M.m. Abdulla
அதிகரித்து வரும் டெங்கு மரணங்கள் குறித்து மிக நெருங்கிய மருத்துவ நண்பர்கள் சிலரிடம் கேட்டேன். வெவ்வேறு ஊர்களில் அவர்கள் இருந்தாலும் அவர்கள் சொன்ன விசயம் ஒன்று போல உள்ளது.
"டெங்கு காய்ச்சல் துவங்கிய உடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்த யாரும் இதுவரை இறக்கவில்லை. மாறாக காய்ச்சல் வந்தவுடன் சிலர் பேச்சைக் கேட்டு நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு என வீட்டிலேயே வைத்தியம் பார்த்துவிட்டு காய்ச்சல் மூளையை தாக்கிய நிலையில் மருத்துவமனைக்கு வந்தவர்கள் மட்டுமே பெருமளவில் மரணித்து இருக்கின்றனர். காய்ச்சல் துவங்கியதும் மருத்துவமனைக்கு செல்வதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை மேற்கொள்வதும் மிக அவசியம்".
நிலவேம்பு கசாயம், பப்பாளி சாறு போன்றவை சப்போட்டிற்கு இருக்க முடியுமே தவிர அதுவே முழு மருந்தாகாது. ஆனால் இதுவே முழு மருந்து என்பது போல டுபாக்கூர் ஹீலர்களை எல்லாம் பிரபலபடுத்தி இன்றைக்கு மக்கள் சாதாரண டெங்கு ஜூரத்திற்கு எல்லாம் சாகும் நிலையை ஏற்படுத்தியதில் ஆனந்தவிகடனுக்கு பெரும் பங்கு உண்டு.
டெங்கு மரணம் என்பது டிரைலர்தான். அடுத்து கக்குவான் இருமலிலும், டிப்திரியாவிலும் கொத்து கொத்தாக மரணங்கள் வரப்போகிறது.
தமிழகத்தில் 30 சதம் பேராவது "தடுப்பூசியினால் பலன் இல்லை. ஆனால் அது ஆபத்து, சதி, அரசின் ஊழல் அல்லது மருந்து நிறுவனங்களின் லாபத்திற்காக மட்டுமே தேவையில்லாத ஆபத்தான பொருள் வழங்கப்படுகிறது" என்று ஆனந்தவிகடன் பிரபலப்படுத்திய இந்த இயற்கை வைத்திய ஹீலர் கும்பல்களால் மிக ஆழமாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இந்தப் பாவத்தை எல்லாம் எந்தக் காவேரி, கங்கையில் மூழ்கி தொலைக்கப் போகிறதோ விகடன் :(
No comments:
Post a Comment