Sunday, October 29, 2017

மெர்சல்  சிசேரியன்

Dr. Poovannan ganapathy
Via Facebook
2017-10-29

*மெர்சல்  சிசேரியன்*

  மெர்சல் திரைப்படம் பார்த்தேன்.மிகவும் வருத்தமாக இருந்தது .அடிப்படை அறிவே இல்லாமல் அடித்து விடுவதில் உச்சம் தொட்டிருக்கிறார்கள்.சிசேரியன் ,மருத்துவ பரிசோதனைகளை  குற்றமாக .பெரும் சதியாக பார்ப்பதும் ,அதனை பெரும்பாலோர் உண்மை என்று உச்சு கொட்டுவதும் வேதனை தான்.

சிசேரியன் குற்றமா?பல லட்சம் குழந்தைகளின் ,கருவுற்ற பெண்களின்  உயிரை
காப்பாற்றிய மருத்துவ முறையை ஊரே சேர்ந்து கொண்டு தூற்றுவதை விட ஒரு அவலமான சூழல் இருக்க முடியுமா

குழந்தை பிறப்பு என்பது  இரண்டாம் உயிர்  என்று பயந்து வாழ்ந்து வந்த சமூகத்தில்,பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு என்பதே இலலாத குடும்பங்கள் அரிதாக இருந்த சூழலில் இருந்து நாம் மாறி தாய் சேய் இறப்பு இரண்டும் அரிதாக குறைய முக்கிய காரணங்களில் ஒன்று சிசேரியன் அறுவை சிகிச்சை என்றால் மிகையாகாது. 

முதலில் மருத்துவத்தை பற்றிய ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.மருத்துவ  துறை விமானம்,மின்சார உற்பத்தி சாதனங்கள் ,கணினி போல ஒரே தன்மை,ஒரே அடிப்படை கூறுகள்,ஒரே பாதிப்புகள்,ஒரே reaction ,ஒரே முறையில்  சரி செய்யும் துறை கிடையாது.ஒவ்வொரு தனி மனிதனும் மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவர் தான்.அவர்களின் உறுப்புகளும் வித்தியாசம் தான்.லட்சம் பேருக்கு ஒத்து கொள்ளும் மருந்து இவருக்கு மட்டும் ஏன் ஒத்து கொள்ளாமல் ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்ற கேள்விக்கு இன்றுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.

இத்தனை பரிசோதனைகள் செய்தும் கடைசி நேரத்தில் ஏன் சிசேரியன் என்ற கேள்விக்கான விடை மேலே உள்ளது.

தடுப்பூசிகளை புரிந்து கொண்டால் மருத்துவ துறையை புரிந்து கொள்ள முடியும்.தடுப்பூசி என்பது என்ன.ஒரு நோயின் கிருமியை அதன் வீர்யத்தை நீக்கி விட்டு உடலில் செலுத்தி ,அந்த கிருமிக்கு எதிராக  உடலில் அதனை அழிக்கும் வலுவுள்ள எதிர் அணுக்களை உருவாக்கி வீரியமான நோய் கிருமி தாக்கும் போது தயாராக உடலில் இருக்கும் எதிர்ப்பு அணுக்கள் அவற்றை அழித்து நோய் வராமல் தடுப்பது தான்.

ஒரு தடுப்பூசி,சொட்டு மருந்து  போட்டாலே நியாயமாக அனைவருக்கும் எதிர் அணுக்கள் உருவாக வேண்டும்.இது மற்ற துறைகளுக்கு பொருந்தும்.வயரை கன்னெக்ட் செய்தால் லைட் எரியும் என்பதை போல இங்கு கிடையாது.ஒரு தடுப்பூசி போட்டால் நூறில் அறுவது சதவீதம் பேருக்கு தான் தடுப்பு எதிர் அணுக்கள் உருவாகின்றன.இரு முறை போட்டால் தொன்னூறு சதவீத மக்களுக்கு எதிரணுக்கள் உருவாகிறது.மூன்று முறை போட்டால் நூறில் தொன்னூற்றி ஒன்பது சதவீத மக்களுக்கு எதிர்ப்பு அணுக்கள் உருவாகி இருப்பதை தான் ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

  யாருக்கு பயன் அளிக்கவில்லை என்பதை ரத்த பரிசோதனை செய்து கண்டுபிடித்து பின்பு எதிரணுக்கள் இல்லை என்று தெரிய வந்தால் மட்டுமே இரண்டாவது ஊசி போட வேண்டும் என்பதற்கு ஆகும் செலவு என்பது மிக மிக அதிகம்.அதனால் தான் பொதுவாக அனைவருக்கும் மூன்று ஊசிகள்,ஐந்து முறை சொட்டு மருந்து என்ற முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

  மருத்துவத்தில் உறுதியான முடிவு என்று ஒன்று கிடையவே கிடையாது.கண்டிப்பாக சுக பிரசவம் தான் சிசேரியன் அவசியம் அல்ல ,நோய் முற்றிலும் குணமாகி விட்டது,இனி தாக்கவே தாக்காது,உங்களுக்கு நோய் வரவே வராது என்று சொல்ல கூடிய துறை மருத்துவ துறை அல்ல.

