Sunday, March 12, 2017

காமராசரை விமர்சிக்கிறோம்

காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம். 

காமராசரைச் சுற்றியிருந்தவர்கள் ஏழை குப்பனோ சுப்பனோ அல்ல. மிட்டா மிராசுகளும்  ஆலைய திபர்களும் தான். காமராசர் கட்சியில் கக்கன் , பரமேஸ்வரன்கள் மிகச் சிலரே! 

கட்சியில் செல்வாக்கு செலுத்திய ஏழைப் பங்காளர்கள் பட்டியல் இதோ!

கபிஸ்தலம் மூப்பனார்
ஸ்ரீரங்கம் வெங்கடேச தீட்சிதர்
கல்வண்டார் கோட்டை சாமிநாதன்
வெண்மனி கொலைகாரன் இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடு
பக்கிரிசாமி நாயுடு
மதுரை சின்னக் கருப்பத் தேவர்
கவரப்பட்டு மாரியப்ப வாண்டையார்
கருப்பு அம்பலம் வெங்கடாசலத்தேவர்
ஜெகவீரபாண்டிய நாடார்
கும்பகோணம் ஏ ஆர் ராமசாமி
காளியண்ணன் கவுண்டர்
ராமசாமி கவுண்டர்
பொள்ளாச்சி மகாலிங்கம் 
இராஜாராம் நாயுடு
என்.ஆர்.தியாகராசன்

நீண்டு விடும். நிறுத்திக் கொள்வோம்.

ஏழை எளிய மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இவர்கள். கடத்தல் பேர்வழிகளும் கள்ள நோட்டுக்காரர்களும் பிளாக் மார்க்கெட் பேர்வழிகள் தான் காமராசரின் பொற்கால ஆட்சியின் புரவலர்கள்.

கர்ம வீரரின் ஆட்சியில் தானே எல்லைப் பகுதிகளை இழந்தோம்.

தேவிகுளம்
பிர் மேடு,
நெய்யாற்றங்கரை
நெடுமங்காடு
பாலக்காடு
சித்தூர்
திருப்பதி
மூணாறு
போன்ற பகுதிகளை இழந்தது காமராசர் ஆட்சியில் .

அது மட்டுமல்ல. எல்லைப் போராட்டத்தின் இரத்தஞ் செறிந்த வரலாறு சொல்லும் காமராசரின் கருணை மிகு ஆட்சியைப் பற்றி.

44 அப்பாவி தலித் கூலி விவசாயிகளைப் படுகொலை செய்த  வெண்மணி கொலைகாரக் கும்பலுக்கு எதிராக காமராசர் நடத்திய  போராட்டங்கள் எத்தனை ?
இரிஞ்சூர் கோபால கிருஷ்ணனை பாதுகாத்தவர் காமராசரின் செல்லப் பிள்ளை கருப்பையா மூப்பனார். காமராசர் ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?

1974 கச்சத் தீவை தாரை வார்க்கும் போது கர்ம வீரர் என்ன போராட்டம் நடத்தினார்? அப்போது அவர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினர். கச்சத் தீவிற்காக என்ன செய்தார்?

1957  சனவரி வால்பாறை படுகொலை . கூலி உயர்வு கேட்ட எஸ்டேட் தொழிலாளர்களை சுட் க் கொன்றது யாருடைய ஆட்சியில் . பெருந்தலைவரின் ஆட்சியில் தானே.

வாட்டாக்குடி இரணியனும் சிவராமனும் களப்பால் குப்புவும் படுகொலை செய்யப்பட்ட போது காங்கிரசின் தலைவராக இருந்த காமராசர் என்ன செய்தார்?

காங்கிரஸ் காமராசர் ஆட்சியிலே கம்யூனிஸ்டுகள் மீதான அடக்கு முறை தலை விரித்தாடியது.

தஞ்சை விவசாயக் கூலிகளின் இரத்தமும் சதையும் சொல்லும் பண்ணையார்களின் பாதுகாவலர் யார் என்று?  ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிக்கிறது. ?

காமராசரின் ஆட்சியில் ஏற்பட்ட "கல்வி வளர்ச்சியை " எப்படி மதிப்பீடு செய்வது?

அடுத்த பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

No comments:

Post a Comment