Umamaheshwaran pannerselvanm
Via Facebook
2017-10-10
Penicillium chrysogenum, Penicillium notatum என்று அடிக்கடி வழங்கப்பெறும் பெயர்கள் ஹீலர் கொலைகாரர்கள் சொல்வதுபோல் ஏதோ கம்ப சூத்திரம் இல்லை.
Penicillium வகை பூஞ்சை களிடம் இருந்து பெறப்படுவதே Penicillin.
அதாவது ஹீலர் /அவியல் மருத்துவர் /மரபு சார் ஏமாற்றுப் பேர்வழிகள் சொல்வதுபோல் இயற்கையில் நிரம்பிக் கிடக்கும் பூஞ்சைகளிடமிருந்து கிடைக்கும் பொருள் தான் Penicillin.
சிறந்ததோர் antibiotic.
முதலில் English Medicine என்ற சொற் பிரயோகமே தவறு. Modern Medicine என்பதே சரி.
மேலும் Modern medicine என்பது செடிகள், கொடிகள், மூலிகைகளை புறம்தள்ளும் முறையல்ல.
சொல்லப்போனால் சுஸ்ருதர், சரகர், ஹிப்போகிரேடஸ் என முட்டாள்களல்லாத முன்னோர்கள் உருவாக்கிய மருத்துவமுறைகள் பற்றி படித்து தெரிந்து வைத்திருப்பதும் modern medicine ல் ஒரு அங்கம்.
மேலும் இது உலகம் முழுக்க (முழுக்க என்றால் ஆரப்பாளையம், காசிமேடு, கிராவ்ஃபோர்ட், காந்திபுரம், கோட்டாறு, டவுண், மயிலாடும்பாறை, குரூஸ்புரம், ஆத்தூர், ஆட்டையாம்பட்டி என சகல தமிழக ஊர்களும் உள்ளடக்கிய உலகம் ) உள்ள மருத்துவர்கள் contribute செய்யும் மருத்துவமுறை. தனி ஒருவரால் நிறுவப்பட்டதல்ல. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த இருந்த மருத்துவமுறைகளை மேம்படுத்தி, அதை செரிவூட்டி, முறைப்படுத்தி ,trial and error reports எல்லாம் படித்து, primary and transformed cell lines, animals, human clinical trial எல்லாம் முடித்து "பாதுகாப்பானது " என்று ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்னர் புழக்கத்துக்கு வருவதே Modern medicine.
It is an inclusive unit of all medicinal practices and procedures that are "proven".
மனித உடலின் தன்மை, மருந்து செயல்படும் தன்மை என்ன? எப்படி செயல்படுகிறது என்று கூர்ந்து ஆராயப்பட்டு pharmaco-kinetics கவனிக்கப்பட்டு பின்னர் புழக்கத்திற்கு விடப்படுவது.
In concise, the single capsule you consume has numerous trials and studies behind it. There are even warning about the side effects and contra indications.
இப்படி ஏற்கனவே இருந்த மருத்துவ முறைகள் எல்லாவற்றையும்ம் அலசி ஆராய்ந்து அதை ஒழுங்காக பரிசோதித்து திரும்ப திரும்ப மீளாய்வுக்கு உட்படுத்திக்கொண்டே இருப்பது தான் நவீன மருத்துவம்.
ஆக, இயற்கை வழிவகைகளை புறந்தள்ளுவது அல்ல நவீன மருத்துவம். யாவருக்கும் பாதுகாப்பான Proven வழிவகைகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் மருத்துவா முறையே நவீன மருத்துவம்.
ஒரு மருந்து எப்படி வேலை செய்கிறது என்று அறிந்துகொண்டு அதை விமர்சிப்பது தான் ஒழுங்கு. மருந்து எப்படி செயல்படுகிறது என்று அறிந்துகொள்ள முதலில் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு பேசுதல் நலம். Harper's Biochemistry , Lehninger's Principle of Biochemistry படித்தால் ஓரளவுக்கு உடல், உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றங்கள், உணவு என்ன செய்கிறது என்பது குறித்த அறிவு சிறிது கிட்டும் .
செல்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்ள Cell and Molecular biology by Robertis, Molecular Cell Biology by David Baltimore and Harvey Lodish கொஞ்சம் புரட்டினால் புரியும்.
