Friday, May 18, 2018

கருணாநிதி போரை நிறுத்த தவறி விட்டாரா?

Tholar Panther
2018-05-18

*ஈழத்தில் புலிகளின் நிலைப்பாடு சரியா?*

இது சரியா தவறா என்பதைவிட ஈழத்திற்கு அவர்களின் நிலைப்பாடு தான் அன்றைக்குத் தேவையாக இருந்தது. புலிகள் இல்லையினில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது அடிமையாக்கப்பட்டிருப்பார்கள். மயான அமைதியைவிட வெடிகுண்டுகள் சத்தங்கள் மேல்.

*பிரபாகரன்?*

தமிழீழ தேசிய தலைவர்.

*கருணாநிதி போரை நிறுத்த தவறி விட்டாரா?*

உலக நாடுகள் ஒன்றிணைந்து நடத்திய போரை தடுக்கக்கூடிய அல்லது நிறுத்தக்கூடிய ஆற்றலோ, அதிகாரமோ கலைஞருக்கு இல்லை. அவர் வெறும் தமிழ் நாட்டின் முதல்வர்.

*கருணாநிதி ராஜினாமா செய்திருந்தால்?*

தி,மு,க விற்குப் பதிலாக வேறு ஒரு கட்சி ஆதரவு அளித்திருக்கும், மூன்றாவது முறையாகக் கலைஞரின் ஆட்சி ஈழ பிரச்சனைக்காகக் கலைக்கப் பட்டிருக்கலாம். ஒருபோதும் போர் நின்றிருக்காது.

*தமிழ் நாட்டு அரசியலில் ஈழத்தின் பங்கு?*

தமிழ் நாட்டு அரசியலில் ஈழம் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை அப்படி நடந்திருந்தால் வைகோ எப்பொழுதோ முதல்வர் ஆகியிருக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டுக் கலைஞரின் மீது கடுமையான எதிர்ப்பும் விமர்சனமும் இருந்தது ஆனால் 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க தான் அதிக இடங்களில் வெற்றிப் பெற்றது. பிரபாகரனை தூக்கில் ஏற்றவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஜெயலலிதா தான் 2011 ஆம் ஆண்டு வெற்றிபெற்று முதல்வர் ஆனார்.

*ஈழ விவாகரத்தில் தி.மு.க Vs அ.தி.மு.க ஒப்பீடு?*

ஈழத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிக்கும் பெரிய வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரே வேறுபாடு என்னவென்றால் ஈழம் குறித்தான போராட்டங்களுக்கு அனுமதி வாங்குவது அ.தி.மு.க ஆட்சியில் மிகக் கடினம் , தி.மு.க ஆட்சியில் எளிது.

*தனி ஈழம்?*

தனி ஈழம் புலிகளின் தாகம் மட்டுமல்ல அது தான் ஈழ தமிழர்களின் தேவையாகவும் நான் கருதுகிறேன்.

*மீண்டும் ஆயுத போராட்டம் எழுமா?*

இன்றைய உலக அரசியல் சூழலை பொறுத்தவரை அதற்க்கு வாய்ப்பேயில்லை. அரசியல் போராட்டங்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தை மூலமாகவும் தான் ஈழத்தை முன்னெடுக்க வேண்டும்.

*தனித் தமிழ்நாடு?*

காமிக்ஸ் கதைக்களம்.

*ஈழத்தில் தமிழ் நாட்டு தமிழர்களின் பங்கு?*

மீண்டும் பிரபாகரன் வருவார் புலிகள் எழுவார்கள் போன்ற பாண்டஸி கதைகளைப் பரப்பாமல் இருப்பதே ஈழத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.

இறந்தோரை நினைப்போம் ! இருப்போரை காப்போம் !

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !

https://m.facebook.com/story.php?story_fbid=1798228753533298&id=100000385732826

No comments:

Post a Comment