அமெரிக்காவில் இருந்தாலும் இந்தியாவில் இருந்தாலும் கணினியும் விமானமும் ஒன்று தான்.ஆனால் அங்கு கர்ப்பிணி பெண்களில் சக்கரை  நோய் பத்து சதவீதம் சிசேரியன் எட்டு சதவீதம்  இங்கு ஏன் இருவது சதவீதம் என்ற கேள்வி மருத்துவத்துக்கு பொருந்தாது.ஆப்ரிக்காவில் மிக அதிகமாக இருந்த பல லட்சம் உயிர்களை குடித்த மலேரியா நோய் காரணமாக மலேரியா நோய் வராமல் தடுக்க குறிப்பிட்ட  மரபணு குறைபாடு உள்ள மக்கள் பலர் பிறந்திருக்கிறார்கள்.

குழந்தையின் எடை,தாய்க்கு இருக்கும் ரத்த சோகை ,அதிக சக்கரை,குறைந்த உயரம் , இடுப்பளவு என பல்வேறு காரணங்கள்  சிசேரியன் முடிவு எடுக்க காரணமாக இருக்கின்றன.அதிகரிக்கும் பெண்களின் எடை,அதிக கலோரி உணவு பழக்கம்,உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை,precious பேபி போன்றவை குறிப்பிட்ட வர்க்கத்தில் சிசேரியன் அதிகரிக்க மிக முக்கிய காரணங்கள் என்றால் மிகை ஆகாது.

  அடுத்ததாக சிசேரியன் ஏன் இவ்வளவு பெரிய குற்றமாக செய்யய கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ற காரணமும் விளங்கவில்லை.ஒரு ஆண்டு இருசக்கர வாகனம் ஓட்டுவதால் நம் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை விட சிசேரியன் மூலம் ஏற்படும் பாதிப்பு வெகு வெகு குறைவு தான். தன் குழந்தைகளுக்கு ஏ சி இருக்கும் பள்ளிக்கூடத்தை தேடும் கூட்டம் இங்கு குதிப்பது விந்தை தான்.வீட்டில் ஏசி,காரில் ஏ சி ,பள்ளியில் ஏ சி,பணி இடத்தில ஏ சி என்று வாழ்வதால் வரும் பாதிப்பை விட சிசேரியன் சிகிச்சையினால் வரும் பாதிப்பு பல நூறு மடங்கு குறைவு தான்.

  முன்பு உலகெங்கும் எலும்பு முறிவுகளுக்கு மாவுக்கட்டு சிகிச்சை தான் மருத்துவமாக இருந்து வந்தது.இன்று பெரும்பாலான எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை தான் மருத்துவமாக மாறி இருக்கிறது. மாவு கட்டு சிகிச்சையில் எலும்பு கூடாத நிலை,தவறாக எலும்பு கூடுதல்,தசை wasting என இருக்கும் பல குறைபாடுகளை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்வதால் அறுவை சிகிச்சை பல லட்சம் எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சரியான மருத்துவமாக பரிந்துரைக்கப்படுகிறது.

  இதே தான் சிசேரியனில் நடக்கிறது.எடை அதிகமான ,உயரம் குறைவான ,உடற் பயிற்சி இல்லாத ,முப்பதை நெருங்கிய வயதில் முதல் பிரசவம் ,குழந்தை எடை ,ரத்த சோகை என பல காரணங்களினால் சிசேரியன் அதிகரிக்கிறது.பிரசவ வலி பற்றிய பயமும் ஒரு முக்கிய காரணமாக மாறி வருகிறது.வலியில்லாமல் நார்மல் பிரசவம் நடக்க மயக்க மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்து விட்டன.தண்ணீரில் பிரசவம் போன்ற முறைகளும் முயற்சிக்கப்படுகின்றன

   எவ்வளவு செலவானாலும் OK,ஒரு சிறு பாதிப்பு கூட வர கூடாது என்று தான் தனியார் மருத்துவமனைக்கு வந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் தான் மிக மிக அதிகம்.நார்மல் பிரசவம் என்று பல மணி நேரம் காத்திருந்தால் குழந்தைக்கு குறிப்பிட்ட பாதிப்பு ஏற்பட ஆயிரத்தில் ஒரு சதவீத பாதிப்பு உண்டு என்றால் கூட ஏற்று கொள்ளாத கூட்டத்திடம் சிசேரியன் அதிகரிக்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

  சிசேரியன் அதிகரிக்க மருத்துவரின் பயமோ,பணத்தாசையோ நூறில் ஒரு பங்குக்கும் குறைவு தான்.ஆனால் அதற்கு முழு காரணமும் மருத்துவர்கள் மட்டுமே என்று பேசுவது முட்டாள்த்தனத்தின் உச்சம்.

