Tuesday, August 22, 2017

ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

யுவான் சுவாங்
Via Facebook
2014-08-22

ஒரு நாடு என்ற பொருளில் இந்தியா என்று நாம் இன்றைக்கு அழைக்கின்ற புவிப்பரப்பு எப்போது உருவானது? கஜினி முஹம்மத் இந்தியா மீது படை எடுத்தார் என சொல்வது அபத்தம், கஜினி முகமதுவின் காலத்திலோ, அதற்கு முன்னரோ இந்தப் புவிப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் ஒரு நாடாக எப்போதும் இருந்ததில்லை.

ஏன், 1947 ஆகஸ்டு 15-ம் தேதியன்று காஷ்மீரும், ஆந்திரத்தின் பெரும் பகுதியும், பல வடகிழக்கு மாநிலங்களும் இந்திய யூனியனில் இல்லை. எழுபதுகளுக்கு முன்னர் சிக்கிம் இந்தியாவில் இல்லை. அவ்வாறிருக்கும் போது 20-ம் நூற்றாண்டில் உருவாகவிருக்கும் இந்தியா மீது 11-ம் நூற்றாண்டிலேயே கஜினிமுகமது எப்படிப் படையெடுக்க முடியும்?

இவ்வாறு பேசுவதே தேசத் துரோகம் என்று ஆர்.எஸ்.எஸ். காரர்கள் குமுறுவார்கள். அகண்ட பாரதத்திற்கு அவர்கள் வரைந்துள்ள எல்லைக் கோட்டின்படி ஆப்கானிஸ்தானமும் இந்தியாவில் அடக்கம். அந்தக் கணக்கின்படி பார்த்தால் இராசேந்திர சோழனைப் போல கஜினி முகமதுவும் ஒரு இந்தியன். ஒரு இந்தியன், எப்படி இந்தியாவின் மீது படையெடுக்க முடியும்?

கத்தியவாரை (குஜராத்) ஆண்டு வந்த சோலங்கி மீது கஜினி முகமது படையெடுத்த அதே கால கட்டத்தில் தான், தெற்கே சோழ நாட்டிலிருந்து இராசேந்திர சோழன் சாளுக்கியர்கள் மீது படையெடுத்தான். இராசேந்திர சோழனின் படையெடுப்பை இந்தியா மீதான படையெடுப்பென்றோ, இந்து மன்னர்களுக்கிடையிலான மோதல் என்றோ குறிப்பிடாத வரலாற்றுப் பாடநூல் கஜினி முகமது எனும் ‘இஸ்லாமிய’ மன்னன் ‘இந்தியா’ மீது படையெடுத்ததாகக் குறிப்பிடுவது மதவெறி இன்றி வேறு ஒன்றுமில்லை.

நன்றி: யுவான் சுவாங்

No comments:

Post a Comment