Wednesday, April 6, 2016

ஞானி சங்கரன், பானு கோம்ஸ், பத்ரி சேஷாத்ரி, சுமந்த் சி ராமன் போன்ற நடுநிலையாளர்கள்

Arivazhagan Kaivalyam
via Facebook
2016-Apr-06 

நண்பர் ஒருத்தர் அப்பாவியாகக் கேட்கிறார், சார், ஞானி சங்கரன், பானு கோம்ஸ், பத்ரி சேஷாத்ரி, சுமந்த் சி ராமன் போன்ற நடுநிலையாளர்கள் எல்லாம் இந்த முறை மக்கள் நலக் கூட்டணியை மாய்ந்து மாய்ந்து ஆதரிக்கிறார்களே, அவர்கள் திராவிடக் கட்சிகளின் மீது முற்றிலுமாக நம்பிக்கை இழந்தது தானே இதற்குக் காரணம்???

அம்மா என்னதான் புலி வேஷம் போட்டாலும் அவரு ஒரு ஆர்த்தடாக்ஸ் ஐயங்கார் என்பதும், இந்துத்துவ மனுதர்மக் கொள்கைகளுக்கும், சனாதன சித்தாங்களுக்கும் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டார் என்பதும் இவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும், முந்தைய கால வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்களேயானால் பார்ப்பனீயத் தலைமை என்கிற ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்கள் பாசிச ஊழல் பெருச்சாளி ஜெயாவை ஆதரித்து வந்தார்கள்.


முதலில் அவர் நிர்வாகப் புலி என்றார்கள், பிறகு நிர்வாகம் சிறைக்குள் போனதும், மெல்லப் பம்மினார்கள், பிறகு தலைமைச் செயலகத்துக்கே போகாமல் போட்டோசாப் புகைப்படங்களைப் பார்த்ததும் கொஞ்சம் ஆடிப் போனார்கள், வெள்ளம் வந்து இருந்த கொஞ்ச நஞ்ச நிர்வாகத்தையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் கூவத்தில் தள்ளிவிட அடித்துப் பிடித்து ஜெயா ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து பிடித்து இழுத்து வரப்பாட்டார்கள் இவர்கள்.

பல ஆண்டுகளாக நடுநிலை வேடம் போட்டே சமூக நீதிக்கு எதிராக விஷம் கக்கும் பார்ப்பனீய லாபி பாசிச ஊழல் பெருச்சாளி ஜெயாவை எதிர்க்காது, எதிர்த்தாலும் அது நான் அடிக்கிற மாதிரி அடிப்பேன் நீ அழுகிற மாதிரி அழுகனும் என்கிற புரிந்துணர்வின் அடிப்படையிலேயே இருக்கும்.

இவர்களின் ஒரே அச்சம் கலைஞரும் அவர் தலைமையேற்றிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் தான், ஏனெனில் வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் அவர் செய்திருக்கும் சமூக நீதிக்கான கலகங்களை அவர்கள் ஒரு விதமான பீதியோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்:

(1) ஐயரையும், பறையரையும், ஆதிக்க ஆண்டையையும் அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் சமத்துவபுரத்தில் சுற்ற விட்டு விடுவார்.

(2) திடீர்னு தெருக் கூட்டிட்டு இருந்தவனுக்குச் சட்டை வேட்டி மாட்டிவிட்டு நீயும் போயி மந்திரம் ஓதலாம்னு சட்டம் போடுவார், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனியாகவே ஒரு துறையை உருவாக்குவார், அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த போது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் அதனை விரிவுபடுத்துவார், குடிசைகளிலேயே உழன்று கிடந்த 3,00,000 பேரைக் கொண்டு போய்க் காரை வீட்டில் உட்காரவைத்து அழகு பார்த்தார்.

(3) கலர் டிவி வச்சிருக்கவன்லாம் பெரிய லாடுன்னு இருந்த காலத்தை ஓவர் நைட்டில் ஒண்ணுமில்லாம ஆக்கிவிடுவார், அடிமட்டத் தொண்டனாய் இருந்த ஆ.ராசாவை மாதிரி உண்மையான அறிவு ஜீவிகளை அலேக்காத் தூக்கிக் கொண்டு போய் நாடாளுமன்றத்துக்குள் சுற்றவிடுவார் பிறகு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆக்கி பார்ப்பன பனியாக்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி அந்தக் கூடாரத்தையே சிதறடிப்பார்.