மருத்துவர் என்றால் குற்றமே  செய்யாதவர் என்று சொல்லவில்லை?மருத்துவத்தையே குற்றமாக பார்ப்பது நியாயமா என்று தான் கேட்கிறேன்.எனக்கு சிசேரியன் தான் வேண்டும் என்று சொல்லும் நோயாளிகளும் உண்டு.சிசேரியன் தான் செய்வேன் என்று இருக்கும் மருத்துவர்களும் உண்டு. தாய்,சேய் இருவருக்கும் ஏதாவது ஒரு பாதிப்பு வரும் வாய்ப்பு லட்சத்தில் ஒன்றாக இருந்தாலும் உடனே சிசேரியன் செய்து விட வேண்டும் என்று என்னும் மருத்துவர்களும் உண்டு,கர்ப்பிணிகளும் ,அவர்களின் உறவுகளும் உண்டு .

சிசேரியன் கண்டிப்பாக குற்றம் கிடையாது.மாபெரும் மருத்துவ முன்னேற்றம்.யாருக்கு சிசேரியன் தேவை என்பதை முடிவெடுக்கும் முழு உரிமை மருத்துவம் படித்தவர்களுக்கு தான் உண்டு.தேவை இலலாமல் சிசேரியன் செய்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களில் 100 இல் தொன்னூறு சதவீதம் அறியாமையால் வருவது தான்.

Sunday, October 22, 2017

தமிழ் தேசியம் என்பது சாத்தியமில்லாதது

தமிழ் தேசியம் என்பது சாத்தியமில்லாதது என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தமிழர்கள் சாதி ரீதியில் பிரிந்து கிடக்கின்றனர். எவ்வளவு தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் தமிழ் மக்கள் தங்கள் சாதியை விடுவதாக இல்லை. மாறாக சாதியின் மீது பற்றாக அலைகின்றனர். ஆகவே சாதி் தமிழர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் (தலித் மக்கள்) ஆங்கிலம் பயின்று பிழைக்கும் வழியை பார்க்கவேண்டும். தமிழால் சாதி தமிழர்களுக்கே எந்த பயனும் இல்லாத போது தலித் மக்களுக்கு என்ன பயன் இருந்து விட போகிறது. !

*தேசிய தலைவர். மேதகு. பிரபாகரன்
(ஆதாரம்: தமிழ் தேசிய பெருங்கனவு, யாழ் பதிப்பகம் , பக்கம் 215) *

கோடாரி காம்பு ராம்நாத் கோவிந்த

மு. செ. பாதுஷா
Via Facebook

(1) அண்ணல் அம்பேத்கரால் இயற்றப்பட்ட "அரசியல் சாசனம்", கோடாரி காம்பு ராம்நாத் கோவிந்த்-ஆல் தூக்கி எறியப்படும் (இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதே இதற்காகத்தான்)

(2) தலித்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குரிமை பரிக்கப்படும் (அனைவரும் பயன்படுத்திய ரூபாய் நோட்டுகள் தடை செய்தவர்களுக்கு இதெல்லாம் விசயமே கிடையாது)

(3) தலித்கள் மற்றும் சிறுபான்மையினருகாக போராடும் கம்யூனிஸ்டுகள் மிகக் கடுமையான ஒடுக்கப்படுவார்கள். (10000 பஜ்ரங்தள் தீவிரவாதிகள் ஏற்கெனவே இந்த வேலையை தொடங்கி விட்டதாகவும் அது தீவிரப்படுத்தப்படும் என்று அவர்களே ஒப்புப் கொண்டுள்ளார்கள்)

தொழில் மற்றம் பொருளாதார சமநிலைக்கான விமுறைகள

எங்கோ, யாரோ.
2017-10-22

தொழில் மற்றம் பொருளாதார சமநிலைக்கான விமுறைகள்:

*Rule# 1*

ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.

(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்)

*Rule# 2*

தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்)

*Rule# 3*

சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது)

*Rule# 4*

ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.

(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்)

*Rule# 5*

அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே, அதாவது ஒரே தொழிலில் எல்லா முதலீட்டையும் செய்யாதே.

