Monday, May 7, 2018

கலைஞர் ரொம்ப மோசம்ணே ..!

ராஜ லிங்கம்
Via Facebook
2018-05-07

கலைஞர் ரொம்ப மோசம்ணே ..!

எதை வச்சிடா சொல்லுற ?

ஊழல்வாதிண்ணே ...!

ஏதாவது ஊழல் வழக்கு அவர் மேல இருக்குதாடா  ?

அதுவந்து... அதுவந்து சர்க்காரியா கமிஷனே சொல்லிருக்காம்ல ...!

சர்க்காரியா கமிஷன் தீர்ப்புல விஞ்ஞான ஊழல்னு   ஒற்றை வார்த்தை  இருந்து நீ நிரூபிச்சா கூட நான் ஒரு லட்சம் உனக்கு தறேண்டா ?

அது வந்து... அதுவந்து அவர் தமிழின துரோகிண்ணே ...!

எப்புடி ?

இலங்கையில தமிழர்களை கொல்லும் போது அவர் தடுக்கலண்ணே ...!

பெத்த மகளையே காப்பாற்ற முடியல ஆறுமாசம் திகார் ஜெயில்ல வச்சிருந்தானுவ அயல்நாட்டு போரை தடுக்க முடியும்னு நினைக்கிறியா ?

ஆதரவை வாபஸ் வாங்கிருக்கலாமேண்ணே ?

சமாஜ்வாதியும் அப்ப ஊழல் வழக்கிலே சிக்கியிருந்த மாயாவதியும் ஒவ்வொருத்தரும் திமுகவை விட அதிக சீட்டுகள் வைத்துகொண்டு ஆதரவு கொடுக்க தயாரா இருந்தனர் தெரியுமா ? ஏன்டா இந்த கேள்வியை மத்திய மந்திரியா இருந்த அன்புமனி கிட்ட எந்த நாயும் கேட்க மாட்ரீங்க. ?

அதுவந்து... அதுவந்து கலைஞருக்கு எப்புடி இவ்வளவு சொத்து வந்துச்சாம்...!?

உங்க தாத்தனுக்கு 1955 ல எவ்வளவு சம்பளம் இருக்கும்னு நினைக்கிற ?

தெரியலண்ணே அப்ப உள்ள பண மதிப்பு படி மாசம் 20 ரூபாய் இருந்திருக்கும்ணே..!

கலைஞருக்கு அப்ப ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாடா ?

தெரியலண்ணே ...!

பத்தாயிரம் ரூபாய்டா சிவாஜி எம்ஜிஆரை விட அதிகம்டா சம்பளத்தில கலைஞர் அந்தகால ஷங்கர்டா உங்க  தாத்தா மாதிரி ஆயிரம் பேர் சம்பளத்தை ஒரே ஆளா வாங்கினவருடா ...!

ஸ்பைஸ் ஜெட்டுல்லாம் ஓடுதேன்ணே ?

செருப்பால அடிப்பேன் அது தயாநிதி மாறனுடையது இருந்தாலும் கலைஞர் குடும்பத்து ஆளு அவருங்கிறதால சொல்றேன் கேளு 62 வருசத்துக்கு முன்னாடியே பத்தாயிரம் சம்பளம் வாங்கினது மட்டுமின்றி பல வெற்றி படங்களை தயாரித்த ஒருவரால் சுமார் 35 வருசத்துக்கு பிறகு ஒன்றிரண்டு கோடிகள் முதல் போட்டு சன் டிவியை தொடங்கியிருக்க முடியுமா முடியாதா  ?

முடியும்ணே ...!

தமிழகத்தின் முதல் சாட்டிலைட் டிவியான சன் டிவியை முரசொலி மாறனின் மூளையால் அன்றே ஆரம்பித்து போட்டிக்கே ஆள் இல்லாத அந்த நாளில் சன்டிவியில் கிடைத்த லாபத்தில் தமிழ் மட்டுமின்றி சூர்யா ஜெமினி உதயா என்று பல மொழிகளிலும் டிவி ஆரம்பித்தார்கள் பணம் அமோகமாக கொட்டியது முறைப்டி கணக்கு காட்டி வரி கட்டி பத்துக்கும் மேற்பட்ட சானல்களில் வந்த வருமானத்தில் தொழிலை பெருக்கினார்கள் வென்றார்கள் ஸ்பைஸ் ஜெட் பங்குகளை வாங்கினார்கள் தற்போது அதையும் விற்று விட்டார்கள் இதில் எங்கே தவறு நடந்திருக்கிறது சொல்லுடா ?  திமுகவின் பரம எதிரியாய் மாறி போன பாஜகவை முடிந்தால் ரெய்டு விட்டு தவறு நடந்திருந்தால் கண்டுபிடிக்க சொல்லுடா  ?

அதுவந்து... அதுவந்து கச்சதீவை ஏன் கொடுத்தாராம் ..?!

கச்சத்தீவு எம்ஜிஆர் ஆதரவுடன் இந்திராவால் தமிழ்நாட்டிடம் இருந்து பிடுங்கி கொடுக்க பட்டது அப்போது துடித்த கலைஞர் சட்டமன்ற தீர்மானம் போராட்டம் என பல வகையிலும் கடுமையான போராடியவர் கலைஞர் பாகிஸ்தானை அடித்து பங்ளாதேசை பிரித்து கொடுத்து புல் ஃபார்மில் இருந்த இந்திராவின் காதில் கலைஞரின் கதறல் ஏதும் விழவில்லை என்பதே உண்மை வேண்டுமானால் பல ஆதாரங்கள் உள்ளது காட்டுகிறேன்

அதுவந்து.. அதுவந்து...

என்னடா அதுவந்து இதே மாதிரி ஜெயாகிட்ட என்னைக்காவது கேடிருக்கியாடா ?

அதுவந்து ... அதுவந்து ...

என் செருப்பை இங்கதானே எங்கயோ போட்டேன். இந்தா கிடைச்சிடுச்சி ... ஏய் ஓடாதேடா நில்லு....

No comments:

Post a Comment