Thursday, May 3, 2018

தகுதியானவர்களுக்கே மருத்துவ சீட்..!!

Ilanchezhian Rajendran
2018-05-03

தகுதியானவர்களுக்கே மருத்துவ சீட்..!!

இதற்கு முன் தமிழகத்தில் இருந்த Eligibility Criteria , +2வில் அறிவியலில் 50% மார்க் எடுத்தால் அந்த மாணவர் Eligible. ஆனால் மருத்துவப்படிப்பு கலந்தாய்வில் இந்த 50% மார்க் பெற்ற மாணவன் கலந்துகொள்ளக்கூட முடியாது. காரணம், 99.8-95% மார்க் எடுத்த மாணவர்களே இடங்களை நிரப்பி விடுவார்கள். ஆனால் அந்த 50% மார்க் பெற்ற மாணவன் "Management seat" மூலம் சீட் "வாங்கி" உள்ளே நுழையலாம். இதை தான் "தகுதி இல்லாதவர்க்கு சீட்" என்று குறிப்பிடுகிறார்கள் சிலர்.

நீட் தேர்வுக்கு பிறகு Management seat முழுவதும் நிறுத்தப்படவில்லை, மாறாக தாங்கள் தரும் மெரிட் லிஸ்டில் உள்ள மாணவர்களுக்கே இடம் வழங்க வேண்டும். அதாவது மொத்தம் 4000 பேர் இருக்கும் அந்த லிஸ்டில், எந்த 100 பேருக்கு வேண்டுமானாலும் அந்த கல்லூரி இடம் கொடுக்கலாம்.

நன்றாக புரிந்துக்கொள்ளுங்கள் "எந்த" 100 பேருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். ரேங்க் அடிப்படையில் என்ற அவசியம் இல்லை. இப்போ அந்தக்கல்லூரி யாரால் Out of the box , donation கொடுக்க முடிகிறதோ, Fees யாரால் கட்ட முடிகிறதோ அவருக்கே இடம் வழங்கும். உதாரணம், 130 Cut Off உள்ள மாணவன் அந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கிறார், ஆனால் அவரால் 5.75லட்சம் கட்டணம் (அல்லது Illegal ஆக கேட்கப்படும் Donation amount) கட்ட முடியாவிட்டால் 110 Cut off பெற்ற காசு உள்ள அந்த மாணவர்க்கு அந்த இடத்தை வழஙக முடியும். ஏன் அவருக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தீர்கள் என்று கேட்பதற்கு Rule கிடையாது.

முன்பு Coucelling க்கு வெளியே இருந்த மாணவனை சேர்த்த நிர்வாகம், இப்போது அரசு தரும் லிஸ்டில் உள்ளவர்களில் இருந்து சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் Result என்னமோ ஒன்றுதான். காசு தான்.

நீட் தேர்ச்சி முறை 2015ம் ஆண்டு Percentage அடிப்படையில் இருந்தது. 720க்கு 320 அதாவது 50% எடுத்தால் General Category, 40%மார்க் எடுத்தால் Reserved category. ஆனால் 2016 முதல் அது percentile method ஆக மாற்றப்பட்டு விட்டது. அதாவது தேர்ச்சி பெற்றவர்கள் லிஸ்டில் 50th percentile General category மற்றும் 40th percentile Reserved Category ஆக மாற்றியமைக்கப்பட்டது.

உதாரணத்திற்கு 100 பேர் தேர்ச்சி லிஸ்டில் General category 50% மார்க் எடுக்க தேவையில்லை, முதல் மதிப்பெண் எடுத்தவரிலிருந்து 49வது ஆள் வரை உள்ளவர்கள் அதற்குள் அடஙகுவார்கள். அதாவது முதல் மாணவன் வெறும் 30% மார்க் எடுத்தாலும் அதிலிருந்து அடுத்த 50 மாணவர்களும் General categoryல் சேர்ந்து விடுவார்கள், தேர்ச்சி பெற்றவர்கள் ஆவார்கள். இதே போல் Reserved category. முதல் 60 பேருக்கு பின்னால் உள்ள 40% பேர் இதில் வருவார்கள். அவர்கள் mark limit கூட அதற்கு நிகராக மிகவும் குறையும்.