(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை)

*Rule# 6*

நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. தொழிலில் நீங்கள் எப்போதும் நேர்மையாய் இருங்கள். ஆனால், அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

(மிக அவசியமான ஒன்று, எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது)

*Rule# 7*

Being rich is not about "how much do you have", but "how much do you give"

Saturday, October 21, 2017

உலகின் முதல் "ஃபேக் ஐடி"

Tamil Selvan
2017-05-04
Via Facebook

உலகின் முதல் "ஃபேக் ஐடி"யை உருவாக்கி சாதனைப் புரிந்தது நமது இந்து மதத்தவர்கள் தான் என்பது நம்மிள்_எத்னி_பேருக்கு_தெர்யும்?

அந்த ஃபேக் ஐடியின் பெயர் இஸ்மாயில் என்பதும்,

அதன் அசலான உரிமையாளர் இந்துப் பார்ப்பனரான கோட்சே என்பதும்,

"இஸ்மாயில்" என்று இஸ்லாமியப் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொண்டு "கோட்சே" நிகழ்த்திய அரிய வரலாற்றுச் சாதனை (!!!) காந்தியின் கொலையாகும் என்பதையும்,

இந்துக்களான நாம் பெருமையோடு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

"உண்மை இந்து என்றால் ஷேர் செய்து கொ"ல்"லவும்".

என் வலிமையை ஈவு இரக்கமின்றி சிதைத்து சின்னாபின்னமாக்கும் மோசடி.

இந்த பதிவை எழுதியிருப்பவர்  முதுகலை மருத்துவத்தில் தங்கப்பதக்கம் வாங்கிய அறுவை சிகிச்சை நிபுணர் 
Dr. Chinnappan M
Via Facebook
2017-09-03

பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த வருடத்தில் ஓர் இரவு, *டாக்டர் ஆகமுடியலேன்னா என்ன பண்ணுவ* - என்று அப்பா கேட்டார். என்னிடம் பதிலே இல்லை.

பேச ஆரம்பித்த நாளிலிருந்து யாராவது பெரிய புள்ளையாகி என்ன படிக்கப்போற என்று கேட்டால், *டாக்டர்* என்று சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டவன். 

ஒரு விதத்தில் எனக்கு அந்த பதிலை என்றோ ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவர் அப்பாவாகத்தான் இருக்கமுடியும். அவரே வந்து அது முடியாவிட்டால் என்ன செய்வாய் என்று கேட்டதும், அதற்கு என்னிடம் எந்த ஒரு மாற்று பதிலும் இல்லாமல் போனதும், அந்த இரவை அத்தனை முக்கியமாக்கியது.

அந்த கேள்விக்கான இடமே இருக்கக்கூடாது என்றுதான் முடிவு செய்துகொண்டேன். கிட்டத்தட்ட செலுத்தப்பட்டவன் போல்தான் அந்த ஒரு வருடம் இருந்தேன். என் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தே கொஞ்சம் விலகிவிட்டேன்.

அப்பா ஆசிரியர் என்பதால் அவருடைய நண்பர்கள் அனைவரும் என்மீது அக்கறை கொண்டார்கள். தனி ஒருவனாக அவர்கள் வீட்டு மொட்டை மாடிகளில் அமர்ந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் தேர்வு எழுதிக்கொண்டிருப்பேன்.

முந்தைய நாள் இரவே மொட்டை மாடியில் கேள்வித்தாளை வைத்துவிடுவார்கள். விடை தாளையும் அதே கல்லிற்கு கீழே வைத்துவிட்டு சத்தம்போடாமல் வந்துவிடுவேன். மாலையில் தாள்கள் திருத்தப்பட்டிருக்கும். குறைகள் அனைத்தையும் விளக்கி சொல்லித் தருவார்கள்.

ஒவ்வொருவரின் வீடும் எங்கள் விட்டிலிருந்து குறைந்தது 5 கி.மீ தூரம் இருக்கும். அப்போதெல்லாம் அந்த அலைச்சலில் தலையில் வியர்ப்பதால் அடிக்கடி ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் என்பதால், சலூனில் தலையின் பக்கவாட்டில் வெட்ட பயன்படும் மெஷினை கொண்டே முழு தலையையும் மழித்துக்கொண்டு ஒரு வருடம் முழுக்கவே மொட்டை தலையுடனே திரிந்தேன்.

வேண்டுமென்றே என்னிடம் இல்லாத இறுக்கத்தை சேர்த்துக்கொண்டேன். சிரிக்கக்கூடமாட்டேன். டிவி இருக்கும் இடத்தைக்கூட பார்க்கமாட்டேன். அம்மாவிற்கு என்னை இப்படி பார்ப்பதில் உவப்பில்லை.

*சீட் கிடைக்கவில்லையெனில் இம்ப்ரூவ்மெண்ட் செய்துக் கொள்ளலாம்* - என்றார்கள். அந்த வார்த்தையைக் கேட்டதும் அப்படி நொறுங்கிப்போய்விட்டேன். இத்தனை உடல் வருத்தங்களையும் மீறி எனக்கு சீட் கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது என்ற உண்மை அத்தனை கசப்பாக இருந்தது. 