நுண்ணுயிரிகள் பற்றி நவீன மருத்துவத்தில் Microbiology என்ற தனி துறையே இருக்கிறது. வெறும் வேப்பெண்ணை, கடலை எண்ணெய் , நொச்சி தழைகள் வைத்து குணப்படுத்திக்கிறேன் என்று உட்டாலக்கடி விடாமல், பாக்டீரியா , வைரஸ் , பூஞ்சை என ஒவ்வொன்றின் குணமும் , ஒவ்வொன்றின் செயல்படும் விதமும், ஒவ்வொன்றின் வீரியமும் கூராக ஆய்வு செய்யப்படும். அவற்றுக்குத் தகுந்தாற்போல் மருந்துகள் தயார்படுத்தப்படும். எந்த முறையில் , எந்த அளவில் கொடுக்க நோய் நீங்கும் என்பது நெடிய ஆய்வு மூலமே ஊர்ஜிதப்படுத்தப்படும் .
மேலும் தயிர் சாப்பிட்டால் குடலுக்கு நல்லது என்று மரபு வழி மருத்துவம் சொல்வதை தான் probiotics என்று மருந்தாக lactobacilus மாத்திரைகளை பரிந்துரைக்கிறது நவீன மருத்துவம். எனவே நவீன மருத்துவம் உணவு முறைக்கு எதிரானது என்ற கருத்து ஒரு கயமை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உடலுக்கு வலு ஏற்ற பால், உருளைக் கிழங்கு, நெல்லிக்காய் என எதையுமே எடுத்துக்கொள்ள தான் நவீன மருத்துவம் சொல்கிறேன். ஆனால் நெல்லிக்காய் கேன்சரை நீக்கும் என மொட்டையாக சொன்னால் "எப்படி ? " என்ற செயல்முறை விளக்கம் கேட்க தான் செய்யும் நவீன மருத்துவம் ?
Mode of Action என்ன, Minimum Inhibitory Concentration என்ன, LD 50 என்ன என்று சாதாரணமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை சொல்லாமல், மந்திரத்தால் மாங்காய் வரும் என்று சொன்னால் அதை மூடத்தனம் என்று தான் சொல்லும்.
ஒரு வண்டியில் பஞ்சர் வந்தால், carburetor வீணாகப் போனால் பெட்ரோல் மூன்று லிட்டர் ஊற்றினால் போதும் என்று சொன்னால் மெக்கானிக் மட்டுமல்ல, ஊரே சிரிக்கும். வண்டி ஓட பெட்ரோல் தேவை. வண்டியின் பாகங்களில் பழுது என்றால் அதற்கு தனி கவனிப்பு தேவை. பெட்ரோல் ஒன்னும் செய்ய முடியாது.
இது தான் டெங்குவுக்கும் சொல்வது. எல்லா உணவுமே மருந்து அல்ல. உடலில் ஒரு நோய் தாக்கினால் பல விதங்களில் பல காரணிகளால் பாதிப்பு ஏற்படும். இந்த நிலவேம்பு, நெல்லிக்காய் எல்லாம் வலு தரலாம். ஏதேனும் ஒன்றிரண்டு காரணிகளை குணமாக்கலாம். ஆனால் சர்வ நிச்சயமாக எல்லாவற்றையும் குணமாகாது. டைபாயிடு வந்திருக்கையில் வெறுமனே இலை தழை தின்றால் நோய்கிருமி ஆளை போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்கும்.
மேலும் நம்மை சுற்றியுள்ள கிருமிகள் தொடர்ந்து Mutate ஆகிக்கொண்டும் , antibiotic resistance ஏற்றிக்கொண்டு இருக்கின்றன. அவற்றை எதிர்த்து போராட பெரும் சக்தி செலவிட வேண்டிய நிர்பந்தம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டுக்கு இருக்கிறது. வெறும் ஒரு இலையோ தழையோ அத்தகைய கொடுமையான கிருமிகளை அசைக்கக் கூட இயலாது. இது தான் எதார்த்தம்.
நுண்ணுயிரியல் குறித்து மேலதிக விவரங்களை புரிந்துகொள்ள Microbiology by Pelczar, Microbiology by Prescott கொஞ்சம் புரட்டலாம்.
ஆனால் இதை எல்லாம் விட்டுவிட்டு ஆயா சொன்னார், ஆட்டுக்குட்டி சொன்னார் என்று நவீன மருத்துவத்தைப் புறக்கணித்தால் தவறு நம்முடையதே .
Facebook, Whatsapp வழியாகத் தான் மருத்துவம் கற்பேன் , ஊருக்கு பரப்புவேன் என்றால் உங்கள் பிள்ளைகள் பிணத்தின் மீது ஊற்ற பால் வாங்கி தயாராய் வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment