Thursday, April 7, 2016

சீமான் காமடிகள் - பார்ப்பனர் தமிழர்கள்

சீமான் காமடிகள்
via Facebook
2016-Apr-04

நாம் தமிழரில் உண்மையேனும் உணர்வுள்ளவர்கள் யாரேனும் இருந்தால், இதற்கு பதில் தர வேண்டாம், சிந்தித்தால் போதும்,

---(1)---

திராவிடம் என்ற சொல்லை எதிர்த்து தான் அரசியல் செய்கிறீர்கள்.

பெரியார் "திராவிடம்" என்ற சொல்லை பார்ப்பனர்களுக்கு எதிராக பயன்படுத்தினர், தமிழர் என்றால் நானும் தமிழ் தான் பேசுகிறேன் என பார்ப்பான் வருவான் என்று.

ஆனால் இன்று நீங்களும் பெரியார் கூறிய வாரே "பார்ப்பான் வீட்டில் தமிழ் நான் பேசுகிறான், ஆக அவனும் தமிழன் என்கிறீர்கள்"

ஆக பெரியார் கூறியது இன்று உண்மையாகித் தானே போனது? பிறகு திராவிடம் என்ற சொல் மீது கேள்வி எழுப்ப உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என நினைக்கிறீர்கள்?

---(2)---

பார்ப்பனர் தமிழர்கள் என்கிறீர்கள், ஆனால் இங்கே உள்ளவர்களை தமிழரல்லோதார் என சாதியை கொண்டு அளவிடுகிறீர்கள். ஆனால் நீங்கள் தமிழரல்லோதார் என அடையாத்திற்குள் குறிப்போர்:

*இந்தி எதிர்ப்பில் போராடி உயிர் நீத்துள்ளனர்,  
*ஈழ போராட்டத்தில் உயிர் நீத்துள்ளனர்,  
*ராசீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஒருவர் உள்ளார்,  
*இவ்வளவு ஏன், ராசபக்‌ஷேவின் வருகையின் போது உங்கள் கட்சியிலேயே இருந்து தீக்குளித்து மாண்டவர் மாற்று மொழிக்காரர் தான்,

இப்படி இந்த மண்ணோடு மக்களோடும் இரண்டறக் கலந்தவர்களை வந்தேறிகள் என்கிறீர்கள். ஆனால் தமிழர் நலப் பிரச்சினைகளிலும், ஈழ போராட்டத்திலும் ஒரு துரும்பைக் கூட அள்ளிப் போடாமலும், மாறாக எதிராக உள்ள துக்ளக் சோ, சு.சாமி, இந்து ராம், முராரி கூட்டங்களை தமிழர் என்கிறீர்களே, 

இனவாதம் பேசுவதில் ஒரு நேர்மை வேண்டாமா??

---(3)---

2009 ஈழ படுகொலையை காரணமாகச் சொல்லி தான் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்ற கோஷத்தை அடிப்படையாக கொண்டு அரசியலை ஆரம்பித்தீர்கள்,

ஆனால் 2014 பள்ளிப்பாளைத்தில் நாம் தமிழர் சார்பாக நடந்த "பெரியார் பிறந்த நாள்" பொதுக் கூட்டத்தில், "பெரியாரிய இயக்கங்கள் இல்லாவிடில் ஈழ போராட்டம் இவ்வளவு வலிமையடைய வாய்ப்பில்லை, போராட்டம் துவங்கிய நாள் முதல் கடைசி வரை தோலோடு தோல் நின்றது திராவிடர் இயக்கங்கள்" எனக் கூறியுள்ளீர்கள். 

இது ஈழப் படுகொலையை மையமாக வைத்து நீங்கள் எழுப்பும் "திராவிடத்தால் வீழ்ந்தோம்" என கூறுவதற்கு முரண் இல்லையா?

நேரடியாக திமுகவை விமர்சிக்காமல் பொத்தாம் பொதுவாக திராவிடம் எனக் குறிப்பிடுவதன் பின்னணி என்ன?


No comments:

Post a Comment