*கணக்கு பாடத்திலும் அக்கறை காட்டு* என்று அப்பா சொல்வது, சூசகமாக *என்ஜினியரிங் படிக்கவும் உன்னை தயார்ப்படுத்திக்கொள்* -  என்று சொல்வதாக எனக்கு தோன்றும். கணக்கு பாடம் படிப்பதே ஒரு விதத்தில் என் தோல்விக்கு என்னை தயார் செய்து கொள்ளும் விஷயமாகவே எனக்கு தெரிந்தது.

*என்ஜினியரிங் அல்லது இம்ப்ரூவ்மெண்ட் இரண்டில் எது என்று கொஞ்சம் இரண்டாம் முடிவைப் பற்றி யோசித்துவைத்துக்கொள்* - என்று அப்பாவின் நண்பர்கள் சிலரும் சொல்லிவைத்தார்கள்.

மதிப்பெண் பட்டியல் வந்ததும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கவே தேவையில்லை என்பது எனக்கு அன்றைய தேதியில் அத்தனை சந்தோஷமாக இருந்தது. மெய்வருத்த கூலி கிடைத்தது. அந்த ஒரு வருட மோனத் தவத்திலிருந்து என் இயல்பிற்கு நான் திரும்பவே எனக்கு சில மாதங்கள் ஆனது.

சீட் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்திருப்பேன் என்று இப்போதும் யோசிக்கமுடியவில்லை. என் அத்தனை கஷ்டங்களுக்கும் சீட் கிடைப்பது மட்டுமே ஒரே முடிவாக இருக்கமுடியும்.

அதையும் மீறி சீட் கிடைக்கவில்லை என்றால் அது என்னுடைய குறை/இயலாமை. அதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓரிரு மாதங்களில் என்னைத் தேற்றி கொண்டுப்போய் அண்ணா யுனிவர்சிட்டியிலோ, அந்தியூர்/ராசிபுரத்திலோ சேர்த்து விட்டிருப்பார்கள். நாளடைவில் அதற்கு பழகியிருப்பேன். இயலாமை எப்போதும் நம்மை நம் தகுதிக்கேற்ப பழக்கப்படுத்திவிடும். பிரச்சனையில்லை.

*ஆனால், நான் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான மதிப்பெண்ணுடன் தயாராய் இருந்து, என் அத்தனை கனவும் மெய்யாகப்போகிறது என்று நம்பிக் கொண்டிருக்கும் போது, நீ படித்த எதுவுமே தேவையில்லை, நாங்கள் வேறொரு தேர்வு வைப்போம் அதுதான் உன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று யாரேனும் சொன்னால் எப்படியிருக்கும்?*

என்னிடம் கொடுக்கப்பட்ட பாடத்தில், என்னிடம் எதிர்ப்பார்க்கப்பட்டதை, என் அத்தனை உடல் உழைப்பையும் கொடுத்து, என் மனதை ஒருநிலை படுத்தி, போராடி நான் முழு தகுதியாளனாய் வென்று நிற்கும்போது, நீ ஜெயிக்கவில்லை, உனக்கு இதற்கான தகுதி இல்லை முத்திரை குத்தியிருந்தால்... அனுபவங்கள் பலவற்றைக் கடந்து வந்த இன்றைய நிலையிலிருந்தே சொல்கிறேன்... 

*நிச்சயம் தூக்கில் தொங்கியிருப்பேன்*

ஏனெனில் அது என் இயலாமையினால் வந்த தோல்வியல்ல. என் வலிமையை ஈவு இரக்கமின்றி சிதைத்து சின்னாபின்னமாக்கும் மோசடி.

மெர்சல் - விமர்சகன் எப்போதும் வெகுஜனங்களால் புறக்கணிக்கப்பட்டவனா கைவிடப்பட்டவனா தனியனா இருக்கிறான

John Babu Raj
Via Facebook
2017-10-21

மெர்சலை மெர்சல்னும் சொல்லலாம் மேனா மினுக்கின்னும் சொல்லலாம்

"மெர்சல் உனக்குப் பிடிச்சிருக்கா?"

"தமிழ்ப் படத்தை விமர்சனம் பண்றதுல ஒரு சிக்கல் இருக்கு கவனிச்சிருக்கியா?"

"என்னது?"

"அரை கிரவுண்ட் நிலத்துல அஞ்சு லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு கட்டியிருக்கேன்னு ஒருத்தன் சொன்னா அதை எப்படி பார்க்கணும்? சின்ன பட்ஜெட், சின்ன இடம்... அதுல எப்படி கட்டியிருக்கான்னு பார்த்து நல்லாயிருக்கா இல்லையானு சொல்லணும். அதுதானே முறை?"

