Saturday, October 14, 2017

காம புராணக் கதைகளை கணக்கில் கொள்ளக் கூடாது, விலக்க வேண்டும் என்பதுதான் பவுத்தத்தின் உயர் பார்வை.

ஆரிய புராண மரபுப்படி பிரம்மா
படைப்புக் கடவுள். பிரம்மாவுக்கு
மூன்று மகன்கள், ஒரு மகள்
இருந்தனர்.

அவர்களில் தட்சன் என்ற
மகன், தன் உடன் பிறந்த சகோதரியை
மண்தான். இவர்களுக்குப் பிறந்த பெண்ணை,
பிரம்மாவின் இன்னொரு மகன்
மாரீசிக்குப் பிறந்த காசிபன் மணந்தான்
என்கிறது மகாபாரதம், ஆதிபருவம்.

ரிக்வேதத்தில் வரும் அண்ணன் யமன்,
தங்கை யமி பற்றிய உடலுறவு
செய்தியை ஹரிவம்சம் விவரிக்கிறது.
அது அண்ணன் தங்கை காமக் கதை.

அதே, ஹரிவம்சம், வசிட்டன் தன்
பருவம் எய்திய மகள்
சத்ரூபையையும், மனு தன் மகள்
இளையையும், ஜானு தன் மகள்
ஜானவியையும், சூரியன் தன் மகள்
உஷை யையும் மணந்ததாகச்
சொல்கிறது. இது அப்பா மகள் காமக்
கதை.

தட்சன் தன் மகளை, தன் தந்தை
பிரம்மனுக்கு மணம் முடித்தான்
என்றும், தெளசித்திரன் தன் 27
மகள்களைத் தன் அப்பனுக்கு
மணமுடித்தான் என்றும் ஹரிவம்சம்
கூறுவதைக் கேட்கிறோம். இது தாத்தா
பேத்திகளின் காமக் கதை.

ஆரியர்கள் அசுவமேத யாகம் என்ற
ஒரு யாகம் நடத்தினார்கள். அதில்
குதிரை பலி யிடப்படும். யார்
குதிரையைப் பலி கொடுக்கி றானோ,
அவனின் மனைவி, அக்குதிரையுடன்
உடலுறவு கொள்ள வேண்டும் என்பது
ஒரு கேவலமான காமத்தின்
அடையாளம்.

இன்றும் கூட சிவனுக்கும், விஷ்ணு
வுக்கும் அதாவது இரண்டு ஆண்களின்
காமத்தில் பிறந்த ஐயப்பன்
கடவுளாக்கப் பட்டுள்ள கதையை
அறிவோம்.

மக்களுக்கும் அவர்களின்
வாழ்க்கைக்கும் எவ்வகையிலும்
பயன்படாத காமக் கதைகளால் அறிவு
மயங்கும், பேதமை மேலோங்கும்.
இங்கே காமம் கடவுள் காட்சியில்,
ஆதிக்கத்தின் அடையாளமாக
மாறுகிறது. கவைக்கு உதவாத
இத்தகைய காம புராணக் கதைகளை
கணக்கில் கொள்ளக் கூடாது, விலக்க
வேண்டும் என்பதுதான் பவுத்தத்தின்
உயர் பார்வை.

Courtesy :  கீற்று

No comments:

Post a Comment