Sivasankaran Saravanan
via Facebook
2016-Apr-06
நம்முடைய அறிவுஜீவிகள், அறிஞர் பெருமக்களில் பலருக்கு கலைஞர் மீது ஏன் இத்தனை வன்மம் என்று நான் அடிக்கடி யோசித்தது உண்டு. அதற்கான காரணம் ஒன்றே ஒன்று தான். அது கலைஞர் மீதான சாதிய வன்மம். தமிழ்நாட்டில் எந்த சாதிப் பின்புலமும் இல்லாமல் வந்த ஒருத்தர் இந்தளவுக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறாரே என்ற தீராத வன்மம் சாதியவாதிகளிடம் உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று பணி செய்யும் ஆட்களில் சிலரிடம் கூட இந்த குணத்தை நீங்கள் பார்க்கமுடியும். நான் நேரடியாகவும், வாட்சப் உள்ளிட்ட இணைய தனிக்குழுக்களில் சாட் செய்யும்போதும் இதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். கலைஞர் மீது பலருக்கு சாதிய ரீதியான வன்மம் இருக்கிறது என்பதை என் குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் நான் சொல்லியிருக்கிறேன்..! இணைய நண்பர்களிடமும் நான் சிலசமயம் இதை தனியாக பேசும்போது சொல்லியிருக்கிறேன்.
ஆகையால் இன்று வைகோ வாயிலிருந்து வந்திருக்கும் சாதிய வன்ம வார்த்தைகள் எனக்கு எந்த அதிர்ச்சியையும் தரவில்லை. ஏனென்றால் நான் நேரடியாகவே கலைஞர் மீதான சாதியத்தாக்குதல்களை பார்த்திருக்கிறேன்.
93 வயதாகிவிட்ட பிறகும் இந்த " சூத்திர " கருணாநிதியை இவர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை என்பதை பார்க்கும்போது தான், இந்த சூத்திர கருணாநிதியை விட்டால் நமக்கு வேறு நாதியில்லை, அவரை மேலும் மேலும் ஆதரிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அதிகரித்துக்கொண்டே வருகிறது...!

No comments:
Post a Comment