பிரஜாபதி
2018-05-04
ஜெ. அளவிற்கு யாருக்கும் துணிவு இல்லதான்...
1. நடிகையாக இருந்த காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டே, ஆந்திர நடிகர் சோபன்பாபுவுடன் சுமார் 7 வருடம் தனி குடித்தனம் நடத்திய துணிவு...
2. எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் இருந்த போது அப்போதைபிரதமர் ராஜிவ்க்கு "எம்.ஜி.ஆர். இனி பிழைக்க மாட்டார்... அவரை அகற்றி விட்டு என்னை பதவியில் அமர்த்துங்கள்..." என்று பகிரங்கமாக கடிதம் எழுதிய துணிவு...
3. எம்.ஜி.ஆர். மறைந்த பின் அவரின் உண்மையான மனைவியாக இருந்த ஜானகிக்கு எதிராக கட்சியை பிளவு படுத்திய துணிவு...
4. எம்.ஜி.ஆரை மோரில் விஷம் வைத்து ஜானகி தான் கொன்றார் என்று ஆணித்தரமாக சொன்ன துணிவு...
5. ராஜீவ் பிணத்தை வைத்து நாடகமாடி ஆட்சியை பிடித்த திணிவு...
6. சட்டசபையில் தன்னை மானபங்கம் செய்ய முயன்றார்கள் என்று தலைவிரி கோலமாக செய்தியாளர்களை சந்தித்த துணிவு...
7. 28 வயதில் ஒரு குழந்தையை தத்தெடுத்து, அதற்க்கு உலகமே வாயை பிளக்கும் வகையில் ஆடம்பர திருமணம் நடத்திய துணிவு...
8. 1 ரூபாய் சம்பளம் வாங்கி, கோடி கணக்கில் சொத்து சேர்த்த துணிவு...
9. அரசு நிலங்களை ஆட்டை போட்ட துணிவு...
10. நடக்கவே முடியாத ஆளுனர் சென்னாரெட்டி தன்னிடம் தவறாக நடக்க பார்த்தார் என்று சொன்ன துணிவு...
11. மாபெரும் கட்சின் தலைவர், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் கலைஞர் அவர்களை நள்ளிரவில் அடித்து கைது செய்த துணிவு...
12. ஒரே கையெழுத்தில் லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய துணிவு...
13. அதிரடி என்ற பெயரில் போராடுபவர்களை அடக்கிய துணிவு...
14. எவ்வளவு செருப்படி நீதிமன்றம் கொடுத்தாலும் எதிர் கட்சியின் மீது அவதூறு வழக்கு போடுவதை நிறுத்தாத துணிவு...
15. 100 கோடி கொள்ளை, 1000 கோடியாக அதிகரித்தும் அதை எந்த ஊடகமும் வாய்திறக்காமல் இருக்கும் படி ஊடகங்களை ஊனமாக்கிய துணிவு...
16. அதிகார, ஆணவம், பணம் என்பதை மட்டுமே துணையாக நிறுத்தி மனிதர்களை மதிக்காத துணிவு...
17. செம்பரம்பாக்கம் தண்ணீர் திறப்பாலே சென்னையில் வெள்ள சேதம் ஏற்ப்பட்டது என்று தெரிந்துமே அதை ஒரு பொருட்டாக நினைக்காத துணிவு...
18. கடந்த 5 ஆண்டுகளில் காணொளியில் மட்டுமே ஆட்சி செய்த துணிவு...
19. உலக முதலீட்டார்கள் மாநாடு என்ற பெயரில் 200 கோடி வீணடித்த துணிவு...
20. அதிலும், தன் உடன்பிறவா சகோதரியை முதல் வரிசையில் அமர செய்த துணிவு...
21. குற்றவாளி என்று சொன்ன பிறகும், தன்னை மத்தியில் இருந்து அமைச்சர்களை வரவழைத்து சந்திக்க செய்த துணிவு...
22. 5 ஆண்டுகளாக குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காமல் தன்னை தானே "காவிரி தாய்" என்று சொல்லி கொண்ட துணிவு...
23. சட்டசபையை கூத்து பட்டறை ஆக்கிய துணிவு...
24. போலீஸ் பாதுகாப்பில் டாஸ்மாக் நடத்தி தமிழகத்தின் நிதிநிலையை தூக்கி நிறுத்திய துணிவு...
25. 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை, கடந்த 5 வருடத்திலேயே 4.5 லட்சம் கோடியாக உயர்த்திய துணிவு...
இப்படி எத்தனையோ துணிவு இந்த"துணிவு வேறு யாருக்கும் இல்லை...
.
https://m.facebook.com/story.php?story_fbid=146078259574871&id=100025180920557
No comments:
Post a Comment