"ஆமா."

"அதேவீட்டை காட்டி, தாஜ்மஹால் ரேஞ்சுக்கு ஒரு வீட்டை கட்டியிருக்கேன்னு சொன்னா என்ன பண்ணுவ?"

"அட லூஸு ஏதோ ஒரு வீட்டை கட்டியிருக்க, உன் வசதிக்கு அது போதும். அதைவிட்டுட்டு தாஜ்மஹால் அது இதுன்னு உளர்றியேன்னு சொல்லத் தோணும்."

"கரெக்ட். இதுதான் தமிழ் சினிமால உள்ள பிரச்சனை. இப்போ மெர்சல் படத்தையே எடுத்துக்க. படம் நிறைய பேரை போய் சேரணும், கல்லா நிறையணுங்கிற ஒரே காரணத்தை முன்வச்சுதான் இந்தப் படத்தை எடுத்திருக்காங்க. அந்தவகையில அட்லி நல்லாவே படத்தை கொடுத்திருக்கார். என்ன மாதிரி சீன் வச்சா ரசிகர்கள் கைத்தட்டுவாங்கங்க, எந்த சீனுக்கு சென்டிமெண்டா மெல்ட் ஆவாங்கறதை யோசிச்சு படத்தை எடுத்திருக்கார். உதாரணமா, ஹாஸ்பிடல் போனா காசு நிறைய செலவாகுங்கிறது எல்லோருக்குமே தெரியும். இதைத்தான் அவர் மெயின் பிரச்சனையா சொல்றார். பிரச்சனையை தீவிரப்படுத்தி காட்டுறதுக்காக ஹீரோவை அஞ்சு ரூபா மட்டும் வாங்கிட்டு வைத்தியம் பார்க்கிறவரா காட்றார். ஜனங்க இந்த எதிரெதிர் துருவ ஸ்கிரீன் ப்ளேல கண்டிப்பா விழுந்திடுவாங்க. அதேமாதிரி ஜிஎஸ்டி மேல மக்களுக்கு கோபம் இருக்கு. அதைப் பத்தி ரெண்டுவரி பேசுனாலே கைத்தட்டுவாங்க."

"வாஸ்தவம்தான்."

"தமிழன்டான்னு பவர் ஸ்டார் சொன்னாலே விசில் பறக்கும், அதையே விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோ சொன்னா?"

"தியேட்டர் கிழிஞ்சிடும்."

"அதேதான். ரசிகர்களை சுவாரஸியப்படுத்தி நிறைய வசூலிக்கணுங்கிறதுதான் மெர்சல் டீமோட எய்மே. அந்தவகையில மெர்சல் படத்தை மெர்சல்னே சொல்லலாம்."

புரியுது. நீ சொன்ன இரண்டாவது மேட்டர்...?"

"வசூல்தான் உங்க எய்ம். அதுக்கு சில சித்து வேலைகளை பண்ணியிருக்கீங்க. அதோட நிறுத்துனா ஓகே. ஆனா, சென்ட்ரலையும் ஸ்டேட்டையும் விஜய் மிரட்டிட்டாரு, சோஷியல் மெசேஜ் சொல்லி திணறடிச்சிட்டாருன்னு ரசிகர்களும், மீடியாவும் கொண்டாடுறப்போ அப்படி என்ன நீங்க பெரிய சோஷியல் மெசேஜ் சொல்லிட்டீங்கன்னு பேச வேண்டியிருக்கு."

"அதாவது அஞ்சு லட்ச ரூபா வீட்டை தாஜ்மஹால் கூட கம்பேர் பண்ணுன மாதிரி....?"

"கரெக்ட். மெர்சல்ல வர்ற எல்லா மெசேஜும் இணையத்துல வேணுங்கிற அளவுக்கு அடிச்சு துவைச்ச விஷயங்கள்தான். டாஸ்மாக் சரக்குக்கு எட்டு பர்சன்டேஜ் ஜிஎஸ்டி, மருந்துக்கு 12 சதவீதமான்னு கேட்கிறாங்க. ஃபேஸ்புக்ல இதேமாதிரி மொண்ணையா எத்தனை பேர் ஸ்டேட்டஸ் போட்டிருக்காங்க?"

"இதுல என்ன மொண்ணை இருக்கு?"

"லூஸு... நீ 200 ரூபாய்க்கு வாங்குற குவாட்டரோட கொள்முதல் ரேட் வெறும் 20 ரூபாய்தான். அதுக்கு 100 பர்சன்டுக்கு மேல வரியைப் போட்டு 200 ரூபாய்க்கு அரசு விக்குது. ஒரே நாடு ஒரே வரின்னு, இப்போ இருக்கிற வரியை நீக்கிட்டு சரக்குக்கு 28 பர்சன்டேஜ் ஜிஎஸ்டி போட்டா என்னாகும்?"

