Sunday, March 19, 2017

இஸ்லாம் வேறு, இஸ்லாமிய சிந்தனை என்பது வேறு''

மார்க்கத்தை நிராகரிப்பதும், மார்கத்துக்கு கொடுக்கப்படும் ''விளக்கங்களை'' நிராகரிப்பது வெவ்வேறான விடயங்கள்.
.
இரண்டையும் நாம் ஒரே தராசில் நிறுத்திட முடியாது.
.
1) ஹனபி, ஷாபிஈ, மாலிகி போன்ற பிக்ஹு சிந்தனைப் பள்ளிகளும்,
.
2) காதிரிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷ்பந்தியா போன்ற ஆன்மீக மரபுகளும்,
.
3) இஹ்வான், தப்லீக், சலபி அமைப்புகள் போன்ற இயக்கங்களும்,
.
இந்த மார்கத்துக்கு அளிக்கப்பட்ட வெவ்வேறான, பன்முகப்பட்ட வியாக்யானங்களே.
.
இஸ்லாம் என்பது அல் குர்-ஆன், முதவாதிரான சுன்னாவின் மூலமும் வந்துள்ள கருத்து வேறுபாடுகளுக்கு இடம்பாடற்ற நம்பிக்கை கோட்பாடுகளும், அடிப்படை சட்டங்களும், ஒழுக்க பெறுமானங்களே.
.
ஆஹாதான, கருத்து வேறுபாடுகளுக்கு உட்பட்ட ஒரு விடயத்தை மட்டும் வைத்து, ஒருவரை நாம் இஸ்லாத்துக்கு உள்ளானவர் அல்லது இந்த மார்க்கத்தை விட்டு வெளியேறியவர் என்று கூறிட முடியாது.
.
இதனால்தான் ஆசிரியர் ஷெய்க் முஹம்மத் அல்-கஸ்ஸாலி அவர்கள் ''இஸ்லாம் வேறு, இஸ்லாமிய சிந்தனை என்பது வேறு'' என்றார்.
.
மக்கள் நடைமுறைபடுத்துவது இஸ்லாத்தின் புனித பிரதிகளில் இருந்து தாம் ''புரிந்து கொண்டவற்றையே'' அன்றி வேறில்லை...!

-Lafees Shaheed

No comments:

Post a Comment