2015ஆம் ஆண்டு சேர்க்கை முறை படி 50% மார்க் (i.e 360/720) வாங்கினால் சீட் என்று இருந்தது 2016ஆம் ஆண்டு சேர்க்கை படி (145/720) எடுத்தாலே சீட் என்ற நிலமை உள்ளது. 2017ல் (130/720) என்று குறைந்து, 2018ல் இன்னும் குறையும்அபாயம் உள்ளது. அதாவது நுழைவுத்தேர்வில் 20%க்கும் குறைவாக மதிப்பெண் உள்ளவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்கும். 90th percentile என்றால் 90% மார்க் பெற்றவர் என்று அர்த்தம் கிடையாது, கீழுள்ள 90 மாணவர்களை விட அதிகம் பெற்றவர்கள் என்று மட்டுமே அர்த்தம். அது 30-40% மார்க்காகத்தான் இருக்கும்.

+2 வில் 50% மார்க் (தெளிவாக புரிந்து கொள்ளவும் 50% மார்க் percentile கிடையாது) அதாவது 100க்கு 50 எடுத்தவனே தகுதி கிடையாது என்றால் , நுழைவுத்தேர்வில் 100க்கு 20 எடுப்பவனுக்கே இன்று மருத்துவ இடம் கிடைக்கிறது. CBSE படித்து, நீட் கோச்சிங் சென்று அதே CBSEல் கேட்கப்படும் நீட் தேர்வில் கூட 40% மார்க் தான் எடுக்க முடிகிறது. இதுவா தகுதி ? இந்தளவு குறைந்த Cut Off மார்க் நிர்ணயித்ததால் தான் 10.9லட்சம் பேர் எழுதிய தேர்வில் 6.1லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

60,000 மருத்துவப்படிப்பு இடங்கள் இந்தியாவில் உள்ளன , ஏறக்குறை 1 சீட்டுக்கு 10 பேர் போட்டி போடுகின்றனர். இதில் தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் அரசுக்கல்லூரி மிகக்குறைவு. அப்போது மற்ற தனியார் கல்லூரிகளில், காசு உள்ள, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களே சேர்வார்கள்.

"+2 தேர்வில் தங்கள் Categoryக்கு ஏற்ப 99,98% மார்க் எடுத்தால் eligibility என்று இருந்த நிலமை "நீட்" தேர்வின் தவறான முறையால் தகுதி குறைந்த மாணவர்களே மருத்துவப்படிப்பில் சேர்கின்றனர்" என Baba Farid University of Health Science, Punjab துணை வேந்த்தர் Dr. ராஜ் பகதூர் கூறியுள்ளார்.

ஆகமொத்தம் தகுதியில்லாத, பணம் உள்ள மாணவர்களே பெரிதும் பயனடையக்கூடிய திட்டமே இந்த "நீட்" நுழைவுத்தேர்வு முறை. மேலும் இன்று அதை விட பெரிய திரோகமாக தமிழ்நாட்டு மாணவர்கள் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் போய் தேர்வு எழுத உத்தரவிட்டுள்ளது பாஜக மத்திய அரசு. தமிழ் மக்கள் வரிப்பணத்தில், இந்தியாவில் உள்ள சிறந்த பல்கழைகழகங்களில் இனி முழுக்க வேற்று மாநில மாணவர்கள் மட்டுமே படிக்கப்போகின்றனர். இந்த பச்சை அயோக்கியத்தனத்திற்கு துணை போயிருக்கிறது மாநில அதிமுக அடிமை அரசு. இதே நிலமை போனால் தமிழகத்தில் மாணவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிப்படும். இப்போது இதை தொடர்ந்து, பொறியியல், சட்டம் , உடற்பயிற்சி என மற்ற கல்விகளையும் கையிலெடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வெளிப்படையாக வஞ்சிக்கப்படுகிறது தமிழகம். இதற்கு மேலும் "நீட்" தேர்வுக்கோ மத்திய மாநில அரசுக்கோ சப்பைக்கட்டு கட்டினால் அவன் தான் முதல் எதிரி.அடித்து விரட்டுங்கள்.

#நீட்_ரத்து #நீட்_பித்தலாட்டம் #NEET_Fraud

// #ADMKBetraysTN #TNAgainstNEET //

No comments:

Post a Comment