"ம்... கணக்குல நான் வீக்கு, நீயே சொல்லு."

"20 ரூபா குவாட்டரை ஜிஎஸ்டி சேர்த்து 26 ரூபாய்க்கு தர வேண்டியிருக்கும். அரசுக்கு குவாட்டருக்கு 172 ரூபாய் வரி இழப்பு வரும். இதே கதைதான் பெட்ரோல் டீசலுக்கும். இப்போ இருக்கிற வரியை எடுத்திட்டு ஜிஎஸ்டி மட்டும் போட்டா சரக்கு, பெட்ரோல், டீசல் மூணோட விலையும் ரொம்பவும் குறையும். அதனாலதான் இந்த மூணையும் ஜிஎஸ்டியில இருந்து விலக்கி வச்சிருக்காங்க. இது தெரியாம ஒருத்தன் டயலாக் வச்சா ஊர் கூடி விசிலடிக்குது."

"இது மட்டும்தானா இன்னும் இருக்கா?"

"வைத்தியம் பார்க்க அஞ்சு ரூபாய் வாங்குறவங்க இருக்காங்க. அது சேவை. அதேமாதிரி எல்லா டாக்டர்ஸும் இருக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. படத்துல அஞ்சு ரூபா வாங்குற நீங்க ஒரு படத்தை டைரக்ட் பண்ண அஞ்சு ரூபா வாங்குவீங்களா? பத்து கோடி கேட்கிறீங்கயில்ல. அஞ்சு ரூபா வாங்கி ஒரு படத்துல நடிப்பீங்களா? முப்பது கோடி கேட்கிறீங்கயில்ல. மருத்துவத்துறையில நிறைய ஊழல் இருக்கு. நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கு. மருத்துவத்துறையை விமர்சிக்கணும். ஆனா, அது மெர்சல்ல வர்ற மாதிரியில்ல. டாஸ்மாக் டயலாக் மாதிரி இது ரொம்பவும் மேலோட்டமானது."

"நீ சொல்றதெல்லாம் சரிதான். இன்னைக்கு சினிமால சின்ன விஷயத்தைகூட யாரும் கண்டிச்சுப் பேசறதில்லை. ஆனா, மெர்சல்ல ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியான்னு நிறைய விஷயங்களை - நீ சொல்ற மாதிரி மேலோட்டமாகவே இருந்தாலும் பேசியிருக்காங்க. அது தில் இல்லையா?"

"அது தில்லா இல்லையாங்கிறதை அப்புறம் பார்ப்போம். நான் சொல்ல வர்றது வேற. தியேட்டர்ல விசிலடிங்க, கொண்டாடுங்க. ஆனா, வெளியில வந்து படத்துல நடிச்ச ஹீரோதான் சமூக மாற்றத்துக்கு அத்தாரிட்டின்னு பேசாதீங்க. இன்னைக்கு மீடியா அதைத்தான் செய்துகிட்டிருக்கு. பிரசன்னான்னு ஒருத்தர். கைவினைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியிலயிருந்து விலக்கு வேணும்னு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கார். அவரைப் பற்றி ; யாருக்காவது தெரியுமா? இதேபோல ஒவ்வொரு சமூகப் பிரச்சனைக்கும் நூத்துக்கணக்கான பேர் போராடிகிட்டிருக்காங்க. அதையெல்லாம் ஒரு பொருட்டா நினைக்காத ஒரு கூட்டம், சினிமால நாலுவரி டயலாக் பேசுன ஆளை சூப்பர் ஹீரோன்னு தூக்கி வச்சு கொண்டாடுறது சரியான்னுதான் கேட்கிறேன்."

"கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு. ஆனா, மத்த யாரும் பேசாத விஷயத்தை மெர்சல்ல பேசியிருக்கிறது தில் தானே?"

"முன்னாடி ஒரு நடிகை, பஸ்ல பொம்பளைங்களுக்கு செக்ஸ் தொல்லை தர்றவங்களை தைரியமா பெண்கள் எதிர்க்கணும்னு பேட்டி தந்தாங்க."

"நல்ல விஷயம்தானே?"

"ஆனா, அந்த நடிகை ஒருபோதும் பஸ்ல போனதேயில்லை. அதேநேரம் அவங்க இருக்கிற சினிமா தொழில்ல பஸ்ஸைவிட பல மடங்கு அதிக பாலியல் தொல்லை இருக்கு. அந்த நடிகை தன்னோட துறையில இருக்கிற பாலியல் தொல்லை பத்தி பேசணுமா இல்லை தான் ஒருபோதும் போகாத பஸ்ல நடக்கிற பாலியல் தொல்லை பத்தி பேசணுமா?"

