Thursday, April 7, 2016

இணையத்தில் உலா வரும் வரலாறுகள் - 1




இணையத்தில் உலா வரும் வரலாறுகளை எல்லாம் போட்டோஷாப் எழுதியிருக்க கூடும் !

1963 வரை காமராசர்தான் தமிழக முதல்வர். 

1967 சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி(5-21)யில் நடந்திருக்கிறது.தேர்தலுக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மே மாதம் என புனையப் பட்டிருக்கிற இந்த செய்தி அப்போது பொருத்தமானதாக இல்லை.

1971 சட்டமன்றத் தேர்தல் மார்ச் மாதம் நடந்திருக்கிறது . அப்போதும் இந்தக் குற்றச்சாட்டை கருணாநிதி மே மாதம் சொல்லியிருக்க முடியாது. 

1977 இல் மட்டும்தான் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூன் மாதம் 10ந் தேதி நடந்திருக்கிறது. அப்போது மட்டும்தான் இந்த செய்தி எல்லா வகையிலும் முழுமையாகப் பொருந்திப் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் பாருங்கள் துரதிஷ்டவசமாக காமராசர் 1975லேயே இறந்து போய் விட்டார்.

பின்குறிப்பு : 1967 தேர்தலில் விருதுநகரில் தோல்வியுற்றபின் சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் போட்டியிடவே இல்லை .

இனிமேல் போட்டோஷாப் செய்யும் ஆட்கள் யாருக்கும் சந்தேகம் வரமுடியாதபடி க்ராஸ்செக் செய்து கொள்ளவும்.


https://www.facebook.com/nelsonxavier08/posts/10206034031877856

No comments:

Post a Comment