Thursday, April 7, 2016

Don Ashok
via Facebook

தேமுதிக எம்.எல்.ஏ சந்திரகுமார் பத்து மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் செம போடு போடுகிறார்.

1) கடந்த ஐந்தாண்டுகளில் அதிமுக அரசால் மிகவும் பாதிக்கப்பட்ட கட்சி தேமுதிக. பொதுக்கூட்டம் நடத்த கூட ஆயிரத்தெட்டு தடங்களை போட்டது அதிமுக அரசு.

2) என்னென்னமோ ஆசை வார்த்தைகள் காட்டிய அதிமுகவுக்கு இணங்காமல் கேப்டனுக்கு விசுவாசமாக இருந்தோம். இதனால் க்ரிமினல் வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது போட்டு வாட்டியது அதிமுக அரசு.

3) கட்சி செலவுக்காக மனைவியின் தாலியை கூட அடகு வைத்து வேலை பார்த்தவர்கள் தேமுதிக தொண்டர்கள். அவர்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல், பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை கூட்டாமல் மநகூவுடன் கூட்டணி அறிவித்தது ஏற்கவே முடியாது.

4) தேமுதிகவினர் மட்டுமல்லாது அதிமுகவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விருப்பமும் தேமுதிக திமுகவுடன் இணைய வேண்டும் என்பதே. அதை அவரிடம் பலமுறை நேரடியாக சொன்னோம், வலியுறுத்தினோம். அவரும் அந்த எண்ணத்தில் தான் இருந்தார். ஆனால் திடீரென வீட்டில் முடிவெடுத்து முடிவை மாற்றிக்கொண்டார். எங்களுக்கு அதிர்ச்சியானது. 24ஆம் தேதி முடிவை மாற்றக் கோரி கடிதம் அளித்தோம். எதற்குமே செவிசாய்க்கவில்லை என்பதால் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளோம்.

5) தேமுதிக மநகூவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம். அதிமுகவின் வெற்றிக்கு வழிசெய்வதற்காக இணைந்திருக்கும் சிலருடன் கேப்டன் இணைவது சரியல்ல. எங்களை எல்லாம் அதிமுகவுக்கு எதிராக ஐந்தாண்டுகள் கொம்புசீவிவிட்டுவிட்டு இன்று இந்த முடிவை அவர் எடுத்திருப்பது சரியல்ல.

6) தேமுதிக இணையவில்லை என்றால் திமுக வெற்றிபெறாதா என்றால் கண்டிப்பாக வெற்றி பெறும். கலைஞர் முதல்வர் ஆவார். ஆனால் தேமுதிகவின் எதிர்காலம் குறித்தே எங்களுக்கு கவலை. மநகூவுடன் இருந்தால் தேமுதிக அழியும்.

7) நாங்கள் தேமுதிகவில் தான் இருக்கிறோம். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் கேப்டனுக்கு பகிரங்க கோரிக்கை வைத்துள்ளோம். அவர் எங்களை அழைத்து பேசுவார் என உறுதியாக நம்புகிறோம்.

ஆக இதன்மூலம் நாம் அறிவது,

1) அதிமுக ஐந்தாண்டுகளாக தேமுதிக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க எல்லா வேலைகளையும் செய்துள்ளது. ஆனால் நம் நடுநிலையாளர்கள் திமுகவில் சேரும் ஒன்றுக்கும் உதவாத ஆட்களைப் பற்றியே பேசி வந்துள்ளார்கள். திமுகவை மட்டுமே குறை சொல்லி வந்துள்ளார்கள்.

2) வைகோவின் மநகூ என்பது அதிமுகவின் பி டீம் என்பது திமுகவுக்கும், பொதுமக்களுக்கும் மட்டுமல்லாது தேமுதிகவினருக்கும் தெளிவாகத் தெரிகிறது.

3) திமுகவின் ஜெயிக்கும் அணியில் தேமுதிக இருப்பதே அதன் இருத்தலுக்கு நல்லது என்பதே தேமுதிகவினரின் முடிவாக இருக்கிறது.

4) வைகோ என்பவரைப் பற்றி எல்லோருக்கும் தெளிவாகத் தெரிகிறது!!! சில அப்பாவிகளையும், சில முட்டாள்களையும் தவிர!!

No comments:

Post a Comment