Thursday, April 7, 2016

மக்கள் நலக்கூட்டணியை புறக்கணிப்போம் - 3

ரீ. சிவக்குமார்
விகடன். com

தலித் முதல்வர்’ என்ற கோரிக்கை எழுந்தபோது ‘முதல்வர் வேட்பாளரே கிடையாது’ என்று திருமாவளவனே மறுத்தார். ஏனெனில் ஒரு தலித்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் வாக்குகள் விழாது என்பதுதான் எதார்த்தம் என்பது மக்கள்நலக் கூட்டணியின் கூட்டணியின் கூட்டணியின் நம்பிக்கை. ’நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர்’ என்ற குரல்களையும் மக்கள்நலக்கூட்டணி பொருட்படுத்தவில்லை. ஆக, இவையெல்லாம் ‘எதார்த்தங்கள்’ என்றால், அந்த எதார்த்தத்தை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்குப் பெயர்தான் மாற்று அரசியலா?

ஆக போராட்டங்களுக்குப் பெயர்போன வைகோ முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைக்கும் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது, நேர்மையின் அடையாளமான நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது, கொள்கையே இல்லாத விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்றால், அப்புறம் என்ன அதற்குப் பெயர் ‘மாற்று’?

http://www.vikatan.com/news/coverstory/61127-vijayakanth-cm-candidate-alternative-politics.art

No comments:

Post a Comment