ஆரம்பிக்கபட்டது .. மனித தவறுகள் இயல்பு என்பது நிஜம் என்றாலும் அது தவறுகான லைசன்ஸ் இல்லை என்பதும் நிஜம். தரமான  மருத்துவர் என்ற உருவாக்கம் எந்த இடத்தில் தவறானது என்பதை அறிய .முதலில் தரம் என்றால் என்ன என்று அறியனும்..

     Quality medical , தரமான மருத்துவம் என்ன என்பதை 1900 களில் தான் உலகம் யோசிக்கவே ஆரம்பித்தது.. Dr.Ernest codman என்ற அமெரிக்கர் 1900 களில் பேச ஆரம்பித்தாலும் Donahadein model தான் பின்பற்றபடும் வரையறைகளை தருகிறது.. (Common framework for assessing healthcare quality) .ஒரு தரமான வைத்தியம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய தரபட்டுள்ள வழி முறைகள்..structure, process, outcomes. 

      தரமான மருத்துவம் என்பது டாக்டர் என்ற தனி நபரை சார்ந்தது இல்லை..  அது .
   Safe – avoiding injuries to patients from care that is intended to help them.
Effective – avoiding overuse and misuse of care.
Patient-Centered – providing care that is unique to a patient's needs.
Timely – reducing wait times and harmful delays for patients and providers.
Efficient – avoiding waste of equipment, supplies, ideas and energy.
Equitable – providing care that does not vary across intrinsic personal characteristics.) ..
   பாதுகாப்பான மருத்துவ முறை..அதாவது  நோயாளிக்கு மேலும் காயத்தை ஏற்படுத்தாத வைத்தியம்...ஒரு கட்டிய ஆபரேஷன் செய்றேன்னு நரம்ப வெட்டி விட  கூடாது..அது டாக்டர், நர்ஸ், அனெஸ்தடிஸ், கிடைக்கும் எக்யூப்மெண்ட்கள் என்று ஒரு மொத்த நிர்வாகம் சரியா இருந்தால். தான் சாத்தியம்.. அடுத்து  நோயாளிகான முக்கியதுவம்..வெளினாடுகளில் நோயாளி தன் வைத்தியதிற்கான வழி முறை அத்தனையும் அறிய உரிமை உள்ளவர்.இந்தியாவில் நாளைக்கு ஆப்ரேஷன். பணத்தை அக்கவுண்ட்ல கட்டு என்பது மட்டுமே நோயாளியின் அறிதல் ..தனக்கு என்ன ஆபரேஷன் என்று கூட அறிய முடியாத நிலை தான்..
. அடுத்து தான் டாக்டரின் பொறுப்பு..தன் எல்லை எது என்பதை சரியாக வரையறை செய்து வைத்தியம் செய்வது தான்  டாக்டர் வேலை..

      அமெரிக்காவில் ஒரு டாக்டர் தன் புரோட்டோகால் படி தான் இயங்க முடியும்.. அங்கு டாக்டர் வேலை நோயாளியின் நோய் தன்மைக்கு அரசு அனுமதித்துள்ள சட்டப்படி மருந்து தருவது தான்...அதில் நோயாளி குணம் ஆகிறாரா இல்லியா என்பதை விட..டாக்டர் தன் ரூல்ஸ் மீற கூடாது என்பது தான் முக்கியம்..ஒரு உதாரணம் சொல்கிறேன்..

   என் தோழியின் அத்தை .. என் தோழி கணவருடன் கலிபோர்னியாவில் வசித்து வருகிறாள்..அவளை பார்க்க போன அவள்  அத்தைக்கு ( மாமியார் இல்லை)  வயிற்றுவலி .குடல் ஒன்றுடன் ஒன்று முறுக்கி கொண்டு , உணவு செரிக்காமல் தங்கி ,கெட்டு போய் ,செப்டிக் ஆகி ,குடல் அழுகி விட்டது.. கலிபோர்னியாவின் பிரபல மருத்துவமனையில் டிரிட்மெண்ட்.அழுகிய குடல் அகற்றபட்டு ஆபரேஷன் முடிந்த 5 வது நாள் மீண்டும் வலி..ஏற்கனவே ஆபரேஷன் ஆன ஒபன் செய்யபட்டு பார்த்ததில்..ஆபரேஷன் ஆன இடத்தில் மீண்டும் செப்டிக்...அமெரிக்காவில்  ஆண்டி செப்டிக் டோஸேஜ் மிக குறைவா தான் தரணும்.அதற்கு மேல் தர கூடாது.. 20 நாள் மருத்துவமனை வயிற்று காயம் மூடப்படாமல் ஒபனா விடபட்டு வலியோடு அவஸ்தை..  ரொம்ப முயற்சி செய்து ஒரளவு சரி செய்துட்டு..நாங்க ஊருக்கு போறோம் அனுப்பி விடுங்கன்னு இண்டியா வந்து. சொந்த ஊர் மாயவரத்தில் குடும்ப டாக்டர். மாயவரத்தில் பிரபல குழந்தை பேறு டாக்டரின் கணவர்..சர்ஜன்..அவர் தொடர்ந்து ஆண்டி செப்டிக்,காயம் சரியாக மருந்து என்று ஒரு வாரத்தில் சரி செய்தார்.. காரணம் நோயாளியின் உடம்பு நீர்சத்து நிறைந்தது  என்ற பர்ஸனல் அறிதலாலும் உடனடி தீவிர மருத்துவத்தை தர முடிந்தது..

