Friday, March 3, 2017

இந்து என்ற பொது பெயருக்குள் பிராமணர் சூத்திரர் என்ற இரு பிரிவுகள் மட்டுமே உள்ளது

Subash Chandra Bose
Via Facebook
2011-03-03

சத்திரியர்களும், வைசியர்களும் பரசுராமனால் அழித்தெழிக்கப் பட்டதாக மகாபாரதத்தில் கிருஷ்ண உபதேசத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. எஞ்சி இருப்பது பார்ப்பனர்களும் சூத்திரர்களும் மட்டுமே. மேலதிக தகவல் 80களில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்களுக்கு இந்து செட்டியார் வைசியர் என சான்றிதழ் அளிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அப்பொழுது நான்கு வர்ணத்திற்கும் அடிப்படையே பகவத் கீதையின் தான் என குறிப்பிட்டு யாரையும் வைசியராகவோ சத்திரியராகவோ அங்கீகரிக்க முடியாது என தீர்ப்பளித்தனர். ஒரு பார்ப்பனர் இந்து ஐய்யங்கார் பிராமணர் என சான்றிதழ் பெற இயலும் ஆனால் இந்து கள்ளர் (அ) நாயுடு (அ) வன்னியர் (அ) கவுண்டர் சத்திரியர் என சான்றிதழ் பெற இயலாது.  வன்னியர்களில் ஒரு பிரிவினர் தங்களது ஜாதி பெயரை வன்னிய குல சத்திரியர் என மாற்றி கொண்டனர் வேண்டுமானால் அது போல் மாற்றி கொண்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். அதாவது சுபாஷ் சந்திர போஸ் என்ற எனது பெயரை கோடீஸ்வரன் சுபாஷ் சந்திர போஸ் என கெசட்டில் மாற்றி கோடீஸ்வரனாக மாறுவதை போல. இந்து என்ற பொது பெயருக்குள் பிராமணர் சூத்திரர் என்ற இரு பிரிவுகள் மட்டுமே உள்ளது.

இதனால் தான் தந்தை பெரியார் இந்து என்று சொல்லாதே இழிவை தேடி கொள்ளாதே என்றார்.

No comments:

Post a Comment