Thursday, April 7, 2016

இடதுசாரிகளின் சந்தர்ப்பவாத அரசியல் முகமூடிகள் 1

மனுஷ்யபுத்திரன்
via Facebook
2016-Apr-06

இன்று காலை புதிய தலைமுறை புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் சுப.வீ இடதுசாரிகள் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளுடன் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தொகுதி உடன்பாடு பற்றி கேள்வி எழுப்புகிறார்,

அதற்கு சிபிஎம்மின் ஆறுமுக நயினார் ‘அது மம்தா என்ற பொது எதிரியை வீழ்த்துவதற்காக நாங்கள் செய்துகொள்கிற நெளிவுசுளிவான ஏற்பாடு’ என்கிறார்.

அதற்கு சுப.வீ, ‘பா.ஜ.கவுடன் தி.மு.க. கூட்டணி அமைத்ததை நான் அன்றும் ஏற்கவில்லை, இன்றும் ஏற்கவில்லை’ என்றார்.

இப்படி வெளிப்படையான விமர்சனங்களுடன் இருக்கக்கூடிய சாத்தியம் கலைஞருடன் இருப்பவர்களுக்குத்தான் உண்டு. அதுதான் திமுக உருவாக்கிய அரசியல் பண்பாடு.

சுப.வீ. மேலும் நீங்கள் மேற்குவங்கத்தில் இணங்கிப் போகிற காங்கிரசுடன் தமிழகத்தில் ஏன் இணங்கிப் போகமுடியவில்லை என்கிற கேள்வியைக் கேட்கிறார்.

அதற்கு ஆறுமுக நயினார் ‘நாங்கள் மேற்குவங்கத்தில் ஆட்சிக்கு வர வாய்புள்ள கட்சி. அதனால்தான் நெளிவுசுளிவுடன் நடந்துகொள்கிறோம்’ என்கிறார்.

அதற்கு சுப.வீ ‘அப்படியென்றால் உங்கள் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பது ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதுதானா?’ என்று கேட்கிறார்.

ஆறுமுக நயினாரிடம் அதற்கு எந்த பதிலும் இல்லை. இடதுசாரிகளின் சந்தர்ப்பவாத அரசியல் முகமூடிகள் கிழிந்து தொங்குவதை பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

No comments:

Post a Comment