   தரமான மருத்துவம் என்பது டாக்டர்களால் மட்டும் நிச்சயம் செய்யபடுவதில்லை..கிடைக்கின்ற வசதி, நோயாளியின் நோய் தன்மை, குறைந்த வசதியில் தீர்வு (cost efficiency),டெஸ்ட்கள் போன்ற அதிக பயன்பாட்டைகுறைத்தல் (over utilization),நோயின் தீவிர தன்மைகான சரியான நேர மருத்துவம் (,critical pathway), நோயாளியின் திருப்தி (patient perspective) .என்று பல கோணங்களில் இருந்து கிடைப்பது.

     தரமான டாக்டர் என்பது அவரது ஆரம்பகல்வியால் நிச்சயிக்கபடுவதில்லை. அவரது மருத்துவ படிப்பின் தர நிர்ணயத்தால் கிடைப்பதில்லை..பல கோல்ட் மெடல் வாங்கிய டாக்டர்கள் தங்கள் துறையில் பிரகாசிக்க இயலாமல் 5,10 க்கும் வைத்தியம் பார்த்துட்டு ஒரு ஒரமா துக்கடா டாக்டராக வாழ்வதை எல்லாம் நிஜ வாழ்வில் சந்திக்கிறோம்.. தரமான டாக்டர் என்பவர் பிழைக்க வாய்ப்புள்ள நோயாளியை காப்பாற்றுபவர் இல்லை..பெரிய மருத்துவமனை, ஆடம்பர வசதிகள், இன்று பாராட்ட படும் சி பி எஸ் சி கல்வி திட்டத்தில் படித்த டாக்டர்கள் தான் ஜெயலலிதாவுக்கு வைத்தியம் செய்தவர்கள் .ஏன் இறந்து போனார்..சி பி எஸ் சி டாக்டரின் தரம் இவ்வளவு தானா? ..

  ஜெயாவின் மரணத்தை வைத்து  சிபி எஸ் சி தரம் குறைவு என்று மதிப்பிடுவது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் சிபி எஸ் சி தான் சிறந்த கல்வி திட்டம் என்பதும்..சி பி எஸ் சி  டாக்டர்கள் தோல்வியடைவதும் , ஸ்டேட் போர்ட்ல படிச்ச டாக்டர் சக்ஸஸ் ஆவதும் மிக சர்வ சாதாரணம்...தரமான மருத்துவம் என்பது கிடைக்கின்ற வாய்ப்புகள் பொறுத்ததும் ஆகும் ..நடிகை  ஸ்ரீதேவியின் தாயார் அமெரிக்க மருத்துவமனை டாக்டர்கள் தவறால் உயிரிழந்தார்.எம் ஜீ ஆரை காப்பாற்ற இயலவில்லை..இவை எல்லாம் க்வாலிட்டி தாண்டி வாய்ப்புகளால் நடந்தவை..

    சரி...தரமான மருத்துவதிற்கான அமைப்பு எதாவது இந்தியாவில் இருக்கா என்று தேடினால் ஒன்றும் இல்லை.. ஒரே ஒரு அமைப்பு அதும் ஜெயா கேஸில் பெயில் ஆன அதே எய்ம்ஸ் அமைப்பால் நடத்தபடுகிறது.. அதுவும் சரியான வழிகாட்டுதல் எதுவும் தரவில்லை..

..
இன்னும் சொல்ல அதிக தகவல் இருந்தாலும் கட்டுரை நீளம் கருதி சுருக்கமா தந்துள்ளேன்.முடிந்தவரை தமிழில் புரிய வைக்க முயன்று இருக்கிறேன்..குறை இருப்பின் மன்னிக்கவும்...தகவல்கள் அனைத்தும்  மெடிக்கல் ஜர்னல் டாட்.ஓ ஆர் ஜி யில் எடுக்கபட்டது..

#TNagainstNeet

No comments:

Post a Comment