Sunday, March 5, 2017

பொன்.ரா கம்பெனி கொண்டிருக்கும் தகுதி என்பது நிர்மலா போன்ற பிறவி தகுதியை தூக்கி சுமக்கும் சமூக பின்புலம் என்பதுமட்டுமே

Prakash JP பதிவு

​பொன்.ராதாகிருஷ்ணன் ​செல்வாக்கான மனுஷன், சாதிய பின்புலமும் உண்டு, நாகர்கோவில் தொகுதில இன்னைக்கி சுயேட்சையா நின்னாலும் ஒரு லட்சம் ஒட்டு குறையாம வாங்க முடியும். பாஜக வில் அவருக்கு கொடுத்திருக்க பதவி போக்குவரத்து துரையின் இணையமைச்சர் பதவி, அதுவும் சுயேட்சையான முடிவுகளை எடுக்கும் அதிகாரமில்லாத உப்புமா பதவி. ஒரு வேலை தேர்தலில் தோத்து போனார்னா வீட்லயே ஒக்காந்துக்க வேண்டியதுதான்..

அதே பிஜேபி-ல நிர்மலா சீதாராமன் எடுத்துக்கங்க, அவரும் தமிழ்நாட்டுகாரர்தான், அவர் பிறந்த ஊர்லயோ இல்ல செல்வாக்கான வேறு எங்கோ நின்னாலும் 10,000 ஒட்டு வாங்க மாட்டார், அனால் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர், அதுவும் தன்னிச்சையா முடிவுகளை எடுக்கும் அதிகாரமுள்ள இணையமைச்சர்,

தோத்துபோவோமேன்னு கவலை படவேண்டிய அவசியமே இல்லாத சமூக பின்புலம் 2010 ல இருந்து ராஜ்யசபா உறுப்பினர், தமிழ்நாட்டுல இல்லைனா ஆந்திராவுல நிக்க வைக்கிறாங்க, ஆந்திராவுல இல்லைனா கர்நாடகாவில் நிக்க வைக்கிறாங்க,

அப்படி என்ன பொன்.ராதாகிட்ட இல்லாத பெரிய தகுதி நிர்மலாகிட்ட இருக்கு?. எல்லாவற்றையும் மீறிய ஒரு பிறவி தகுதி இருக்கிறது,

பொன்.ராதா வகையறா என்றுமே அடையமுடியாத தகுதி அது, பொன்.ரா மட்டுமல்ல தமிழிசை தொடங்கி வானதி வரைக்கும் லோக்கலில் ஆடிக்க வேண்டியதுதான் அதுவும் தங்க சுமோகத்தில் இருந்து செல்வாக்கான ஒரு அடிமை பிஜேபிக்கு கிடைக்கும்வரைக்குமே,

ஆக இந்த பொன்.ரா கம்பெனி கொண்டிருக்கும் தகுதி என்பது நிர்மலா போன்ற பிறவி தகுதியை தூக்கி சுமக்கும் சமூக பின்புலம் என்பதுமட்டுமே.

அப்படி பல்லக்கில் இருந்தவர்களை கீழ இறக்கி ஓடவிட்டு தூக்கி சுமந்தவர்களை சுயமரியாதையோடு நிமிர செய்தது திராவிட இயக்கம்.

அண்மையில் பொன்.ரா சொன்னாராம் தாங்கள்தான் திராவிட கட்சின்னு, அவருக்கு சுயமரியாதையெல்லாம் இருக்க வேண்டியதில்லை, நிர்மலாவுக்கு தனக்கும் பிஜேபியில் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டாள் கூட அவர் தலைமுறைக்கே பிஜேபி பக்கம் போகமாட்டார்.. ஆனால் அதற்க்கு மான உணர்ச்சி வேண்டுமே..

By Anbe Selva

No comments:

Post a Comment