Tuesday, October 10, 2017

கடவுள்  இல்லை என்பவர்களுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை

kuppaikani cithiraikannan
Via Facebook
2017-10-10

"கடவுள்  இல்லை என்பவர்களுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளே இல்லைன்ற பகுத்தறிவாளர்கள், இயக்கங்களெல்லாம், ஏன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடணும்ன்னு சொல்றாங்க..?", "சாமிதான் இல்லன்னு சொல்றாங்களே, அப்றம் இத பத்தி அவங்க ஏன் பேசறாங்க..?"

-- சாதி வெறியும், மத வெறியும் கொண்ட சிலர், தாங்கள் என்னவோ சாமர்த்தியமாய் பேசுவதாய் நினைத்துக் கொண்டு இப்படியொரு முட்டாள்தனமான கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.....

கடவுள் இல்லை என்றவர்கள் தான் எல்லா சாதியினருக்கும் கோவிலுக்குள் நுழையும் உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார்கள்.

கடவுள் இல்லை என்றவர்கள்தான் சாமியின் பெயரில் நரபலி கொடுக்கும் - எளியவர்களைக் கொலைசெய்யும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.

கடவுள் இல்லை என்றவர்கள்தான் பெண்களை தேவடியாக்களாய் கோவிலுக்குப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை சட்டம் போட்டு தடுத்தார்கள்...

கடவுள் இல்லை என்றவர்கள் தான் சதி என்ற பெயரில் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், தமிழ் மொழியிலும், கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் உரிமையை சட்டத்தின் அளித்தார்கள்...

கடவுள் இல்லை என்கிறவர்கள் தான், கோயில் சொத்துக்களும், நிலங்களும் கொள்ளைபோவதை தடுக்க, ஹிந்து அறநிலையத்துறையை ஏற்படுத்தி அவற்றை பாதுகாத்தார்கள்.

இப்படி ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் " கடவுள் உண்டு" என்றவர்கள், மதவெறி கொண்டு, மூர்க்கமான வெறித்தனத்துடன் அத்தனை நல்ல காரியத்தையும் எதிர்த்தார்கள்.

எல்லா சூழலிலும் அவர்கள் உச்சமாய் கத்திய ஒரு சங்கதி என்னவென்றால் "சாமி இல்லை என்பவனுக்கு எங்கள் கோவிலில் என்ன வேலை", "கடவுளை மறுக்கும் பகுத்தறிவு இயக்கங்களுக்கு இதில் என்ன அக்கறை" என்பதுதான்.

எல்லாக் கால கட்டத்திலும் இந்த மதவெறியர்களை, சாதிவெறியர்களை மீறித்தான் இதுபோன்ற  காரியங்களை, மக்கள் சமத்துவ செயல்களை, சாதித்திருக்கிறார்கள் கடவுள் மறுப்பாளர்கள். அது போலவே, முறையான பயிற்சி முடித்தவர், எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும், கோயில் அர்ச்சகர் ஆகுவதையும் சாதிப்பார்கள்.....

Vijayaraj Rti

No comments:

Post a Comment