Chidambaram Periyasami
Via Facebook
2018-05-09
இஸ்லாம் பிற்போக்கான மதம் ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மதம் இல்லை
உலகில் கடவுள் மறுப்பு பேசுபவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் நாடுகள் 13 இவை அனைத்தும் இஸ்லாம் நாடுகள் தான்
மதச்சார்பற்ற நாடு என்று பேசும் இந்தியாவில் கூட இஸ்லாம் பெரும்பான்மை என்றால் இந்த நிலை மாறி இஸ்லாம் நாடு என்கிற அறிவிப்பு வந்து விடும்
கடவுள் மறுப்பு பேசினால் மரண தண்டனை என்று அறிவித்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை
முற்போக்கு மண்ணாங்கட்டி என்று பேசும் முஸ்லிம்களிடம் கூட பர்தா தலாக் என்று ஆரம்பித்தால் அதற்கு அவர்கள் கொடுக்கும் முட்டு முதுகுநூல் போடுவதற்கு கொடுக்கும் விளக்கத்தை மிஞ்சி விடும்
லட்சக்கணக்கான மக்களைக் கொன்ற சைக்கோ கொலைகாரனான இடி அமீனுக்கு சவுதி 20 ஆண்டுகள் அடைக்கலம் கொடுத்து தண்டச்சோறு போட்டதற்கு ஒரே காரணம் அமீன் உகாண்டாவை இஸ்லாம் நாடாக அறிவித்தது தான்
இது ஒரு புறம் இருக்கட்டும் பிறகு இஸ்லாமில் என்ன வித்தியாசம்
ஒரு உதாரணம் பார்ப்போம்
பட்டியலின இளைஞரும் இடைநிலை ஜாதிப் பெண்ணும் காதலித்தால் அது பெரும்பாலும் கொலை வரை சென்று முடியும் காரணம் இதனால் தன் குடும்ப மானமே போனதாக அந்தப் பெண்ணின் குடும்பம் நினைக்கும்
இதே முஸ்லிம் இளைஞர் இடைநிலை ஜாதிப் பெண் என்றால் என்ன நடக்கும் இப்போது திருமணத்திற்கு இஸ்லாம் மதம் மாறச் சொல்லி நிபந்தனை வரும்
முஸ்லிம்கள் மதம் மாறச் சொல்லி நிபந்தனை விதிப்பது போல் ஏன் வேற்று ஜாதி காதல் திருமணம் என்று வந்தால் ஜாதி மாறச் சொல்லி நிபந்தனை விதிக்க முடியாது
அப்படி ஜாதி மாற முடியாது காரணம் ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றம் அல்லது இழிவு என்பதை இந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள்
சுருக்கமா சொன்னா பிறப்பால் ஜாதி வைத்து மாற முடியாத இழிவை ஏற்படுத்துவது இந்து மதம் பிறப்பை புறம் தள்ளி இஸ்லாம் மதம் மாற்றம் ஒருவருடைய வாழ்க்கையை புனிதப்படுத்தி விடும் என்பது இஸ்லாமியர்கள் நம்பிக்கை
100 சம்பவங்கள் இடைநிலை ஜாதியினரால் பட்டியலின ஜாதியினர் மீது வன்முறைத் தாக்குதல் நடக்கும் போது ஒன்றோ அல்லது இரண்டோ இஸ்லாம் முட்டாள்களால் தலித் மக்கள் மீதான தாக்குதலும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது
இந்த சமயத்தில் இந்துத்வா அபிமானிகள் அன்று பொங்கிய பெரியாரிஸ்ட்டுகள் இன்று பேசாதது ஏன் என்று கேட்பதன் பொருள் தலித் மக்கள் மீதான பாசமல்ல மாறாக நாங்க அடிக்கும் போது பொத்திட்டு இரு என்பதே
இத்தனையும் தாண்டி ஒரு உண்மை என்னவென்றால் இதே தலித் மக்கள் இஸ்லாம் மாறினால் அடுத்த இரு தலைமுறைகளிலையே தனது தலித் அடையாளம் மாறி இஸ்லாம் என்கிற பொது அடையாளத்திற்கு வந்து விட முடியும்
ஆனால் இந்து மதத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை காரணம் அதன் அடிப்படையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு என்பது தான்
ஆனால் இஸ்லாம் பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மதம் கிடையாது மாறாக தன் மதக் கோட்பாடுகளை கண்ணை மூடிக் கொண்டு முட்டுக் கொடுக்கும் பிற்போக்குத்தனமான மக்களைக் கொண்ட மதம்
இஸ்லாம் பிற்போக்கான மதம் ஆனால் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட மதம் இல்லை
https://m.facebook.com/story.php?story_fbid=2024327934522659&id=100008364167833
No comments:
Post a Comment