Friday, May 25, 2018

இந்தியாவில் பாஜக கட்சியின் MLA உண்மை நிலவரம்

அ.முத்துகிருஷ்ணன்:

இந்தியாவில் பாஜக கட்சியின் உண்மை நிலவரம்:

நாடே காவியாகிவிட்டது போல்  வரைபடங்களை தயாரித்து மக்கள் மத்தியில் ஒரு போலியான பிம்பத்தை கட்டமைத்து சமகாலத்தில் அரசியல் கட்சிகளையும் மிரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக. இந்தியாவில் அவர்களின் உண்மை பலம் என்ன என்பதை சற்று பார்ப்போம்.

இந்தியாவின் 29 மாநிலங்களில் வெறும் 10 மாநிலங்களில் மட்டுமே பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கிறது. அதே வேளையில்

தமிழ்நாடு:   0 எம்.எல்.ஏக்கள்
சிக்கிம் : 0 எம்.எல்.ஏக்கள்
மிசோரம் : 0 எம்.எல்.ஏக்கள்

ஆந்திரா:  175ல் 4 எம்.எல்.ஏக்கள்
கேரளா: 140ல் 1 எம்.எல்.ஏ
பஞ்சாப் : 117ல் 3 எம்.எல்.ஏக்கள்
மேற்கு வங்கம் : 294ல் 3 எம்.எல்.ஏக்கள்
தெலுங்கானா : 119ல் 5 எம்.எல்.ஏக்கள்
தில்லி  : 70ல் 3 எம்.எல்.ஏக்கள்
ஒரிசா  : 147ல் 10 எம்.எல்.ஏக்கள்
நாகாலாந்து  : 60ல் 12 எம்.எல்.ஏக்கள்

கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சி
மேகாலயா  : 60ல் 2 எம்.எல்.ஏக்கள்
பிகார்  : 243ல் 53 எம்.எல்.ஏக்கள்
கோவா  : 40ல் 13 எம்.எல்.ஏக்கள்
ஜம்மு காஷ்மீர்  : 87ல் 25 எம்.எல்.ஏக்கள்

ஆக மொத்தம் 4139 சட்டமன்ற இருக்கைகளில் 1516 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பாஜகவை சேர்ந்தவர்கள், அதிலும் 950 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களின் 6 மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உபி, மத்திய பிரதேச, ராஜஸ்தானில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களே.

ஆனால் 6 மாநிலங்களை வைத்துக் கொண்டு நாடே காவிமயாகிவிட்டது என்று போட்டோஷாப்பில் ஒரு காவி இந்தியா வரைப்படத்தை சுற்றுக்குவிட்டு ஒரு போலியான மாயையை ஏற்படுத்த முயல்கிறது அமித் ஷா- மோடி கூட்டணி.

விளம்பர அரசியல் செய்யும் இவர்களின் முகமூடியை தகர்ப்போம், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் இடம் நோட்டாவுக்கு கீழ் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.....

காட்டுத்தீயாய் பகிருங்கள், செய்தியை கொண்டு சேருங்கள் உலகின் கடைக்கோடி தமிழர் வரை.....

No comments:

Post a Comment