"திரும்பவும் குழப்பறியே?"

"ஊழலை ஒழிப்பேன்னு சொல்ற விஜயகாந்த் என்னிக்காச்சும் தன்னோட சினிமாதுறையில இருக்கிற ஊழல், கறுப்புப் பணம் பத்தி பேசியிருக்கிறாரா?"

"ஆமா, இல்லியே."

"ஆமாவா இல்லியா?"

"இல்லை."

"ஏன்னா மத்தவங்ககிட்ட உள்ள தப்பை சுட்டிக்காட்டுறது சுலபம். சொந்தத்துறையில அதை செயல்படுத்துறதுதான் கஷ்டம். ஜிஎஸ்டி பத்தி பேசுறது விஷயமே இல்லை. அதை நண்டும் நரியும் இணையத்துல செய்துகிட்டிருக்கு. இன்னைக்கு மெர்சல் படத்துக்கு 90 சதவீத தியேட்டர்ஸ் அதிகபடி கட்டணம் வசூலிக்கிறாங்க. அது தப்புன்னு மெர்சல் ஹீரோவால சொல்ல முடியுமா? சொன்னா அதுக்கு பேருதான் தில்லு. அந்த தில் இன்னைக்கு வரைக்கும் எம்.ஆர்.ராதாங்கிற ஒரேயொரு சினிமாக்காரனுக்கு மட்டும்தான் இருந்திருக்கு."

"நீ பேசுறதெல்லாம் சரி. எனக்கு ஒரு சின்ன சந்தேகம், உலகமே ஒண்ணை கொண்டாடுறப்போ அதை எதிர்க்கிறதும், உலகமே ஒண்ணை எதிர்க்கிறப்போ அதை கொண்டாடுறதும்தான் விமர்சனமா? அவங்கதான் விமர்சகர்களா? இது உனக்கே தப்பா தெரியலை?"

"இந்த உலகத்துல நூறு சதவீத நல்லதோ நூறு சதவீத கெட்டதோ கிடையாது. இங்க பிளாக்கோ வொயிட்டோ கிடையாது. எல்லாமே க்ரேதான். இதை நிலைநாட்றதுதான் ஒரு விமர்சகனோட முதல் கடமை. வெகுஜனம் ஒரு விஷயத்தை வெள்ளைன்னு கொண்டாடுறப்போ, பாரு... முழுசா அது வெள்ளையில்லை, அதுலயும் கறுப்பு இருக்குன்னு சுட்டிக் காட்டணும். முழுசா ஒண்ணை வெறுக்கிறப்போ, பாரு... அதுலயும் விரும்பக் கூடியது சிலது இருக்குன்னு புரிய வைக்கணும். அந்தவகையில் விமர்சகன் எப்போதும் வெகுஜன ரசனைக்கு எதிராகத்தான் தெரிவான். ஒரு விஷயத்தை முரட்டுத்தனமா ஆதரிக்கிற போதும், அதே முரட்டுத்தனத்துடன் எதிர்க்கிற போதும்தான் கும்பல் மனோபாவம் உருவாகுது. கும்பல் மனோபாவத்தின் செல்லக்குழந்தைதான் தனிநபர் வழிபாடு. விமர்சகன் இதை கட்டுடைச்சுகிட்டே இருக்கிறான். கும்பல் மனோபாவத்தின் உணர்ச்சி வெறியில் தண்ணி தெளிக்கிற வேலையைத்தான் அவன் தொடர்ந்து செய்துகிட்டிருக்கிறான். அதனால எப்போதும் அவன் வெகுஜன ரசனைக்கு எதிர்நிலையில் இருக்க வேண்டியதாகுது. அது அவங்களை புறக்கணிக்கிறதோ, அவங்களை மட்டம் தட்டுறதோ இல்லை. அவங்க பார்க்காத பக்கத்தை புரிய வைக்கிறது. அந்தவகையில் அவன் எப்போதும் வெகுஜனங்களால் புறக்கணிக்கப்பட்டவனா கைவிடப்பட்டவனா தனியனா இருக்கிறான்."

"உன்னை மாதிரி...? சரி, மெர்சலைப் பத்தி உன்னோட கடைசி விமர்சனத்தை ரெண்டே வரியில சொல்லு."

"மெர்சலைப் பொறுத்தவரை கலெக்ஷனுக்காக எடுக்கப்பட்ட படம். அதில் வர்ற கதையும், காட்சியும், வசனமும் அதுக்காகவே வைக்கப்பட்டது. அது பிடிச்சிருந்தா விசிலடிச்சு கொண்டாடுங்க. ஆனா, வெளியே வந்து அதுதான் மானுட மீட்புக்கான சாதனம்னு பேசாதீங்க."

https://m.facebook.com/story.php?story_fbid=996255670514429&id=100003900162527