(4) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மதத்தின் பெயராலும், வர்ணத்தின் பெயராலும் புழக்கத்தில் இருக்கும் பார்ப்பனீயத்துக்கான பூரண கும்ப முதல் மரியாதையையும் கூட அறநிலையத்துறை என்ற பெயரில் ஆப்படித்து அந்தரத்தில் தொங்க விடுவார்.

இந்த அடிமடியில் கைவைக்கும் சூத்திர ஆட்சி அதிகாரத்துக்குப் பயந்து தான் இவர்கள் கடந்த காலங்களில் பாசிச ஜெயாவை எந்தக் கூச்சமும் இல்லாமல் ஆதரித்து வந்தார்கள், அப்போது இவர்களின் நடுநிலையை உண்மையிலேயே நடுநிலை என்று நம்பிக் கொண்டிருந்த எண்ணற்ற இடைநிலைச் சாதியினரும் சாமி சொன்னா சரியாத் தான் இருக்கும் என்று கேள்வி கேட்காமல் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைக்குக் நிலைமை தலைகீழ் சமூக இணைய தளங்களும், தொலைத்தொடர்பும் ஒவ்வொரு தனி மனிதனையும் வலுவான தனி ஊடகமாக மாற்றி இருக்கும் சூழலில் ஜெயாவை இவர்கள் ஆதரிப்பதற்கான எல்லா முகாந்திரங்களும் கேள்வி கேட்கப்படும் சூழலில் அ.தி.மு.க வையோ அப்பட்டமான ஊழல் பேர்வழி ஜெயாவையோ இவர்களால் முன்பைப் போல வெளிப்படையாக ஆதரிக்க முடியாது.

இந்தச் சூழலில் இவர்களில் சிலர் திமுகவை ஆதரிப்பது போன்ற ஒரு பாவனை காட்டுவார்கள், எடுத்துக்காட்டாக ஞானி சங்கரன் போன்ற நடுநிலை வேடம் போடும் நவீனப் பார்ப்பனர்கள் இப்படிப் பாவனை காட்டுவதில் வித்தகர்கள், பிறகு மறைமுகமாக திமுகவை எதிர்க்கும் ஏதாவது புள்ளி அவர்களுக்குக் கிடைக்கும் சூழலில் அது மணல் மேடாக இருந்தாலும் அதை ஊதிப் பெரிதாக்கி இமயமலை என்றும் ஆல்ப்ஸ் மலை என்றும் புளுகித் தள்ளுவார்கள்.

வழக்கமான தங்கள் பாசிச ஜெயா ஆதரவை வேறு வழியில் காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல மக்கள் நலக் கூட்டணியும் - விஜயகாந்த்தின் தேமுதிகவும் இமாலய வெற்றி பெற்று அமெரிக்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என்று அவிழ்த்து விடுவார்கள். உங்களையும் என்னையும் விட இந்த நடுநிலை வேடதாரிகளுக்கு நன்றாகவே தெரியும் இந்த உதிரிக் கட்சிகளால் பத்து இடங்களில் பிணைத்தொகை வாங்குவது கூடக் கடினம் என்கிற உண்மை.

ஆனால், அவர்களின் இலக்கு மக்கள் நலக் கூட்டணியோ அதன் வெற்றியோ கனவிலும் இல்லை, மாறாக தங்கள் பல ஆயிரம் ஆண்டு கால சனாதன மதிப்புக்கு ஆப்படிக்கும் கருணாநிதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பது ஒன்றுதான் அவர்களின் மானசீகமான இலக்கு. இந்த முறை பாசிச ஜெயாவுக்கு மட்டுமல்லாமல், சமூக இணைய வெளியில் எண்ணற்ற இளைஞர்களால் காரி உமிழப்படும் இந்த நடுநிலை வேடதாரிகளுக்கும் சேர்த்தே ஆப்படிக்கப் போகிறார் கலைஞர் என்பதுதான் ஹைலைட்.

https://www.facebook.com/arivazhagan.kaivalyam/posts/10208726193053134

No comments:

Post a Comment