Tuesday, October 17, 2017

நிலவேம்பு பக்க விளைவு

Ravishankar ayyakkannu
Via Facebook
2017-10-17

"சித்த மருத்துவத்தின் படி நில வேம்பு ஒரு மருந்து. இதனை மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் குறித்த காலத்திற்கு மட்டும் தர வேண்டும். சரியான அளவில் தராவிட்டால் சிலருக்கு நோய் முற்றும். சில நோயாளிகளுக்கு இதனைத் தரவே கூடாது. தீவிர டெங்கு பாதித்து நீர்ச்சத்து இல்லாமல் இருப்பவர்கள் இதனை அருந்தினால் சாவு நிச்சயம். தானே இதனைத் தயாரித்து உண்ணும் பலர் வாந்தி, பேதியுடன் என்னை அணுகி வருகிறார்கள். அன்றாடம் அருந்தினால் தீவிர பக்க விளைவுகள் வரும். இதனைத் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் தர வேண்டும். அதன் பிறகு பயன் இல்லை. '

- சொல்பவர் சித்த மருத்துவர் செல்வின், தலைவர், இந்திய சித்த மருத்துவப் பட்டதாரிகள் சங்கம்.

இந்த எச்சரிக்கையைப் போன ஆண்டு செப்டம்பர் மாதமே விடுத்திருக்கிறார். ஆனால், நம் மக்களோ அம்மன் கோயிலுக்குக் கூழ் ஊற்றுவது போலவும் கோடைக் காலத்தில் மோர் பந்தல் வைப்பது போலவும் வைத்து நிலவேம்பைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

கூகுள் செய்தாலே முதல் கட்டுரையாக வரும் இந்தத் தகவல் அரசுக்குத் தெரியாதா? தமிழக அரசைத் தவறாக வழிநடத்துபவர்கள் யார்?

https://m.timesofindia.com/city/chennai/Nilavembu-is-no-tonic-its-a-herbal-drug/articleshow/54339302.cms

//Doctors, both allopaths and siddha practitioners, however say the drug cannot be self-administered the way it is being done as it may worsen the condition of the patient if it is not given in the right dosage. "Some patients should not be taking Nilavembu Kudineer at all. It can worsen their illness," said Siddha practitioner Dr Selvin Innocent Dhas, president of Indian Siddha Medical Graduates Association. "Several patients, who self-medicated themselves with the medicine, came to me with complaints of diarrhoea and vomiting. In severe cases of dengue where patients suffer dehydration, the medicine can be deadly," Selvin said insisting that the drug should be given only under medical supervision. //

No comments:

Post a Comment